நான் கிறிஸ்தவன் தான்.. இதை சொன்னா சங்கிகளுக்கு வயிறு எரிச்சல்.. – உதயநிதி
நான் கிறிஸ்டியன் தான்.. இதை சொன்னா சங்கிகளுக்கு வயிறு எரிச்சல்.. – உதயநிதி
கோவையில் எஸ்.பி.சி., பெந்தெகொஸ்தே சார்பில் கிறிஸ்து பிறப்பு விழா நடைபெற்றது. இதில், துணை முதல்வர் உதயநிதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது…
இந்த உலகை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விழா என்றால் அது கிறிஸ்துமஸ் தான்.. அந்தப் பண்டிகை வந்தாலே எனக்கு கூடுதல் மகிழ்ச்சி..
நான் படிச்ச பள்ளி டான் பாஸ்கோ.. காலேஜ் லயோலா… சென்ற ஆண்டு ஒரு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ‘நானும் ஒரு கிறிஸ்டியன் தான்’ என பெருமையாக சொன்னேன். உடனே பல சங்கிகளுக்கு அது வயிற்று எரிச்சல்.
நான் இப்போது மீண்டும் இங்கு சொல்லிக்கொள்கிறேன்.. நான் ஒரு கிறிஸ்டியன் என்று சொல்வதில் பெருமை..
‘நீங்க என்ன கிறிஸ்தவனு நினைச்சா கிறிஸ்தவன், முஸ்லீம்னு நினைச்சா முஸ்லீம் , இந்துனு நினைச்சா இந்து; நான் எல்லாருக்கும் பொதுவானவன் தான்.
எல்லா மதங்களின் அடிப்படை அன்பு தான். எல்லோர் மீதும் அன்பு செலுத்த வேண்டும் என்று தான் எல்லா மதங்களும் சொல்கின்றன” என பேசினார் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி..
Im Christian says Deputy Chief Minister Udhayanidhi

