ஆரவாரமில்லாமல் ஆழமான உணர்வை திரையரங்குகளில் பதிவிடும் ஆட்டோகிஃராப்
ஆரவாரமில்லாமல் ஆழமான உணர்வை திரையரங்குகளில் பதிவிடும் ஆட்டோகிஃராப்
21 வருடங்களுக்கு முன்பு சேரன் நடிப்பில் உருவான ஆட்டோகிஃராப் திரைப்படம் தற்போது மீண்டும் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது..
இதில் சேரனுடன் சினேகா, கோபிகா, கனிகா, மல்லிகா, இளவரசு, பெஞ்சமின் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்..
பரத்வாஜ் இசையில் உருவான இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது..
பா விஜய் எழுதிய ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடல் தேசிய விருது பெற்றது.. மேலும் ஆட்டோகிஃராப் திரைப்படமும் சேரனுக்கு தேசிய விருது பெற்று தந்தது..
தமிழகத்தில் பிரபலமான ஒரு பள்ளியில் ஆட்டோகிஃராப் பாடல் ஒவ்வொரு பூக்களுமே.. என்ற இந்த பாடல் வாழ்த்து போல பாடப்பட்டு வருகிறது..
தற்போது ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில் படத்தின் தரத்தை அதிகரித்து வகையில் எடிட்டிங் செய்துள்ளனர் மேலும்..
கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் காட்சிகளை படத்தில் இருந்து நீக்கி உள்ளனர்.
ஒரு ஆணாக இருந்தாலும் ஒரு பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்குள் சொல்லப்படாத ஒரு காதல் ஒளிந்திருக்கும்.. அவர்களின் அந்த காதலை நினைவுபடுத்தும் வகையில் இந்த படம் இருப்பதை பலரும் பார்த்து பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்..

ஒருவனுக்கு ஒரு முறை தான் காதல் பூக்கும் என்பதல்ல.. எத்தனை காதல் வேண்டுமானால் அதன் வாழ்வில் வந்து செல்லலாம் என்பதை எதார்த்தமாக இந்த படத்தில் பதிவு செய்திருந்தார் இயக்குனர் சேரன்..
அது மட்டுமில்லாமல் இன்றைய காலகட்டத்திற்கும் எந்த காலகட்டத்திற்கும் ஏற்றதாக இந்த படம் இருப்பதாக இன்றைய குழந்தைகளும் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
ஆட்டோகிஃராப் திரைப்படத்தைப் போலவே சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பிரேமம் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.. அந்த படமும் தமிழ் மற்றும் மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது..
Autograph movie re-release rewind review
—–

