மெஸன்ஜர் விமர்சனம்.. உறவினர்களை இழந்த உறவுகளுக்கு உள்ளம் சொல்லும் மெசேஜ்

மெஸன்ஜர் விமர்சனம்.. உறவினர்களை இழந்த உறவுகளுக்கு உள்ளம் சொல்லும் மெசேஜ்

மெஸன்ஜர் விமர்சனம்.. உறவினர்களை இழந்த உறவுகளுக்கு உள்ளம் சொல்லும் மெசேஜ்

 

ஸ்டோரி…

நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார்.. அப்பொழுது அவருக்கு ஒரு பெண் மெஸன்ஜர்-ல் மெசேஜ் செய்கிறார்.. ‘நீ தற்கொலை செய்யாதே.. நான் உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறேன். ” என்கிறார்..

நீ எங்கிருக்கிறாய்? என்ற நாயகன் ஸ்ரீராம் கேட்க… அவளோ நான் இறந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது என்கிறார்..

இதனால் அதிர்ச்சியாகும் நாயகன் உடனே காவல் நிலையத்தில் சென்று இறந்தவர் எப்படி மெசேஜ் செய்ய முடியும் என்று புகார் அளிக்கிறார். இதனை தொடர்ந்து போலீஸ் விசாரணை தொடங்குகிறது..

உண்மையில் இறந்த பெண் எப்படி மெசேஜ் செய்ய முடியும்.? அந்த செல்போன் எங்கே இருக்கிறது? இதன் பின்னணியில் நடப்பது என்ன.? ஸ்ரீராமுக்கு அந்தப் பெண் மெசேஜ் செய்ய இவர்களுக்குள் என்ன உறவு.? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

ஶ்ரீராம் கார்த்திக், மனிஷா ஶ்ரீ, பாத்திமா நஹிம், வைஷாலி, ஜீவா ரவி, லிவிங்ஸ்டன்

ஸ்மார்ட்டான நாயகன் ஸ்ரீராம் கார்த்திக்.. ஏற்கனவே இவர் கன்னி மாடம் உள்ளிட்ட படங்களில் நாயகன்.. உணர்வு பூர்வமான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து உள்வாங்கி நடிப்பது இவரது சிறப்பு..

கயல் கேரக்டில் வரும் கிராமத்துப் பெண் கச்சிதமான கட்டழகு.. இவரது கேரக்டரை இயக்குனர் கழட்டிவிட்டது ஏனோ.?

மனிஷா ஶ்ரீ, பாத்திமா நஹிம், வைஷாலி, ஜீவா ரவி, லிவிங்ஸ்டன்.. ஆகியோர்களுக்கு கேரக்டர்கள் படத்திற்கு வலு சேர்த்துள்ளன..

 

டெக்னீசியன்ஸ்…

ஒளிப்பதிவு, பால கணேசன் ஆர்…

இசை – அபுபக்கர் எம்.

One side வளர்த்தேன்… பெண்களின் காதல் உணர்வை சொல்லும் பாடல்.. வரிகள் அருமை..

காதல் எனும் உலகில் என் தேவதை நீயே..
வரமாய் வந்தாய் என் வாழ்விலே..

ஹீரோவுக்கு ஒரு பாட்டு… ஹீரோயினுக்கு ஒரு பாட்டு என கொடுத்திருப்பது இருவருக்கமான முக்கியத்துவத்தை காட்டுகிறது.. பாடல் வரிகள் ரசிக்க வைக்கிறது..

‘பிவிகே ஃபிலிம் ஃபேக்டரி’ சார்பில், பி.விஜயன் தயாரித்திருக்கிறார்.. இபடத்தினை இயக்கியிருக்கிறார், ரமேஷ் இளங்கமணி.

12 மணிக்கு தான் ஆவி மெசேஜ் செய்யும் என்று சொன்ன இயக்குனர் பின்னர் ஒரு நாள் முழுவதும் மெசேஜ் செய்வதும் அதற்கு பிறகு மாற்றம் ஏன் என்பதெல்லாம் புரியல..

ஆவி பேய்கதை என்றாலும் கிராபிக்ஸ் பயன்படுத்தவில்லை இதனால் நமக்கும் பேய் பயம் வரவில்லை ஆனால் ஒரு உணர்வு போதுமான ஒரு ஆத்மாவை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர்.

உறவினர்களை நாம் இழந்தால் அவர்கள் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.. நம்மை சுற்றி வருவார்கள் என்று எண்ணம் உள்ளவர்களுக்கு இந்த மெசேஜ் கனெக்ட்டாகும்..

Messenger movie review

——–