JINN ஜின் தி பெட் விமர்சனம்..; இது பேயா.? வளர்ப்பு நாயா.?

JINN ஜின் தி பெட் விமர்சனம்..; இது பேயா.? வளர்ப்பு நாயா.?

 

JINN ஜின் தி பெட் விமர்சனம்..; இது பேயா.? நாயா.?

 

ஸ்டோரி…

மலேசியாவில் வேலை செய்யும் முகேன் ராவ் இந்தியாவுக்கு திரும்பும் போது அங்கு ஒரு பழமையான ஜின் பெட்டி ஒன்றை வாங்கி வருகிறார்.. அது பார்ப்பதற்கு பெட்டி போல காணப்பட்டாலும் அது வளர்ச்சி அடையும் என்பதால் அதற்கு இரவு நேரங்களில் பாலும் பிஸ்கட்டும் கொடுத்து வளர்த்து வருகிறார்.

இவருக்கு ஜின் வந்த நேரத்தில் பல நல்ல நிகழ்ச்சிகள் நடப்பதால் அதை ராசியாக கருதுகிறார். ஆனால் வீட்டில் உள்ள அனைவருக்கும் அதுவே பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.. பலருக்கும் விபத்து ஏற்படுகிறது..

இதனால் வீட்டில் உள்ளவர்கள் ஜின் என்ற அந்த பெட்டியை தூக்கி எறிய சொல்கின்றனர்… மேலும் முகேனின் மனைவி பவ்யாவை கொல்ல முயற்சிக்கிறது..

இறுதியில் என்ன நடந்தது.? ஜின் பின்னணி என்ன.? நிஜமாலுமே ஜின் வளரும் ஆற்றல் கொண்டதா.? என்பதெல்லாம் மீதிக்கதை..

 

கேரக்டர்ஸ்…

முகேன் ராவ் செம ஸ்மார்ட்டாக இருக்கிறார்.. காதல் காட்சிகள் & ஆக்சன் காட்சிகளில் தூள் கிளப்பியிருக்கிறார்.. படம் முடிந்து பின் எண்டு கார்டில் போடப்படும் ‘குட்டிமா.. குட்டிமா க்யூட் மா..’ என்ற பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும்.. டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் அருமையான நடன அசைவுகளை போட்டு அசத்திருக்கிறார்..

நாயகி பவ்யா அழகு பதுமை.. கலர்ஃபுல்லான ஆடைகளில் வந்து கவர்ச்சி இல்லாமல் நம்மை ரசிக்க வைக்கிறார்..

பாலசரவணன் டைமிங் காமெடி சிறப்பு.. சாமியாராக கயல் தேவராஜ் நல்ல தேர்வு.. மற்றும் இமான் அண்ணாச்சி வினோதினி, வடிவுக்கரசி, நிழல்கள் ரவி, ராதா ரவி ஆகியோரும் உண்டு..

டெக்னீசியன்ஸ்…

விவேக் மெர்வின் ஆகிய இருவரின் இசை ரசிக்க வைக்கிறது.. பாடல்களும் பட்டையை கிளப்பி இருக்கிறது… காதலுக்கு ஒரு பாட்டு ஆட்டத்திற்கு ஒரு பாட்டு என ரசிக்க வைக்கின்றனர்..

அர்ஜுன் ராஜாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.. ரசிக்க வைக்கிறது..

ஜின் என்பதை ஒரு பேயாக காட்டி விட்டு அதற்கு பின்னனி குரல் கொடுத்தவர் காமெடி செய்துவிட்டார்.. அதை தவிர்த்து மிரட்டலான குரல் கொடுத்து பயமுறுத்தி இருக்கலாம்..

வீடுகளில் பூனை மற்றும் நாய் வளர்ப்போருக்கு இந்த ஜென் பிடிக்க வாய்ப்பு உண்டு..

ஜின் வழக்கமான பேய் பட அனுபவத்தை கொடுத்தாலும் ஜின் ஃபிளாஷ்பேக் மற்றும் குழப்பமான திரைக்கதைகளால் இந்த ஜின் கொஞ்சம் அயற்சி தருகிறது..

Jinn The pet movie review

—–