‘என்ன விலை’ பட டிக்கெட் ‘என்ன விலை’ என்று கேட்டு குவியும் ரசிகர்கள்..; ஆனந்தக் கண்ணீரில் கருணாஸ்..!
‘என்ன விலை’ பட டிக்கெட் ‘என்ன விலை’ என்று கேட்டு குவியும் ரசிகர்கள்..; ஆனந்தக் கண்ணீரில் கருணாஸ்..!
கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கருணாஸ் மற்றும் நிமிஷா ஷஜயன் நடிப்பில் உருவான ‘என்ன விலை’ என்ற படம் வெளியானது..
ஏற்கனவே பல சர்வதேச விருதுகளை வென்ற இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது..
இந்தப் படத்தை பார்த்த ரசிகர்களும் படத்தை வெகுவாக பாராட்டி சமூகத்திற்கு தேவையான படத்தை கொடுத்துள்ளனர் என்றனர்..
குற்றம் செய்யாத ஒருவரை நிரபராதி என்று சொன்னால் மட்டும் பத்தாது.. குற்றவாளி என்று தண்டித்து விட்டு பின்னர் நீதிமன்றம் அவரை நிரபராதி என்று மக்கள் மத்தியில் தெரியப்படுத்த வேண்டும் என்ற கருத்தை இது வலியுறுத்தி இருந்தது..

எனவே இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது
தற்போது வெளியாகி இரண்டு வாரங்களில் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.. ரசிகர்களின் பாராட்டு மழையில் ஆனந்த கண்ணீரில் மிதந்து வருகிறார் கருணாஸ்..
இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Karunas and Nimisha Happy with Enna Vilai movie response

