ராம் அப்துல்லா ஆண்டனி விமர்சனம்.. புகையிலையால் புண்ணாகும் சமூகம்..

ராம் அப்துல்லா ஆண்டனி விமர்சனம்.. புகையிலையால் புண்ணாகும் சமூகம்..

ராம் அப்துல்லா ஆண்டனி விமர்சனம்.. புகையிலையால் புண்ணாகும் சமூகம்..

 

ஸ்டோரி…

பூவையார், அஜய், அர்ஜூன்.. இவர்கள் மூவரும் 18 வயது நிரம்பாதவர்கள்.. இவர்கள் ஒரு கட்டத்தில் தொழிலதிபர் வேல ராமமூர்த்தியின் பேரனை கடத்தி அவனை துண்டு துண்டாக வெட்டி ஓடையில் வீசி செல்கின்றனர்..

இந்த வழக்கை விசாரிக்க வருகிறார் போலீஸ் சாய் தீனா.. இவரது உதவியாளர் சௌந்தரராஜா.. தீனா இவர்களை கண்டுபிடித்து மூவரையும் கைது செய்கிறார்.. அதன் பிறகு நடப்பது என்ன.? கொலைக்கான காரணம் என்ன.? பின்னணியில் நடந்தது என்ன என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

பூவையார், சௌந்தரராஜா, வேல.ராமூர்த்தி, அஜய், அர்ஜூன்.

தொலைக்காட்சிகளில் l சூப்பர் சிங்கராக நாம் பார்த்த பூவையார் இதில் கதை கதாநாயகனாக அறிமுகம்.. ஆட்டம் பாட்டம் ஆக்சன் எமோஷன் என அனைத்திலும் நன்றாகவே ஸ்கோல் செய்கிறார்..

நண்பர்களாக வரும் அஜய் மற்றும் அர்ஜுன் இருவரும் நட்புக்கு கரம் கொடுத்துள்ளனர்..

திருக்குறள் ஆர்வலராக அஜய், அப்துல்லாவாக அர்ஜூன் நடித்துள்ளனர்.. பெற்றோர்களாக வரும் ஜாவா சுந்தரேசன், வினோதினி, தலைவாசல் விஜய், கிச்சா ரவி ஆகியோரும் தங்கள் அனுபவ நடிப்பில் கவர்கின்றனர்.. கேன்சர் நோயாளியாக பூவையார் அம்மா ஹரிதா அசத்தியிருக்கிறார்.. ஸ்ட்ராங்கான கேரக்டருக்கு இவரது நடிப்பு பெரிய பலம்..

கதாநாயகன் பூவையார் என்றால் கதை நாயகனாக போலீஸ் கான்ஸ்டபிள் ஆக சௌந்தரராஜா.. முதலில் சாதாரணமாக வந்து அதன் பின்னர் விஸ்வரூபம் எடுக்கிறார்.. கான்ஸ்டபிள் கேரக்டர் உடல் மொழியில் சௌகரியமாக பொருந்தி இருக்கிறார் சௌந்தரராஜா..

வழக்கமாக அதட்டும் குரலில் அசத்தியிருக்கிறார் வேலராமமூர்த்தி..

வழக்கம்போல வில்லத்தனம் கலந்த நடிப்பில் கவருகிறார் சாய் தீனா.. கலெக்டர் போலீஸ் டீச்சர் ஆகியோரின் கேரக்டர்களும் படத்திற்கு பலம்..

டெக்னீசியன்ஸ்…

இசை : டி.ஆர்.கிருஷ்ண சேத்தன்
ஒளிப்பதிவு : எல்.கே.விஜய்

ஒளிப்பதிவு இசையும் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருப்பது ஒவ்வொரு காட்சிகளிலும் உணர முடிகிறது..

தயாரிப்பு : அன்னை வேளாங்கண்ணி ஸ்டூடியோஸ்
இயக்கம் : ஜெயவேல்

வழக்கமான சிறுவர் சீர்திருத்த பள்ளி கதை என முதலில் நகர்த்தப்பட்டாலும் அதற்கு பின்னர் போதை பழக்கத்தால் சமூகத்தில் நடக்கும் அவலங்களும் காட்சிகளும் விழிப்புணர்வை ஏற்படுத்தும்..

காவல்துறை காட்சிகள்.. புகையிலையால் பாதிக்கப்படும் மாணவர்கள்… சமூக மாற்றங்கள்… குடும்பத்தில் சீர்குழையும் சந்தோசம் உள்ளிட்டவைகள் யதார்த்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது..

புகையிலைக்கு எதிரான போராட்டத்திற்கு கொலைதான் தீர்வா.? என்ற கேள்வி எழுந்தாலும் இதுவரை புகையிலைக்கு தடையில்லை.. எனவே இது போன்ற சம்பவங்கள் நடந்தால் மட்டுமே சமூகத்தில் மாற்றங்கள் நிகழும் என்பதையும் ஆணித்தரமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் ஜெயவேல்..

நாட்டில் பல வெட்டு குத்து வன்முறை சம்பவங்கள் இருக்க புகையிலையை சாதாரணமாக நாம் கடந்து செல்கிறோம்.. ஆனால் அது ஒரு சமூகத்தில் எந்த மாதிரியான விளைவுகளை மெல்ல மெல்ல மாற்றும் என்பதை இந்த படத்தின் மூலம் உணர்த்தி விழிப்புணர்வை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜெயவேல்..

 

Ram Abdhulla Antony movie review