உங்களுக்கு பாட ஆசை இருக்கா.? இளையராஜாவுடன் இணைய செம சான்ஸ்..!
உங்களுக்கு பாட ஆசை இருக்கா.? இளையராஜாவுடன் இணைய செம சான்ஸ்..!
இந்திய சினிமாவில் ஈடு இணையற்ற இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா.. உலக அளவிலும் சிம்போனி இசையமைத்து மேஸ்ட்ரோ பட்டம் பெற்றவர் இவர்..
கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் 1500 படங்களுக்கு மேல் இந்திய அளவில் அனைத்து மொழிகளிலும் இசை அமைத்திருக்கிறார்..
இவரது குடும்பமே இசை குடும்பம்.. இவரது சகோதரர் இவரது மகன்கள் மகள் என அனைவருமே இசையமைப்பாளர்கள் தான்.
இவரது மகளும் பாடகியுமான பவதாரணி சில வருடங்களுக்கு முன்பு கேன்சர் நோயால் மரணம் அடைந்தார்.
இந்த நிலையில் தனது மகளுக்காக ஒரு அருமையான திட்டத்தை இளையராஜா தற்போது அறிமுகப்படுத்தி இருக்கிறார்
தன் மகள் நினைவாக, ‘பவதா மகளிர் ஆர்கெஸ்ட்ரா (bavatha girls orchestra) ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்.. திறமையுள்ள பெண் பாடகர்கள், இசைக் கலைஞர்கள் தங்களைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரித்துள்ளார்.
இசையில் விருப்பமுள்ளவர்கள் [email protected] என்கிற மெயிலுக்கு தங்களின் விபரங்களை அனுப்பலாம் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது..
ilaiyaraja launched Bavatha Girls Orchestra

