ஆண் பாவம் பொல்லாதது விமர்சனம் 4.25/5.. தாலி கயிற்றில் சிக்கிய தங்க மகன்

ஆண் பாவம் பொல்லாதது விமர்சனம் 4.25/5.. தாலி கயிற்றில் சிக்கிய தங்க மகன்

ஆண் பாவம் பொல்லாதது விமர்சனம் 4.25/5.. தாலி கயிற்றில் சிக்கிய தங்க மகன்

 

ஸ்டோரி…

கம்யூனிச பெண்ணியவாதி நாயகி மாளவிகா.. இவரை பெண் பார்க்க செல்கிறார் ரியோ ராஜ்.. அப்போது மாளவிகா தரையில் அமர இவரும் தரையில் அமருகிறார்.. அப்படி சம உரிமையாக பெண்களை நடத்த வேண்டும் என்று நினைப்பவர் ரியோ..

ஆனால் இவர்களுக்கு திருமணமான இரண்டு வருடங்களுக்குள் ஈகோ மோதல் வெடிக்கிறது.. இதனால் விவாகரத்து வரை செல்கின்றனர்..

ஆனால் அப்போது தன் மனைவி மாளவிகா கர்ப்பிணியாக இருப்பதை அறிகிறார்.. எனவே விவகாரத்து வேண்டாம் என்கிறார்..
ஆனால் அவளோ விவகாரத்திற்கு தயாராகிறார்.. ரியோவுக்கு வக்கீலாக விக்னேஷ்காந்த்.. இவரது உதவியாளர் ஜென்சன் திவாகர்..

மாளவிகாவுக்கு வக்கீலாக ஷீலா ஆஜராகிறார்.. யாருடைய பக்கம் நீதி.? யாருக்கு தீர்ப்பு சாதகமானது.? நடந்தது என்ன என்பதெல்லாம் மீதிக்கதை.

ஆண்பாவம் பொல்லாததா அல்லது பெண் பாவம் பொல்லாததா.?

கேரக்டர்ஸ்…

ஜோ படத்தில் ஜெயித்த காதல் ஜோடி (ரியோ ராஜ் மற்றும் மாளவிகா ) இதில் கல்யாணம் ஜோடியாக மாறி இருக்கிறது.. பெண்ணியம் பேசும் கம்யூனிசவாதி & எதார்த்த இஞ்சினியரிங்வாதி என இருவரும் ஜொலிக்கின்றனர்.. அம்பேத்கர் & காந்தி பிறந்த ஊர் என்ற வசனங்கள் இனி பலருக்கும் பேசும் பொருளாகும் மாறும்..

ரியோ – மாளவிகா முதல் ஜோடி போல இரண்டாம் ஜோடியாக விக்னேஷ்காந்த் மற்றும் ஷீலா.. இவர்கள் இருவரும் நாயகன் நாயகி வழக்கில் வாதாடி இவர்கள் வாழ்க்கையில் ஜெயிப்பது சிறப்பு..

பல படங்களில் போர் அடிக்கும் காமெடி செய்த ஆர் ஜே விக்னேஷ் இந்த படத்தில் ஒரு திறமையான கலைஞராக தன்னை உயர்த்தி காட்டி இருக்கிறார்.. நாராயணன் கேரக்டரில் தன்னை நச்சென்று பொருத்திருக்கிறார்..

விக்கியும் ஷீலாவும் மோதிக்கொள்ளும் கோர்ட்டு காட்சிகள் செம.. அதிலும் ஜென்சனும் சேர்ந்து கொள்வது இனி சோசியல் மீடியாக்களில் வலம் வரும் காட்சிகளாக மாறும்..

ஷீலா வைத்த இன்ஸ்டாகிராம் நபர் ரியோவை follow செய்யும் காட்சிகள் சிடுமூஞ்சிகாரியை கூட சிரிக்க வைக்கும்..

ஜென்சன் திவாகர்.. இவர் ஏற்கெனவே லப்பர் பந்து படத்தில் தினேஷ் நண்பராக காமெடியில் கலக்கியவர்.. இந்த படத்தில் ஜூனியர் வக்கீலாக அதுவும் ஒரு கட்டத்தில் குடிகாரனாக இவர் வரும் செய்யும் சேட்டைகள் ஹைலைட்…. இப்போ எல்லா தமிழ் காமெடியன்கள் ஹீரோவாகிவிட்ட நிலையில் இவரது காமெடி தமிழ் சினிமாவில் கல்லா கட்டும் என நம்பலாம்..


டெக்னீசியன்ஸ்….

மாதேஷ் மாணிக்கவேல் ஒளிப்பதிவு செய்ய சித்த குமார் இசையமைத்துள்ளார்.. இருவரும் தங்கள் பணிகளில் நேர்த்தி.. அழகான திரைக்கதைக்கு அச்சாணியாக இருந்துள்ளனர்..

ஆண்பாவம் பொல்லாதது என்ற தலைப்பினால் இது பெண்களுக்கு எதிரான பாடம் என்று நினைக்க வேண்டாம்.. இருவருக்கும் சம அளவில் தீர்ப்பை கொடுத்து திரைக்கதையில் பொல்லாதவன் ஆக மாறி இருக்கிறார் வசனகர்த்தா சிவக்குமார் முருகேசன்.. அதற்கு உணர்வுப்பூர்வமான திரை வடிவம் கொடுத்து படத்தை குடும்ப காவியமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் கலையரசன் தங்கவேல்..

சேலை கட்டி பார்த்த அம்மா & அக்காவை பார்த்து வளர்ந்த இளைஞர்கள் இன்று மனைவிகளின் மாடர்ன் உடையில் எப்படி மாட்டிக் கொள்கிறார்கள்.? என்ற வசனங்கள் சிறப்பு..

சேலை சேல்ஸ்.. மேக்கப் ஷாப்பிங் என பெண்களின் மோகத்தையும் சொல்லி பெண்களை கிண்டல் அடித்திருக்கிறார்..

அதேசமயம் ஒரே காட்சியில் இரண்டு பெண்களின் சூழ்நிலை.. அவர்கள் வாழும் வாழ்வியலை வசனங்களாக சொல்லி ஆண்களைக்கூட கைதட்ட வைக்கிறார் இயக்குனர் கலையரசன் தங்கவேல்..

சமீபத்தில் வெற்றி பெற்ற டூரிஸ்ட் பேமிலி, டாடா, குடும்பஸ்தன், குட் நைட், பார்க்கிங் உள்ளிட்ட படங்களில் வரிசையில் இந்த படமும் இணையும்..

வாழ்த்துக்கள்🌹🌹

 

Aan Paavam Polladhadhu review