மலையாள அழகி அர்ஷாவின் ஆசையை நிறைவேற்றுவாரா சிவகார்த்திகேயன்.?

மலையாள அழகி அர்ஷாவின் ஆசையை நிறைவேற்றுவாரா சிவகார்த்திகேயன்.?

மலையாள அழகி அர்ஷாவின் ஆசையை நிறைவேற்றுவாரா சிவகார்த்திகேயன்.?

 

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகை ஆர்ஷா சாந்தினி பைஜூ.. சமீபத்தில் வெளியான துடரும் படத்தில் மோகன் லாலுடன் நடித்திருந்தார்.

தற்போது இவர் ராஜவேல் இயக்கிய ‘ஹவுஸ் மேட்ஸ்’ என்ற படத்தில் தர்ஷனுடன் இணைந்து நடித்துள்ளார். இதில் காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜூ , வினோதினி, தீனா, ஹென்ரிக் ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியீடுகிறது.. இந்தப் படம் இன்று ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியாகிறது.

இந்த படம் தொடர்பான புரமோஷன் பணியில் நடிகை அர்ஷா சாந்தினி பைஜூ கலந்து கொண்டார்..

அப்போது ஒரு புரமோஷன் நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “தமிழ் சினிமாவில் நடிப்பது எனக்கு கனவாக இருந்தது. அந்த ஆசை தற்போது நிறைவேறி விட்டது.. சந்தோஷத்தில் இருக்கிறேன்.

தற்போதைய தமிழ் நடிகர்களில் யாருடன் நடிக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு.. ” சிவகார்த்திகேயன் உடன் நடிக்க ஆசை..

அவரின் ஆக்ட்டிங், காமெடி டைமிங், அவரது அட்டிட்யூட் எனக்கு ரொம்ப பிடிக்கும்,” என்றார்..

 

I like to act with Sivakarthikeyan says Arsha Baiju