குடும்பங்கள் கொண்டாடிய இயக்குனர் வி. சேகர் காலமானார்.; இறுதி சடங்கு விவரம்…
குடும்பங்கள் கொண்டாடிய இயக்குனர் வி. சேகர் காலமானார்.; இறுதி சடங்கு விவரம்…
சினிமாவில் நடிப்பவர்கள் மட்டும் ஹீரோ அல்ல.. ரசிகர்களும் ஹீரோ தான் என்பதை ஒரு திரைப்படமாக கொடுத்தவர் இயக்குனர் வி சேகர்.. ‘நீங்களும் ஹீரோதான்’ என்று ஒரு படத்தை இயக்கி பெரும் பரபரப்பை உண்டாக்கினார்… இதுவே வி சேகர் இயக்குனராக அறிமுகமான முதல் படம்.
இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து பல கிராமத்து குடும்ப படங்களை இயக்கினார்.. கூட்டு குடும்பம் அதில் உள்ள பலன்கள் அதில் உள்ள பலவீனங்கள் என பல படங்களை இயக்கி வெற்றி கொடுத்தவர் இவர்..
இதனைத் தொடர்ந்து வி சேகர் இயக்கிய படங்களின் வரிசை இதோ…
நான் புடிச்ச மாப்பிள்ளை’ – ‘பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்’, ‘ஒண்ணா இருக்க கத்துக்கணும்’, ‘பொறந்த வீடா புகுந்த வீடா’, ‘பார்வதி என்னை பாரடி’, ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘நான் பெத்த மகனே’, ‘காலம் மாறிப் போச்சு’, ‘பொங்கலோ பொங்கல்’, ‘எல்லாமே என் பொண்டாட்டிதான்’, ‘விரலுக்கு ஏத்த வீக்கம்’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘வீட்டோட மாப்பிள்ளை’, ‘நம்ம வீட்டு கல்யாணம்’, ‘ஆளுக்கொரு ஆசை’ போன்ற படங்களை இயக்கி தமிழ் குடும்பங்களின் ஆஸ்தான இயக்குனராக மாறினார்..

ஆனால் ஒரு கட்டத்தில் சிலை கடத்தல் வழக்கில் சிக்கி சினிமாவிலிருந்து விலகி ஓய்வு பெற்று வந்தார்.. ஆனாலும் ஒரு சில படங்களை தயாரித்தும் இருக்கிறார்.. ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்.. மேலும் டிவி சீரியல்களையும் தயாரித்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களாக உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று நவம்பர் 14ஆம் தேதி காலமானார்..
வி சேகருக்கு தமிழ் செல்வி என்ற மனைவியும், மலர்க்கொடி என்கிற மகளும், காரல் மார்க்ஸ் என்கிற மகனும் உள்ளனர்..

—
குடும்ப இயக்குநர் வி.சேகரின் உடல் தற்போது ராமச்சந்திரா மருத்துவமனையில் உள்ளது. திரைப்பட இயக்குநர்கள் அனைவரும் நாளை நவம்பர் 15.. காலை 8 மணிக்கு ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கூடுகின்றனர்.
அங்கிருந்து அவரது உடலை ஊர்வலமாக எடுத்து வி.சேகரின் கோடம்பாக்கம், டாக்டர் சுப்பராயன் நகர் மெயின் ரோட்டில் உள்ள ‘திருவள்ளுவர் இல்லத்திற்கு’ கொண்டு செல்கின்றனர்.
அங்கு திரையுலையினர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
மாலையில் அவரது சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே உள்ள நெய்வாநத்தம் கிராமத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது.
இறுதி அஞ்சலிக்கு பிறகு மாலை அவரது சொந்த ஊரான திருவண்ணாமலை வேட்டவலம் அருகே உள்ள நெய்வாநத்தம் கிராமத்திற்கு எடுத்துச்செல்லப்படுகிறது.
அங்கு அவருக்கு இறுதி அஞ்சலியும், அதனைத் தொடர்ந்து இறுதிச் சடங்கும் நடைபெற உள்ளது..
Family movies fame Director V Sekar passed away

