ஜாலியோ ஜிம்கானா விமர்சனம்.. லாஜிக் இல்லா ஜாலி

ஜாலியோ ஜிம்கானா விமர்சனம்.. லாஜிக் இல்லா ஜாலி

 

 

ஜாலியோ ஜிம்கானா விமர்சனம்.. லாஜிக் இல்லா ஜாலி

 

30 வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசன் தயாரிப்பில் ரேவதி, ஊர்வசி, நாகேஷ் உள்ளிட்டோர் நடித்த ‘மகளிர் மட்டும்’ பட பாணியில் இன்றைய 2Kகிட்ஸ் களுக்காக வந்திருக்கும் படம் தான் இந்த ‘ஜாலியோ ஜிம்கானா’

படம் தொடங்கும்போதே வாய்ஸ் ஓவரில் எந்த லாஜிக்கும் பார்க்காதீர்கள்.. ஜாலியா பார்த்து என்ஜாய் பண்ணுங்க என்று இயக்குனர் சக்தி சிதம்பரம் சொல்லி இருப்பதால் அந்த பாணியில் விமர்சனத்தை தொடர்வோம்..

ஸ்டோரி…

ஒய் ஜி மகேந்திரன் அவரது மகள் அபிராமி.. அவரது மகள் மடோனா.. மடோனாவுக்கு 2 தங்கைகள்.. இவர்கள் அனைவரும் வெள்ளைக்காரன் பிரியாணி என்ற பெயரில் கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருகின்றனர்.

அந்த தொகுதி எம்.எல்.ஏ மதுசூதனன் அவரின் விழாவுக்காக பெரிய பார்ட்டி ஆர்டர் ஒன்றைக் கொடுக்கிறார்.. அட்வான்ஸ் எதையும் வாங்காமல் விருந்து கொடுத்து விட்ட பிறகு பணம் தர மறுக்கிறார் எம்எல்ஏ.. மேலும் பணத்தை கேட்ட தகராறில் ஒய் ஜி மகேந்திரனை அடித்து விடுகின்றனர்.

இந்த விருந்துக்காக 2 1/2 லட்சத்தை இழந்த இந்த குடும்பம் வேறு வழியின்றி வக்கீல் பிரபுதேவாவை நாடுகின்றனர்.. அவரைப் பார்க்க ஒரு ஹோட்டலுக்கு செல்லும் போது அவர் அங்கே கொலை செய்யப்பட்டு கிடப்பதை அறிகின்றனர். அங்கிருந்து தப்பிப்பதற்குள் இவர்கள் மீது கொலை பழி விழுகிறது.

அதிலிருந்து தப்பிக்க பிரபுதேவா பிணத்துடன் லாட்ஜில் இருந்து நால்வர் வெளியே வருகின்றனர்.. அதன் பின்னர் சடலத்தை வைத்து இவர்கள் செய்யும் காமெடி கலாட்டாக்கள் தான் மீதிக்கதை.

 

கேரக்டர்ஸ்…

பாவமன்னிப்பு கேட்க சர்ச் பாதர்-ஆக இருக்கும் யோகிபாபு உடன் கதை சொல்ல ஆரம்பிக்கிறார் மடோனா.. படம் எப்போது முடியும் கதை எப்படி நீளும் என்று நாம் நினைத்துக் கொண்டே இருக்கையில் யோகி பாபுவே அந்த கேள்வியை கேட்டு ரசிகர்களின் மனநிலையை புரிந்து கொள்கிறார்.

என்னதான் அபிராமி மடோனாவுக்கு அம்மா என்றாலும் அவர் அக்கா போலவே இருக்கிறார்.. அதையும் வாய்ஸ் ஓவரில் சொல்லிவிட்டார் இயக்குனர்.

யோகி பாபுவின் காமெடி கொஞ்சம் ரசிக்க வைக்கிறது.. என்னதான் லாஜிக் பார்க்க கூடாது என்ற சொன்னாலும் யோகி பாபு வழக்கமாக தன் கையில் கட்டி இருக்கும் இந்து மத கலர் கயிறுகளை ஒரு சர்ச் பாதிரியார் கேரக்டருக்காக மறைத்து இருக்கலாம்.

யோகிபாபு, ரோபோ சங்கர், கல்லூரி வினோத், சாய் தீனா, ரெடிங்க்ஸ்லி என பலர் இருந்தாலும் காமெடிக்கு பஞ்சமே.

தன்னாலும் காமெடி செய்ய முடியும் என கலகலப்பு ஊட்டி இருக்கிறார் அபிராமி.. அழகு பொம்மையாக கவர்கிறார் மடோனா செபாஸ்டின்.. 2 மணி நேரமும் பிணமாக நடித்த பிரபுதேவா நிச்சயம் பாராட்டலாம்..

பிணமாக இருக்கும் பிரபுதேவாவை இயங்க வைப்பதற்காகவே மடோனா மற்றும் அவரது தங்கை கேரக்டர்கள் வடிவமைக்கப்பட்டது செயற்கையாக தெரிகிறது..

டெக்னீசியன்ஸ்…

‘போலீஸ்காரனை கட்டிக்கிட்டா லத்தியால் அடிப்பான்….’ என்ற பாடல் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.. ஜெகன் கவிராஜ் எழுதிய இந்த பாடல் இனி இளசுகளின் காலர் டியூனாக மாறும்.. பாடல் ஆசிரியர் ஜெகனும் இந்த படத்தில் ஜாலியான ஜாதி ராஜாவாக நடித்திருக்கிறார்..

சார்லி சாப்ளின் & மகா நடிகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய சக்தி சிதம்பரம் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். எந்த லாஜிக்கும் பார்க்காமல் இந்த படத்தை நீங்கள் ரசிக்க தோன்றினால் ரசிக்கலாம்..

ஆக JollyOJimkhana.. லாஜிக் இல்லா ஜாலி

Jolly O Jimkhana movie review