அக்யூஸ்ட் விமர்சனம் 3.5/5.. தீர்ப்பு வழங்கிய காத(வ)லர்
அக்யூஸ்ட் விமர்சனம் 3.5/5.. தீர்ப்பு வழங்கிய காத(வ)லர்
ஸ்டோரி…
கொலை குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட உதயாவை கோர்ட்டில் ஆஜர் படுத்த கான்ஸ்டபிள் அஜ்மல் சில அதிகாரிகளுடன் போலீஸ் வேனில் செல்கிறார்.. அப்போது எதிர்பாராத விதமாக வேன் பழுதாகி நிற்கவே வேறு வழியின்றி பேருந்தில் பயணிக்கின்றனர்..
அப்போது உதயாவை போட்டுத் தள்ள சில ரவுடி கும்பல் அந்த பஸ்ஸில் பயணிக்கின்றனர்.. இவையில்லாமல் அரசியல்வாதிகளின் அதிகாரத்தால் போலீஸ் கும்பலும் உதயாவை என்கவுண்டர் செய்ய திட்டமிடுகிறது..
இதனை அறிந்து கொள்ளும் அஜ்மல் ஒரு கட்டத்தில் உதயாவை காப்பாற்ற போராடுகிறார்.. இறுதியில் என்ன ஆனது.? குற்றவாளியை கோர்ட்டில் ஆஜர் படுத்தினாரா? போலீஸ் தரப்பும் ரவுடி கும்பலும் துரத்துவது ஏன்.? இதற்குப் பின்னணியில் நடந்தது என்ன என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்….
Udhaya – Kanakku
Ajmal – Vendhan
Yogi Babu – Rama Naidu
Jhanvika Kalakeri – Malar
Shantika – Darshini
Pawan – Gunasekar
Daya paneer Selvam – Nagaraj
Sridhar – Dhanasekar
Prabhu Srinivas – AC Saravanan
Prabhu Solomon – Judge
Subhadra – Gunasekaran wife
Amma creation T Siva – Minister
வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருந்த நடிகர் உதயாவுக்கு ‘அக்யூஸ்ட்’ வெற்றி உறுதி..
பொதுவாக குற்ற செயல்களில் ஈடுபடும் நாயகனுக்கு எல்லா தமிழ் படங்களிலும் ஒரு நண்பர் இருப்பார்.. ஆனால் இதில் துணை எதுவும் இல்லாமல் ஒற்றை ஆளாகவே கேரக்டரை சுமந்திருக்கிறார் உதயா.. ரொமான்ஸ் பாசம் ஆவேசம் என சிறப்பாக கணக்கு கேரக்டரை கனகச்சிதமாக செய்திருக்கிறார்.
ஸ்மார்ட் ஹீரோ அஜ்மல்.. நேர்மையான கான்ஸ்டபிள் ஆக கலக்கியிருக்கிறார்.. ஒரு பக்கம் வில்லன் கோஷ்டி மறுபக்கம் போலீஸ் கோஷ்டி என இரண்டையும் சமாளிக்கும் காட்சிகளில் அஜ்மல் அசத்தல்..
தனி காமெடி ட்ராக் இல்லாமல் படத்துடன் ஒன்றிய வகையில் ஒன்லைன் காமெடியில் யோகி பாபு.. ஏதாவது பாட்டு பாடினால் காப்பி ரைட் வருமோ என இளையராஜாவையும் வம்புக்கு இழுத்திருக்கிறார்..
யாருப்பா இவர்.? ஹீரோ லுக்கில் ஒரு போலீஸ்காரர் என கவனிக்க வைக்கிறார் டேனி.. இவர் ஓ மரியா பாட்டுக்கு ரம்பா உடன் ஆட்டம் போட்டவர்.. இப்போ ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.. வாழ்த்துக்கள் சார்..
ஜான்விக்கா – சாந்திகா – சுபத்ரா என 3 அழகான ஹீரோயின்ஸ்.. ஜான்விக்கா ஒரு ஜாலி கா என இளசுகளை கவருகிறார் கிளைமாக்ஸ் காட்சியில் அழ வைக்கிறார்..

டெக்னீசியன்ஸ்….
Producer : AL.UDHAYA, “DAYA” N.PANNERSELVAM, M.THANGAVEL
Story/Screenplay/Direction: Prabhu Srinivas
DOP : MARUTHANAYAGAM.I
Music: NAREN BALAKUMAR
Editor: K.L PRAVEEN
Art Director: ANANTH MANI
Choreography: CHANDRIKA
Stunt: “STUNT” SILVA
Lyrics: DESA, HYDE KARTY, PADMAJA SRIRAM
மருதநாயகம் ஒளிப்பதிவு செய்ய நரேன் பாலகுமார் இசையமைத்திருக்கிறார்.. உதயா & ஜான்விக்கா டூயட் பாடல் ஆட்டம் போட வைக்கிறது.. பின்னணி இசை மிரட்டல்.. முக்கியமாக சண்டைக் காட்சிகளில் இசை சூடு பிடிக்கிறது..
அக்யூஸ்ட் நாயகன் உதயா இந்த படத்தை தயாரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது..

கன்னட இயக்குனர் பிரபு ஸ்ரீநிவாஸ் இந்த படத்தை இயக்கி முக்கியமான ஒரு கேரக்டரில் நடித்து பலம் சேர்த்து இருக்கிறார்..
பஸ் விபத்தும் அதில் படமாக்கப்பட்ட சண்டைக் காட்சியும் மெய்சிலிர்க்க வைக்கிறது..
இடைவேளை முன்பு வரை கமர்சியல் படம் போல ஆட்டம் பாட்டம் ஜாலியாக செல்லும் திரைக்கதை இடைவேளைக்குப் பிறகு கதையின் வேகமும் விறுவிறுப்பும் கூடியிருக்கிறது.. கிளைமாக்ஸ் காட்சியில் எதிர்பாராத ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் கொடுத்து ரசிக்க வைத்து விட்டார்..
ஒருவன் குற்றம் செய்யத் தொடங்கினால் அவனுக்கு இந்த சமுதாயமே ஒரு முடிவை தரும் என சோஷியல் மெசேஜ் கொடுத்திருக்கிறார்..
Accused movie review
—

