ஹவுஸ் மேட்ஸ் விமர்சனம் 4/5.. திரில்லர் டைம் ட்ராவலில் எமோஷனல் மேட்ஸ்

ஹவுஸ் மேட்ஸ் விமர்சனம் 4/5.. திரில்லர் டைம் ட்ராவலில் எமோஷனல் மேட்ஸ்

ஹவுஸ் மேட்ஸ் விமர்சனம் 4/5.. திரில்லர் டைம் ட்ராவலில் எமோஷனல் மேட்ஸ்

 

 

ஸ்டோரி…

சென்னையில் உள்ள அப்பார்ட்மெண்டில் ஒரு பழைய வீட்டை விலைக்கு வாங்குகிறார் தர்ஷன்.. இவரது மனைவி அர்ஷா பைஜு.. அர்ஷா மட்டும் தனியாக வீட்டில் இருக்கும் போது சில அமானுஷ்யங்கள் நடைபெறுவதால் பயம் கொள்கிறார்.. இதனை கணவரிடம் தெரிவித்தாலும் முதலில் மறுக்கும் அவர் பின்னர் அவரும் அமானுஷ்யங்களை உணர்கிறார்..

ஒரு கட்டத்தில் அந்த பேய் இடம் பேசும்போது இவருக்கு சில தகவல்கள் தெரிகிறது.. அதாவது இந்த வீட்டில் 2012 ஆம் ஆண்டில் காளி வெங்கட் & வினோதினி குடும்பம் அங்கு வசித்ததாகவும் தெரிய வருகிறது.. இவர்கள் வசிக்கும் ஆண்டு 2022..

இந்தப் பத்தாண்டு இடைவெளி சம்பவங்களை ஒன்றோடு ஒன்றாக கலந்து அதற்கு புதுமையான திரைக்கதை அமைத்து வித்தியாசமான கிளைமாக்ஸ் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.. அது என்ன என்பதுதான் படத்தின் ஹைலைட்..

கேரக்டர்ஸ்…

தர்ஷன் – கதாநாயகன்.. காளி வெங்கட் – கதையின் நாயகன்

ரொமான்டிக் ஹீரோ என டூயட் பாடாமல் ஒரு குடும்ப ஹாரர் கதையில் தன் நடிப்பு திறமையை தாராளமாக கொடுத்திருக்கிறார் தர்ஷன்..

மலையாளத்தில் பிரபலமான ஹர்ஷா பைஜூ நாயகி.. அமானுஷ்யங்களை கண்டு பயப்படும்போது நம்மையும் பதப்பதைக்க வைக்கிறார்… இவருக்கு டப்பிங் கொடுத்தவரும் கேரக்டருக்கு உயிரோட்டம் கொடுத்திருக்கிறார்..

காளி வெங்கட் மற்றும் வினோதினி.. காமெடியான நடிப்பையும் கலங்க வைக்கும் நடிப்பையும் கொடுத்துள்ளனர்.. பாசம் பயம் பதட்டம் என ஒவ்வொன்றையும் ரசிக்கத்தக்க வகையில் கொடுத்துள்ளனர்..

தீனா, அப்துல் லீ, மாஸ்டர் ஹென்ரிக் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

டெக்னீசியன்ஸ்…

எம்.எஸ்.சதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ராஜேஷ் முருகன் இசை அமைத்துள்ளார்..

பிரேமம் படத்திற்கு இசையமைத்தவர் தான் இவர் இந்த படத்தில் மின்னாளி என்ற பாடல் ரசிக்க வைக்கிறது..

பிளேஸ்மித் ஸ்டூடியோஸ் சார்பில் எஸ்.விஜயபிரகாஷ் தயாரித்துள்ளார், டி.ராஜவேல் இயக்கி உள்ளார்.

இயக்குனரின் அறிமுகப்படம் என்றாலும் ஒவ்வொரு காட்சியிலும் மெச்சூரிட்டியான ஸ்கிரீன் ப்ளே கொடுத்திருக்கிறார்.. கதைக்கு பொருத்தமான கலைஞர்களை தேர்ந்தெடுத்து இருப்பது ஹவுஸ் மேட்சுக்கு கூடுதல் பலம்..

இந்தக் கதை நம்புற மாதிரி இல்லையே என நினைத்தாலும் அதற்கான சயின்ஸ் பிக்சன் விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார் இயக்குனர்..

ஒரே வீட்டில் இரு குடும்பங்கள்.. வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் கதை.. ஒவ்வொன்றும் எப்படி நடக்கிறது என்பதை திரையில் இரண்டாகப் பிரித்து காமெடி கலந்து சொல்லியிருப்பது டைரக்டரின் புத்திசாலித்தனம்..

இந்தப் படத்தை தன்னுடைய எஸ் கே ப்ரொடக்சன் நிறுவனம் சார்பாக சிவகார்த்திகேயன் வெளியிட்டு இந்த படத்தின் கவனத்தை ரசிகர்களிடம் பெற வைத்து விட்டார்..

 

Housemates movie review