Identity ஐடென்ட்டி திரை விமர்சனம்..

Identity ஐடென்ட்டி திரை விமர்சனம்..

 

Identity ஐடென்ட்டி திரை விமர்சனம்..

ஸ்டோரி…

பிரபலமான துணிக்கடையில் பெண்கள் உடை மாற்றும் முறையில் கேமரா வைத்து பெண்களை ஆபாச படம் எடுக்கும் ஒரு ஆசாமியை கொலை செய்கிறார் மர்ம நபர்.. அவரைப் பார்த்து விடுகிறார் நாயகி த்ரிஷா.

இந்த வழக்கை விசாரிக்கும் காவல் ஆய்வாளர் அலன் (வினய்).. நடிகர் ரஜினிகாந்தை கூட யார் என்று தெரியாத Face Blindness என்னும் நோயால் பாதிக்கப்பட்டவர் திரிஷா.. ஆனாலும் இவர் அந்த கொலையாளியின் முகத்தை சொல்ல சொல்ல போலீசுக்கு உதவியாக வரைந்து கொடுக்கிறார் நாயகன் டோவினோ தாமஸ்.

கிட்டத்தட்ட வரையப்பட்ட கொலையாளியின் முகமும் வரையும் ஓவியர் டோவினோவின் முகமும் ஒரே சாயலில் இருப்பதால் நாயகன் மீது போலீஸ் சந்தேக பார்வை திரும்புகிறது.

அப்படி என்றால் கொலையாளி யார்? டோவினோ தாமஸ் தான் கொலை செய்தாரா? ஆனால் டோமினோவை த்ரிஷா அடையாளம் காட்டவில்லை? உண்மையான குற்றவாளி இவர்தான் என்றால் அவர் நேரில் காண்பித்திருக்கலாம்.? மாற்றாக வரைய சொன்னதன் காரணம் என்ன?பின்னணியில் நடப்பது எல்லாம் மீதி கதை..

கேரக்டர்ஸ் & டெக்னீசியன்ஸ்…

கண்ணில் காந்த பார்வை கொண்டு ஸ்டைலிஷ் அதகளம் செய்து இருக்கிறார் டோவினோ.. கிளைமாக்ஸ் இல் வரும் விமான சண்டைக் காட்சி எந்தப் படத்திலும் பார்த்திடாத ஃபயர் சீன்.. கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டாலும் படத்தில் ஏதும் தெரியாத அளவிற்கு படமாக்கி இருக்கின்றனர்..

வெறுமனே நாயகி டூயட் ரொமான்ஸ் என்று இல்லாமல் கதையை நகர்த்தி செல்லும் கதாபாத்திரமாக தன் கேரக்டரை வலுப்படுத்தி இருக்கிற அலிஷாவாக நடித்துள்ளார் த்ரிஷா..

வினய் கேரக்டர் எதிர்பாராத ஒன்று.. முதலில் அப்பாவி நடிப்பில்.. பின்னர் அதிர வைக்கும் நடிப்பு என மிரட்டி இருக்கிறார்..

இவர்களுடன் ஷம்மி திலகன், அஜு வர்கீஸ், அர்ச்சனா ரவி, கோபிகா ரமேஷ் ஆகியோர் கதை ஓட்டத்திற்கு தங்களது கேரக்டரை நியாயப்படுத்தி இருக்கின்றனர்..

இன்வெஸ்டிகேஷன் திரில்லரை ஸ்டைலிஷ் ஆக பிரம்மாண்டமாக கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அகில் ஜார்ஜ்..

சமன் சாக்கோவின் படத்தொகுப்பு செய்ய ஜேக்ஸ் பிஜோய் பின்னணி இசை அமைத்திருக்கிறார்.. இவர் த்ரில்லருக்கான அனுபவத்தை தன் இசையில் தெறிக்க விட்டுள்ளார்..

இடைவேளையில் வெளியே செல்லும் நபர் திடீரென உள்ளே நுழைந்தால் அட இடைவெளிக்கு முன்பு வேறு கதை இது வேறுபடமா? என்று கன்பியூசன் ஆகும் அளவிற்கு பல கிளை கதைகளை கொடுத்து இருக்கின்றனர் இயக்குனர்கள்.

டோவினோ த்ரிஷா வினய் இம்மூவருக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை பேசியிருக்கிறது ‘ஐடென்டிட்டி’.. அதை இயக்குநர்கள் அகில் பால் மற்றும் அனாஸ் பால் திரைக்கதை மூலம் பிரம்மாண்டமாக சில லாஜிக் மீறல்களுடன் சொல்லி இருக்கின்றனர்..

முதலில் குற்றவாளியை வரையும் ஓவியர் என்று அறியப்பட்ட கேரக்டர் பின்னர் அதிரடியாக வேறொரு தளத்திற்கு மாறுவதும்.. போலீஸ் கேரக்டர் பின்னர் அதிரடியாக மாறுவதும் எதிர்பாராத ட்விஸ்ட்.. அனைத்தும் அருமை..

Identity movie review