கிங்டம் தெலுங்கு – திரை விமர்சனம்…
கிங்டம் தெலுங்கு – திரை விமர்சனம்…
ஸ்டோரி…
1920 ஆம் ஆண்டில் கதை தொடங்குகிறது அதை எடுத்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு 1990 காலங்கட்டங்களில் கதை நகருகிறது.. இதில் கான்ஸ்டபிள் ஆக பணிபுரிகிறார் விஜய் தேவரகொண்டா.. 18 வருடங்களுக்கு முன்பு தொலைந்து போன தன் அண்ணனை தேடி அலைகிறார்..
ஒரு கட்டத்தில் இவரது அண்ணன் ஸ்ரீலங்காவில் தங்க கடத்தல் தொழில் செய்து இருப்பதாக இவருக்கு தெரிய வருகிறது.
இதனையடுத்து இவரும் அங்கு சென்று நுழைகிறார்.. ஒரு கட்டத்தில் அண்ணன் தம்பி இருவரும் புரிந்து கொள்கின்றனர்..
ஆனால் அந்த தங்க கடத்தல் கேங்ஸ்டர் மாஃபியா குழுவில் அண்ணன் ஒரு தலைவனாக இருப்பதால் அவரால் வெளியே வர முடியவில்லை.. இந்த சூழ்நிலையில் அந்த கும்பலுக்கு ஒரு போலீஸ் இன்பார்மர் வந்துள்ளதாக தெரிகிறது.

அண்ணன் & தம்பி இருவரும் மீதும் சந்தேகம் கொள்கின்றனர்.. எனவே அண்ணன் தம்பியை போட்டுக் கொடுத்தாரா.? தம்பியை காப்பாற்றினாரா.? தம்பி என்ன செய்தார் போலீசுக்கு உடந்தையாக இருந்தாரா.? அல்லது அண்ணனுக்காக தன் தொழிலுக்கு துரோகம் செய்தாரா.? என்பதெல்லாம் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
விஜய் தேவரகொண்டா அசத்தல்.. இவரது சிகை அலங்காரமும் இவரது தோற்றமும் இவரது உடல் மொழியும் செம.. மிரட்டல் இடத்தில் பணிந்து போவதும் பனியும் இடத்தில் மிரட்டலும் ரசிக்கலாம்..
விஜய் தேவரகொண்டாவின் அண்ணன் வேடத்தில் சத்யதேவ்.. இருவரும் நிஜமான அண்ணன் – தம்பி தோற்றத்தில் இருப்பது படத்திற்கு பெரிய பலம்..
நாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸு.. வசீகரமான அழகு முகம்… சில காட்சிகளில் கீர்த்தியும் சில காட்சிகளில் ராஷ்மிகா போல சாயல் இருப்பது இவருக்கு ப்ளஸ்..
ஆனால் அவருக்கான பெரிய வேலை இல்லை.. முருகன் கேரக்டரில் வெங்கடேஷ், தேசிய பாதுகாப்பு துறை உயர் அதிகாரியாக மனிஷ் சவுத்ரி… பழங்குடி இன மக்களின் குருவாக ஐயப்பா பி.சர்மா, இலங்கை மாஃபியா பாபுராஜ் ஆகியோரும் படத்தில் கச்சிதம்..

டெக்னீசியன்ஸ்…
ஸ்ரீலங்காவில் வசிக்கும் பழங்குடியின மக்கள்… அதைத் தொடர்ந்து தங்க கடத்தல் கும்பல் என 1990 காலகட்டத்திற்க்கே அழைத்துச் செல்கிறார் இயக்குனர்..
அனிருத் இசையமைத்திருக்கிறார்.. ஆக்சன் எமோஷன் என அனைத்துக் காட்சியிலும் அனிருத் அசத்தல்.. கிங்டம் படத்திற்கு இசை மகுடம் சூட்டி இருக்கிறார்..
ஒளிப்பதிவாளர்கள் கிரிஸ் கங்காதரன் & ஜோமன் டி.ஜான் ஆகியோர் படத்தை பிரமாண்டமாக காட்டியிருக்கின்றனர்.. இலங்கை ராணுவ சேசிங் & ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டி இருக்கின்றனர்..

இயக்குநர் கௌதம் தின்னனுரி.. அண்ணனை தேடும் போலீஸ் கான்ஸ்டபிள்.. குற்ற பின்னணி கொண்ட கும்பல் சதி, போலீஸ் உளவாளி, இலங்கையில் சிக்கிய அகதிகள், பழங்குடியின மக்கள், தங்க கடத்தல் கேங்ஸ்டேர்ஸ்.. இது அனைத்தையும் கலந்து கமர்சியல் விருந்து படைத்திருக்கிறார் கௌதம் தின்னுரி..
Kingdom movie review

