எனக்கு நானே போட்டின்னு ரஜினி & விஜய் சொன்னாங்களே..; அந்த வரிசையில் பிரதீப்
எனக்கு நானே போட்டின்னு ரஜினி & விஜய் சொன்னாங்களே..; அந்த வரிசையில் பிரதீப்
ரஜினி மற்றும் விஜய் சில நேரங்களில் மேடையில் பேசும்போது என் படங்களே எனக்கு போட்டி… எனக்கு நானே போட்டி என்று கூறுவதை நாம் கேட்டிருக்கிறோம்.
இந்த வரிசையில் தனக்கு தன்னுடைய படத்தை போட்டியாக வைத்திருக்கிறார் நடிகர் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன்..
அது என்னவென்று பார்ப்போம்…
கோமாளி லவ் டுடே டிராகன் ஆகிய மூன்று ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகர் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன்.
தற்போது, இவரது நடிப்பில் எல்ஐகே (லவ் இன்சுரன்ஸ் கம்பெனி), டூட் DUDE எனும் இரண்டு படங்கள் உருவாகியுள்ளன.
நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் எல்ஐகே படத்தை இயக்க இதில், நாயகியாக கீர்த்தி ஷெட்டியும் எஸ்ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் டூட் படத்தை இயக்க நாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார்.
இந்நிலையில், இந்த இரண்டு திரைப்படங்களும் 2025 தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகவிருக்கிறது…
Pradeeps Dude and LIK two movies release on Diwali 2025

