அஜித்துடன் தனுஷ் மோதலாமா.? ரஜினியுடன் அஜித் – விஜய் மோதலையா? ரசிகர்கள் கமெண்ட்.!

அஜித்துடன் தனுஷ் மோதலாமா.? ரஜினியுடன் அஜித் – விஜய் மோதலையா? ரசிகர்கள் கமெண்ட்.!

 

 

அஜித்துடன் தனுஷ் மோதலாமா.? ரஜினியுடன் அஜித் – விஜய் மோதலையா? ரசிகர்கள் கமெண்ட்.!

 

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 10 தேதி அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ என்ற படமும் தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ என்ற படமும் மோத உள்ளன.. அது பற்றி விவரங்கள் இதோ

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

அதே ஏப்ரல் 10 ஆம் தேதி தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படம் வெளியாகவுள்ளது. இது தனுஷின் 52-வது திரைப்படமாகும். நித்யா மேனன், ராஜ் கிரண் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது..

(அஜித் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கும் முன்பே தனுஷின் இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.)

அஜித் பெரிய நடிகர் அவருடன் (படத்துடன்) தனுஷ் மோதுவதா என சில ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.. இந்த சூழ்நிலையில் ரஜினியின் ‘சந்திரமுகி’ படத்துடன் விஜய்யின் ‘சச்சின்’ மற்றும் ரஜினியின் ‘பேட்ட’ படத்துடன் அஜித்தின் ‘விஸ்வாசம்’ ஆகிய படங்கள் மோதவில்லையா? அதுபோலத்தான் இதுவும் என மற்ற ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

 

Ajith Good Bad ugly clash with Dhanush Idly Kadai