அனந்தன் காடு விமர்சனம்…
அனந்தன் காடு விமர்சனம்…
ஸ்டோரி…
கோவாவில் தனது மகளின் நிச்சயதார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார் வில்லன் சுனில்.. அப்போது அவருக்கு ஒரு அழைப்பு வரவே எடுத்துக் கொண்டு வெளியே சென்று பேசுகிறார் சுனில்.. திடீரென அவரை சூழ்ந்து கொண்ட சில இளைஞர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டுகின்றனர்..
இவர்களுக்கு என்ன தொடர்பு என்ற கதை பிளாஷ் பேக்கில் தொடருகிறது..
அதன் பின்னர் கதை 1988 ஆண்டுகளுக்கு நகர்கிறது… இலங்கையில் நடந்த போரில் தனது குடும்பத்தை இழக்கிறார் ஆர்யா..
அங்கிருந்து தப்பும் ஆர்யா சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் கேரளா திருவனந்தபுரத்தில் நுழைந்து அங்கு தஞ்சம் அடைகிறார்..
அங்கு அரசியல்வாதியால் நடத்தப்படும் கூலிப்படையில் இந்திரன்ஸ் தலைமையில் இணைகிறார்.. அரசியல்வாதி தன்னுடைய காரியங்களை சாதித்துக் கொள்ள இந்த கூலிப்படை மூலம் அடிதடி வெட்டு வன்முறைகளை நடத்தி வருகிறார்..
இவர்கள் குழுவில் இணைந்த ஆர்யா அடுத்தது என்ன செய்தார்..? அவருடன் இணைந்து சதி திட்டத்தில் ஈடுபட்டாரா? அல்லது இவர் தனி வழியில் செயல்பட்டாரா.? என்பதெல்லாம் சுவாரசியமான திரைக்கதை..

கேரக்டர்ஸ்…
Arya
Nikhila Vimal
Regena
Sunil
Indrans
Siddique
Ajay
Bose Venkat
Dev Mohan
Renji Panicker
Anjali P Nair
Santhy Balachandran Achyuth Kumar Vijayaraghavan
Sagar Surya
Alsyn Benny
Sarath Appani
அமைதியான நடிப்பில் அசத்தி இருக்கிறார் ஆர்யா.. போராட்டம் குணம் நிறைந்த ஒரு தமிழனாக தன் கேரக்டரில் சிறப்பு.. இந்த தமிழன் யார் இந்த தமிழன் யார் என ஆர்யாவை தேடுவது தான் படம்.. அதுவே பெரும் படபடப்பை உண்டாக்குகிறது..
சமீபத்தில் கருப்பு படத்தில் அசத்திய இந்திரன்ஸ் இதில் வித்தியாசமாக கேரக்டரில் அசத்தியிருக்கிறார்.. கிளைமாக்ஸ் நம்மை அழ வைக்கிறார்..
முரளி கோபி, அக்ஷய்குமார், தேவ்மோகன், போஸ்வெங்கட் என பலரும் சிறப்பு.
சுனிலின் வில்லத்தனம் மிரட்டல்.. நிகிலா விமல், ரெஜினா, அஞ்சலி நாயர் ஆகியோர் ஏன்? தங்கள் நடிப்பில் இவர்கள் கவனிக்க வைத்தாலும் இவர்களின் கேரக்டர் வீணடிக்கப்பட்டுள்ளது..
கேரள முதல்வராக நடித்திருக்கும் விஜயராகவன் நடிப்பில் மிரட்டல்.. அலட்டி கொள்ளாமல் நடிப்பை பேச வைக்கிறார்..

டெக்னீசியன்ஸ்…
Director – Jiyen Krishnakumar
Story, Screenplay & Dialogues – Murali Gopy
Producer – S. Vinod Kumar
Director of Photography – S. Yuva
Editor – Rohit V. S. Variyath
Music – B. Ajaneesh Loknath
Action Director – R. Sakthi Saravanan
VFX Director – Binoy Sadasivan
Lyrics – Palani Bharathi, Murali Gopy
ஒளிப்பதிவாளர் யுவாவின் கேமரா கண்களுக்கு குளிர்ச்சி.. காட்டுக்குள் கேமராவை சுழற்றி சுழற்றி அடித்து இருக்கிறார்..
அஜனீஷ் லோக்நாத் பின்னணி இசை தெறி லெவல்.. கூடுதல் மெனக்கேட்டு அசத்தியிருக்கிறார் அஜனீஷ்..
ஆர்.சக்தி சரவணன் ஸ்டண்ட் உழைப்பு அபாரம்.. பெரிய ரிஸ்க் எடுத்து கலக்கியிருக்கிறார்..
தமிழ் போராளி, கேரள குடிசைப்பகுதி குற்றப் பின்னணி மக்கள் என பல விஷயங்களில் அலசி சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்துள்ளனர்..
உண்மைச் சம்பவங்களை தழுவி முரளி கோபி கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். மேக்கிங் பிரமிக்க வைக்கிறது… அதற்காக இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமாரை நிறைய பாராட்டலாம்..
Aryas Ananthan Kaadu movie review

