மீசைய முறுக்கு 2 விமர்சனம்…
மீசைய முறுக்கு 2 விமர்சனம்…
ஸ்டோரி…
9 வருடங்களுக்கு முன்பு வந்த மீசைய முறுக்கு பட முதல் பாதத்தில் ஹிப் ஹாப் இசையை தனது சொந்த வாழ்க்கை பயணத்தை சொல்லி இருந்தார் ஆதி.. அதில் மறைந்த நடிகர் விவேக் முக்கியமான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.
இந்த மீசைய முறுக்கு இரண்டாம் பாகத்தில் கர்நாடக இசையை எதிர்த்து கானா இசை கலைஞர்கள் தங்களுக்கான அங்கீகாரத்தை பெற முயற்சிக்கும் ஒரு புதிய பயணம் தான் இந்த படம்..
தாத்தா – அப்பா – மகன் என மூன்று தலைமுறையாக கானா இசை கலைஞர்களுக்காக போராடுகின்றனர்.. தாத்தா காலத்தில் நிறைவேற்ற முடியாத லட்சியத்தை.. அப்பா காலத்தில் நிறைவேற்ற முடியாத லட்சியத்தை பேரன் எப்படி நிறைவேற்றினார் என்பதுதான் திரைக்கதை..

கேரக்டர்ஸ்..
மூன்று கேரக்டர்களும் இயக்குனர் ஆதியே நடித்திருக்கிறார்.. கொஞ்சம் சிகை அலங்காரம் தாடி மீசை என உடல் மொழியிலும் கொஞ்சம் மாற்றம் காண்பித்திருக்கிறார்.. ஒரு கட்டத்தில் தாத்தாவாக கருணாஸ்.. அப்பாவாக பாபா பாஸ்கர் நடித்துள்ளனர்.. மூன்றாம் தலைமுறையில் ஆதியே ஜென்சி கிட்டாக நடித்திருக்கிறார்..
நாயகன் ஆதிக்கு ஜோடியாக சைத்ரா ஆச்சார், கெட்டிகா சர்மா, ரம்யா ரங்கநாதன்.. மூன்று தலைமுறைக்கு ஏற்ப ஹீரோயின்களுக்கு கேரக்டர்.. மூவரும் அழகிலும் நடிப்பிலும் அசத்தியுள்ளனர்.
ஆறா பத்துக்கு பத்து என ஆட்டம் போட்டு கெட்டிகா கெட்டிக்காரியாக கவர்ந்திருக்கிறார்.. பரதம் கற்ற பெண்மணியாக ரம்யா ரம்யமான நடிப்பை கொடுத்திருக்கிறார்..
தன்னம்பிக்கை தரும் மனைவியாக சைத்ரா நல்ல நடிப்பு..
ஆதியின் நண்பராக ஹர்சத் கான்.. படத்தை ஜாலியாக கொண்டு செல்கிறார் இவரது நடிப்பு சிறப்பு..
கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன், சாரா, கருணாகரன் உள்ளிட்ட அனைவரும் சூப்பர்..
திறமையான இளைஞர்களுக்கு வழிகாட்டும் நபராக யோகி பாபு..

டெக்னீசியன்ஸ்…
படத்தொகுப்பாளர் ஃபென்னி ஆலிவர்..
ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்ரமணியம்.. மூன்று காலகட்டத்திற்கு ஏற்ப கேமரா கைவண்ணத்தை காட்டி இருக்கிறார்.. அனைத்தும் கலர்ஃபுல்லாக சிறப்பு..
படத்தில் 14 பாடல்கள்.. சில பாடல்கள் தனியான இசை.. சில பாடல்கள் கதையுடன் சேர்ந்து பயணிக்கிறது… ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தம் நஞ்சு என்பது போல.. பாடல்கள் இடையே தான் வசனங்கள் இடம் பெற்றுள்ளது..
மேடையில் ஆடினாலும் சாலையில் ஆடினாலும் கலை ஒன்றுதான்.. கலைஞர்கள் ஒன்றுதான் இசை ஒன்றுதான் என கானா கலைஞர்களுக்காக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் இசையமைப்பாளர் ஆதி..
கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி பாடி இசை அமைத்து தன் அசாதாரண உழைப்பை அர்ப்பணிப்பை படம் முழுவதும் கொடுத்திருக்கிறார் ஹிப் ஹாப் ஆதி..

நிறைவேறாமல் போன தாத்தா அப்பாவின் ஆசையை பேரன் நிறைவேற்றும் அந்த கடைசி கிளைமாக்ஸ் சாங் கானா ரசிகர்களுக்கு இசை விருந்து..
Meesaiya Murukku 2 movie review

