ஜெடூசி விமர்சனம்.. பெண்களின் வலியை சொல்லும் ஆயுதம்
ஜெடூசி விமர்சனம்.. பெண்களின் வலியை சொல்லும் ஆயுதம்
ஸ்டோரி…
திருவண்ணாமலை பகுதியில் பிரபலமான கல்லூரியில் சில கல்லூரி மாணவிகள் மற்றும் பிரின்ஸ்பால் பேராசிரியை உள்ளிட்ட சில நபர்கள் கொல்லப்படுகின்றனர்..
கொலையாளி யார்.? அவர்களை ஜெடூசி மூலம் குத்தி கொலை செய்ய என்ன காரணம் ? அந்தக் கொலையாளியின் நோக்கம் என்ன.? கோரிக்கை என்ன என்பதுதான் படத்தின் திரைக்கதை..
கேரக்டர்ஸ்…
1. ஸ்ரீதர் – சக்தி
(ஹீரோ)
2.ஸ்வேதா -காவேரி
( ஹீரோயின் )
3.சினி யுதன் -அனு
(2nd ஹீரோயின்)
4. பிளாக் பாண்டி -சின்னா
லேப்டாப் சர்வீஸ் இன்ஜினியர்.. மலைவாழ் பகுதி இன மக்கள் என இரண்டு கேரக்டரிலும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார் ஸ்ரீதர்.. இரண்டிற்கும் உடல் மொழியும் மாற்றி சிகை அலங்காரத்தை மாற்றி இருப்பது சிறப்பு..
இவரின் நண்பராக பிளாக் பாண்டி.. நீண்ட நாட்களுக்குப் பிறகு காமெடியும் செய்து படத்தை கலகலப்பாக்கி இருக்கிறார்..
மலைவாழ் பெண்ணாக ஸ்வேதா.. இந்த ஜெடுசியின் ஆணிவேர் இவரே.. உடல் அழகிலும் உடல் மொழியிலும் கண்களாலும் கவர்ந்திருக்கிறார் ஸ்வேதா.. கம்பீரமான போலீஸ் கேரக்டரில் அணு அசத்தியிருக்கிறார்..
இவர்களுடன்.. . பாவா செல்லதுரை -கொம்பன் ( ஹீரோயின் அப்பா )..ஜெயந்திமாலா -வள்ளி (ஹீரோ அம்மா )… ஏ வெங்கடேஷ் – J.P (எ) ஜெயப்பிரகாஷ்-வில்லன்… அருவி மதன் — (D.S.P விக்ரம்).. அசோக் பாண்டியன் – (கண்ணபிரான்) ஆகியோர் கதைக்கு பக்கபலமான கேரக்டரில் அசத்தல்..

டெக்னீசியன்ஸ்…
இசையமைப்பாளர் – விக்னேஸ்வரன்
ஒளிப்பதிவாளர் – நாகஅர்ஜுன் V.S… திருவண்ணாமலை மற்றும் மலைவாழ் மக்களின் வாழ்வியலை தத்ரூபமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்..
மக்கள் தொடர்பு–சரண்
என் வாழ்க்கை மாறியதோ… எல்லாரும் மனிதர்கள் என்று நம்பி ஏமாந்தேன்… இந்த ஒரு பாடல் வரியில் பெண்களின் வலியை உலகிற்கு சொல்லி இருக்கிறார் பாடலாசிரியர்.. இசை மூலம் அந்த வார்த்தைகளுக்கு உயிரோட்டம் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் விக்னேஸ்வரன்..
தயாரிப்பாளர் – நட்ராஜ் ஏகாம்பரம் விஜயசாந்தி ஸ்ரீதர்
இயக்குனர் – நட்ராஜ் ஏகாம்பரம்
பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் கல்விக்காக போராடும்போது கல்வியாளர்கள் அவர்களை காயப்படுத்துவதும் அதற்கு சில பெண்களே உடந்தையாக இருப்பதையும் அப்பட்டமாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.

பாலியல் வன்முறைக்கு ஆண்கள் மட்டும் காரணம் அல்ல சில பெண்களும் தான் என்பதையும் சொல்லி இருக்கிறார் மேலும் பெண்கள் என்றால் அவர் நீதிபதியாக இருந்தாலும் அவருக்கும் பாலியல் தொல்லை இருந்திருக்கும் என்பதை சொல்லி பெண் என்பவள் போற்றப்பட வேண்டியவள் அவளை காயப்படுத்தக் கூடாது என சோசியல் மெசேஜ் கொடுத்திருக்கிறார் இயக்குனர் நட்ராஜ் ஏகாம்பரம்..
ஒரு சின்ன பட்ஜெட் படத்திற்குள் மெசேஜ் கொடுத்திருந்தாலும் இன்னும் கூடுதல் கலைஞர்கள் ஒத்துழைப்பும் இருந்திருந்தால் இந்த படம் ஜெடூசி நிச்சயம் சமூக நீதிக்கான படமாக அமைந்திருக்கும்..
Srithar in Jedusi movie review

