‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ விமர்சனம்
‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ விமர்சனம்
ஸ்டோரி…
சினிமாவில் உதவி இயக்குனராக இருக்கிறார் அசோக் செல்வன்.. இவரது இயக்குனர் இயக்கிய ‘காண்டாமிருகம்’ படத்தை திட்டாத ரசிகர்களே தமிழ்நாட்டில் இல்லை.. இதனால் தங்கள் படம் என கூட வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறார் அசோக் செல்வன்.
இந்த சூழ்நிலையில் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை புரியும் அவந்திகா மிஷ்ராவை கண்டதும் காதலிக்க தொடங்குகிறார். அவந்திகாவும் காதலிக்கிறார்..
ஒரு கட்டத்தில் அசோக் தோழி கர்ப்பிணி ஆகிறார்.. ஆனால் அவரது காதலனோ அமெரிக்காவில் இருக்கிறார்.
இதனால் அசோக் செல்வன் மீது சந்தேகம் கொள்கிறார் நாயகி அவந்திகா.. அதை மறைக்க ஒரு பொய்யை சொல்லி மீண்டும் மற்றொரு பிரச்சினை சிக்கிக் கொள்கிறார் நாயகன் அசோக்.
அதன் பிறகு என்ன ஆனது? என்பதெல்லாம் படத்தின் மீதிக்கதை..

கேரக்டர்ஸ் & டெக்னீசியன்ஸ்…
Starring : Ashok Selvan, Avantika Mishra, oorvasi, Azhagam Perumal, M.S.Bhaskar, Bagavathi Perumal, Badava Gopi
ஜாலியான ரொமான்டிக் பையனாக கவர்கிறார் அசோக் செல்வன்.. இவருக்கும் அவந்திக்காவுக்கும் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.. முக்கியமாக பாடல் காட்சியில் நெருக்கமாகி ரசிக்க வைக்கின்றனர்..
எப்போதும் டென்ஷன் பேர் வழியாக அழகம்பெருமாள்..
அசோக் செல்வனின் அக்கா குழந்தைகள் இருவர் ரசிக்க வைக்கின்றனர்.. நடிப்பில் கவர்கின்றனர்.. சிரிப்புக்கு நான் கேரண்டி என ஊர்வசியும் கவர்கிறார்.. பகவதி பெருமாள், எம் எஸ் பாஸ்கர், படவா கோபி உள்ளிட்டோர் கதைக்கு உதவி இருக்கின்றனர்..
Writer – Director : Balaji Kesavan
Music Director : Nivas K Prasanna
Director of Photography : Ganesh Chandra
Editor : I.Jerome Alen
Art Director : S. Jayachandran
Lyric Writer : Mohan Rajan
Choreographer : Dastha
PRO : Sathish AIM
Produced by : M.Thirumalai
VFX Producer : Narreshkumar babu
நிவாஸ் கே பிரசன்னாவில் பாடல்கள் ரசிக்க வைக்கிறது.. கணேஷ் சந்திரனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்..
பக்கத்து வீட்டு பையன்.. வழக்கமான சேட்டைகள்.. பெண்கள் பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் பையன் என வழக்கமான கதையை சொல்லி இருக்கிறார் இயக்குனர் பாலாஜி கேசவன்..
வழக்கமான கதையாக இருந்தாலும் திருப்புமுனை வைத்து சொல்லி இருந்தால் இந்த படத்தை இன்னும் ரசித்திருக்கலாம்.
Emakku Thozhil Romance Review

