தேசிய தலைவர் விமர்சனம்.. தேவரே.. தேவனே.. போகலாமா நீ..!
தேசிய தலைவர் விமர்சனம்.. தேவரே.. தேவனே.. போகலாமா நீ..!
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தெய்வத்திற்கு நிகராக மக்களால் போற்றப்படும் பசும்பொன் முத்துராமலிங்கம் வாழ்வியலே இந்த படம்..
ஸ்டோரி…
தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாக என செயல்பட்டவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்.. இவர் தென் மாவட்டங்களுக்கு மட்டும் தலைவர் அல்ல.. இந்தியளவில் முக்கியமாக தமிழகத்தில் காமராஜர் வாழ்ந்த காலத்தில் அரசியல் நிகழ்வுகளை நகர்த்திய தலைவராக வாழ்ந்ததும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது..
சுதந்திர போராட்டத்தில் சுபாஷ் சந்திர போஸின் வலது கரமாக செயல்பட்டதும் சுபாஷ் வழியில் மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேருவை எதிர்த்து நின்றவருமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது..

இவரின் போர் குணத்தை இவரது நேர்மை பிடிக்காத காங்கிரஸ் கட்சி இவரை குற்றவாளியாக கருதி சிறையில் அடைப்பதும்.. அதனால் இவரது உடல்நிலை மோசம் அடைவதும் இதனால் பொது வாழ்க்கையில் இருந்து விலகுவதுமாக காட்சி அமைக்கப்பட்டுள்ளத.
ஆறு மாத குழந்தையாக இருக்கும் போது முத்துராமலிங்கம் தாயை இழந்த காரணத்தினால்.. தன் தாயின் கரமே தன் உடலில் படாத போது எந்த பெண்ணின் விரலும் தன் உடலில் படக்கூடாது என்பதற்காக திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்த வாழ்க்கையை சொல்லிய விதம் அருமை..
உடல்நிலை மோசமானதை தொடர்ந்து பொது வாழ்க்கையில் இருந்து விலகி அதன் பின்னர் தன் சொத்துக்களை தனக்கு உதவியதற்கு பிரித்துக் கொடுத்து உயர்ந்த மனிதராக இவர் வாழ்ந்த வாழ்க்கையை திரைக்காவியமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் அரவிந்தராஜ்..
சுதந்திர போராட்ட காலத்தில் தன் மக்களுக்கும் தன் நாட்டுக்காகவும் நின்ற ஒரு புரட்சியாளர் தான் இந்த பசும்பொன் முத்துராமலிங்கம் என்பதையும் அவரை மக்கள் தேவர் ஐயா என்று அழைப்பதும் என ஒவ்வொரு காட்சிகளையும் கண் முன் நிறுத்தி இருக்கிறார்.

கேரக்டர்ஸ்…
பசும்பொன் முத்துராமலிங்க தேவராக ஜே.எம்.பஷிர் பக்காவாக பொருந்திருக்கிறார்.. 5 வருடங்களாக இந்த படத்தின் வெளியீடு தள்ளி போனாலும் முத்துராமலிங்க தோற்றத்திலே அவரும் பொது இடங்களில் வலம் வருவது குறிப்பிடத்தக்கது..
எந்த இடத்திலும் மிகையில்லாத நடிப்பை அழகாக கொடுத்திருப்பது சிறப்பு..
இவருடன் காந்திஜி, நேருஜி, சுபாஷ் சந்திர போஸ் மற்றும் காமராஜர் ஆகிய வேடங்களில் நடித்தவர்களும் பாராட்டுக்குரியவர்கள்.. அதுபோல எம் எஸ் பாஸ்கர் சின்ன வேடம் என்றாலும் வழக்கமான பாணியில் கலக்கியிருக்கிறார்..
வக்கீலாக வரும் ராதா ரவி.. அவரது தோற்றமும் வசன உச்சரிப்பும் படத்திற்கு பலம்.. அதுபோல படத்தில் தேவர் ஐயாவின் பெருமையை போற்றும் வகையில் பல வசனங்கள் இணைக்கப்பட்டுள்ளது..
டெக்னீசியன்ஸ்…
இசைஞானி இளையராஜா இசை.. இவரை தவிர யாரது இசையும் நினைத்துப் பார்க்க முடியாது அளவிற்கு முத்துராமலிங்கம் மரணம் அடைந்த பிறகு வரும் பாடல் நம் மனதை ரணமாக்கும்..
அகிலன் ஷியாலியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.. 1940 50 இருந்த காலகட்டங்கள் இருந்த விளக்கு.. கலைப் பொருட்களை அனைத்தையும் கண் முன் கொண்டு வந்துள்ளனர் ஒளிப்பதிவாளரும் கலை இயக்குனரும்..
பெத்தவளின் முகத்தை பார்க்காத என்னை போல் எத்தனை உயிர்கள் பிறந்தனவோ..? என்ற பாடல் இளையராஜாவின் குரலில் ஒலிக்கும் போது நம் உடல் மெய்சிலிர்க்கும்..
சுதந்திரம் வேண்டும்.. வெட்டு சுதந்திரம் யாருக்கு வேண்டும்.. நாட்டு சுதந்திரம் வேண்டும்..
எங்கள் தேவரே எங்கள் தேவனே போகலாமா நீ.. தேவர் பெருமானே தேவர் பெருமானே… என்ற பாடல் வரியில் இளையராஜா இசையில் எக்காலத்திற்கு நிற்கும்.. இது தேவர் ஐயாவின் வாழ்வியலை போற்றும்..

ஊமை விழிகள் படத்தை இயக்கிய இயக்குநர் ஆர். அரவிந்த்ராஜ் இயக்கியுள்ளார்… அவரும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.. அவர் தன்னுடைய ஜூனியர்களிடம் கதையை சொல்வது போல காட்சிகளை நகர்த்திருக்கிறார்.
பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்கள் இறந்த பிறகு வரும் காட்சிகளில் பெரும் திரளான மக்களை காட்டி இருக்கலாம்…ஆனால் ஒரு 50 பேர் மட்டுமே நிற்பது போல காட்சிப்படுத்தி இருப்பது ஏனோ என்று தெரியவில்லை.. ஒருவேளை அப்படித்தான் உண்மையில் நடந்ததா என்பது இயக்குனருக்கே வெளிச்சம்.?
Desiya Thalaivar movie review
—-

