இந்திரா விமர்சனம்.. வசந்த் ரவிக்கு வசந்தமே..

இந்திரா விமர்சனம்.. வசந்த் ரவிக்கு வசந்தமே..

 

இந்திரா விமர்சனம்.. வசந்த் ரவிக்கு வசந்தமே..

 

ஸ்டோரி…

போலீஸ் வசந்த் ரவி ஒரு விபத்து காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்.. இந்த சூழ்நிலையில் விரக்தியால் அதிகமாக மது அருந்துகிறார்..

இதனால் கண் பார்வையை இழக்கிறார்.. அந்த சமயத்தில் இவர்கள் பகுதியில் தொடர் கொலைகள் நடக்கிறது.. இதை சீரியல் கில்லர் சுனில் செய்து வருகிறார்.. அதை பாணியில் வசந்த் மனைவி மெஹ்ரினும் கொல்லப்படுகிறார்..

ஒரு கட்டத்தில் கொலையாளி சுனிலை கண்டுபிடித்து விடுகிறார் வசந்த ரவி..

அப்போது போலீஸ் கல்யாண் குமார் விசாரணை செய்து கொண்டிருக்கையில் 28 பேரைக் கொன்றது நான் தான்.. ஆனால் மெஹ்ரினை நான் கொல்லவில்லை என்கிறார்.. அப்படி என்றால் அவரை கொன்றது யார்.? கொலைக்கான காரணம் என்ன.? என்பதுதான் படத்தின் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

ரஜினியின் ஜெய்லர் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் வசந்த ரவி.. இதிலும் போலீசாக மிடுக்காக வருகிறார்.. படம் முழுவதும் இவர் சீரியஸாக இருப்பது ஏனோ.. ரொமான்ஸிலும் மெச்சூரிட்டி போதவில்லை..

கண் பார்வையற்றவராக கண்ணாடி அணியாமல் அசத்தலான நடிப்பை கொடுத்திருக்கிறார்..

அழகாலும் சிரிப்பாலும் ரசிகர்களை வசீகரம் செய்கிறார் மெஹ்ரின் பிர்சாடா.. நாயகனை லிப் கிஸ் அடித்து நம்மை சூடேற்றுகிறார்..

சுனிலின் வில்லத்தனம் மிரட்டல்..

அழகு அனிகா சுரேந்திரன்.. காதலனடமிருந்து தாலி வாங்கும் காட்சியில் ரசிக்க வைக்கிறார்.. காதலனாக நடித்தவரும் மிரட்டல் நடிப்பு.. ஆனால் இவர்களுக்கு ஜோடி பொருத்தம் செட்டாகவில்லை..

போலீஸ் கல்யாண்குமார், பிரண்ட் ராஜ்குமார் உள்ளிட்டோர் நடிப்பு நேர்த்தி..

டெக்னீசியன்ஸ்…

பிரபு ராகவ்வின் ஒளிப்பதிவும், அஜ்மல் தஸ்சினின் இசையும் அருமை.. சில இடங்களில் வசனங்களை மீறி இசை வருவதை குறைத்து இருக்கலாம்..

விறுவிறுப்பான திரில்லர் கதை.. யூகிக்க முடியாத கிளைமாக்ஸ் படத்தின் பலம்.

இயக்குனர் சபரீஷ் நந்தா.. முதல் படத்திலேயே சபாஷ் பெறுகிறார்..

Indra movie review