FIRST ON NET கும்கி 2 விமர்சனம்.. நட்புக்கு யானை பலம்

FIRST ON NET கும்கி 2 விமர்சனம்.. நட்புக்கு யானை பலம்

கும்கி 2 விமர்சனம்.. நட்புக்கு யானை பலம்

 

ஸ்டோரி…

தாய் தந்தை இருவரும் சாராயத் தொழில் செய்து வருவதால் பள்ளியில் நண்பர்களால் புறக்கணிக்கப்படுகிறார் நாயகன் பூமி..

நண்பர்கள் இல்லாமல் தவிக்கும் சிறுவனை இயற்கையோடு வாழ பழகிக் கொள்.. நண்பர்கள் வாழ்வில் நிரந்தரமாக இருக்க மாட்டார்கள் என ஆலோசனை செய்கிறார் குரு.. அதன் பின்னர் இயற்கையோடு பழகத் தொடங்கும் இந்த சிறுவனுக்கு ஒரு குட்டி யானையின் நட்பு கிடைக்கிறது..

அந்த யானையை தன் தாயாக வளர்த்து வருகிறார்.. யானைக்கு ஓவியம் வரைவது கூட கற்றுக் கொடுக்கிறார்.. இதனால் யானையின் மூலம் பிரபலம் ஆகிறார்.

ஒரு நாள் யானை காணாமல் போகிறது.. பூமியின் பெற்றோர்களை யானையை பெரும் விலைக்கு விற்று விடுகின்றனர்.. வேறொரு இடத்தில் வளரும் யானையை கொல்ல சில அரசியல் நயவஞ்சகர்கள் திட்டமிடுகின்றனர்.. அரசியல் பதவி ஆசைக்காக யானையை பலி கொடுத்தால் பதவியில் உயரலாம் என்று நினைப்பில் அவர்கள் திட்டமிடுகின்றனர்..

அதன் பிறகு என்ன நடந்தது.? நாயகன் யானையை கண்டுபிடித்தாரா.? யானை பலி கொடுக்கப்பட்டதா.? இறுதியில் என்ன ஆனது என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

நடிகர் மதி நாயகனாக நடிக்க நடிகர் அர்ஜுன் தாஸ் வில்லனாக நடித்துள்ளார்..

மதி.. இயல்பான நடிப்பில் சிறப்பு.. டூயட் & ஹீரோயின் இல்லாமல் நடித்தமைக்கு பாராட்டுக்கள்.. சத்தமில்லாமல் சைலன்ட் வில்லனாக கவர்கிறார் அர்ஜுன் தாஸ்.. இவரின் கண்கள் கூட மிரட்டும் ரகம்..

ஷ்ரிதா ராவ், ஆன்ட்ரூஸ், ஆகாஷ், ஹரிஷ் பெராடி, ஸ்ரீநாத் மற்றும் பலர்..

ஆன்ட்ரூஸ்.. ஓவர்டயலாக்.. ஓவர் ஆக்ட்டிங்..

ஷ்ரிதா ராவ்.. சுறுசுறுப்பான இளமை துள்ளல் கேரக்டரில் கவர்கிறார்..

சூசன் ஜார்ஜ்.. மிரட்டல் வில்லி வேடம்..

டெக்னிசியன்ஸ்…

நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.. மோகன் ராஜ் எழுதிய நிவாஸ் பாடிய பொதி பொதி.. பாட்டு அருமை..

மோகன் ராஜ் வரிகளில் சிவாத்மிகா பாடிய
‘ஹே குறிஞ்சியே…’ பாடலும் ரசிக்க வைக்கிறது..

‘கும்கி’ படத்தில் பாடல்கள் யானை பலம் பெற்றது.. எனவே Kumki 2 அந்த எதிர்பார்ப்பு இருந்தது.. பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது..

யானையின் கண்கள், தும்பிக்கை, யானைத் தந்தம், இயற்கை வளம் நிறைந்த காடு பகுதிகள் என அனைத்தும் கண்களுக்கு விருந்து.. ஒளிப்பதிவாளர் சுகுமார்..

‘கும்கி’ படத்தை இயக்கிய பிரபு சாலமன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.. ஆனால் எந்த சம்பந்தமும் இல்லை.. சொல்லப்போனால் பார்ட் 2 படங்கள் எதிர்பார்ப்பு ஏற்படுத்தினாலும் பெரிய வெற்றியை கொடுப்பதில்லை..

ஆரம்பத்தில் யானை சிறுவன் நட்பு பார்க்கவே நெகிழ்ச்சியாக இருக்கிறது.. அந்த 15 நிமிட காட்சிகளை ஒரு மணி நேரமாக கூட்டி இருந்தாலும் படத்தில் இன்னும் சுவாரசியம் கூடியிருக்கும்..

நட்பை போற்றக்கூடிய படமாக யானையை வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் பிரபு சாலமன்.. நிச்சயம் குழந்தைகளை கவரும் பல காட்சிகள் இருப்பதால் குழந்தைகளுடன் சென்ற இந்த படத்தை ரசிக்கலாம்..

பென் ஸ்டூடியோஸ் மற்றும் பென் மருதர் சினி என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஜெயந்திலால் காடா மற்றும் தவல் காடா இணைந்து வழங்கும் திரைப்படம் ‘கும்கி 2’.

 

Kumki 2 movie review

—