BREAKING – கமல் தயாரிப்பில் ‘தர்மன்’.. இதுவரை ஏற்காத வேடத்தில் ரஜினி.!?

BREAKING – கமல் தயாரிப்பில் ‘தர்மன்’.. இதுவரை ஏற்காத வேடத்தில் ரஜினி.!?

BREAKING – கமல் தயாரிப்பில் ‘தர்மன்’.. இதுவரை ஏற்காத வேடத்தில் ரஜினி.!?

 

‘தலைவர் 173’ படத்தின் பூஜை இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.. இந்த விழாவில் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசி வருகிறார்… இந்த நிகழ்ச்சியை நீயா நானா கோபி தொகுத்து வழங்கி வருகிறார் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, கதாநாயகன் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்..

கமல் தயாரிக்கும் ரஜினி படத்தை முதலில் சுந்தர் சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டார்.. பின்ன சில தினங்களில் அவர் விலகினார். இதனை அடுத்து சிபி சக்கரவர்த்தி இயக்குவார் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அவரும் விலகினார்.. தற்போது அஸ்வத் மாரிமுத்து இணைந்துள்ளார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது..

இந்தப் படத்தின் தலைப்பு தர்மன் என அறிவிக்கப்பட்டுள்ளது.. இதில் சப் டைட்டில் தி டெட்லி டாக்டர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது..

இதுவரை ரஜினிகாந்த் பல வேடங்களில் நடித்திருந்தாலும் இதுவரை ஏற்காத டாக்டர் வேடத்தில் நடித்து வருகிறார்..

ஆப்ரேஷன் தியேட்டரில் இருக்கும் ரஜினிகாந்த் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு கையில் ரத்தம் ஆகியவற்றுடன் காணப்படுகிறார்.. இந்தப் படத்தில் ரஜினியுடன் முக்கிய வேடத்தில் சிம்ரன், ராசி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.. அனிருத் இசை அமைக்க தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக கமலஹாசன் தயாரிக்கிறார்.. இணை தயாரிப்பாளராக மகேந்திரன் இணைந்துள்ளார்..

நிகித் பொம்மி ஒளிப்பதிவு செய்ய பிரதீப் ஈராகவ் எடிட்டிங் செய்கிறார்.. சண்டைப் பயிற்சிகளை அன்பறிவு மேற்கொள்ள உள்ளனர்.

கூடுதல் தகவல்…

🩺❣️சுந்தர் சி & சிபி சக்கரவர்த்தி ஆகியோருக்கு முன்பு தலைவர் 173 படத்தை KS ரவிக்குமார் இயக்குவதாக இருந்தது.. என ரஜினிகாந்த் தற்போது மேடையில் பேசி வருகிறார்..

தற்போது நான்காவது டைரக்டராக அஸ்வத் மாரிமுத்து இணைந்துள்ளார்.. 🎥

நான் என்ன பேசினாலும் பிரச்சினையாகி விடுகிறது.. பேசாமல் இருந்தால் இவர் வாயில் கொழுக்கட்டை இருக்கிறதா என்பார்கள்.. பேசினால் இதோ பேசிட்டாரு என அதற்கும் ஒரு பிரச்சனை செய்வார்கள்..

என கலகலப்பாக பேச ஆரம்பித்தார் ரஜினிகாந்த்..

*தர்மன்* பட சூட்டிங் நாளை முதல் தொடங்குகிறது மேடையில் ரஜினிகாந்த் பேச்சு. 😎

Rajinis Thalaivar 173 titled Dharman produced by Kamal

 

 

 

 

Related articles