தமிழ் சினிமாவுக்கு ‘தங்க மீன்களை தந்த ராம்..; ‘ஏழு கடல் ஏழு மலை’ அனுபவத்திற்கு காத்திருப்போம்..!

தமிழ் சினிமாவுக்கு ‘தங்க மீன்களை தந்த ராம்..; ‘ஏழு கடல் ஏழு மலை’ அனுபவத்திற்கு காத்திருப்போம்..!

 

தமிழ் சினிமாவுக்கு ‘தங்க மீன்களை தந்த ராம்..; ‘ஏழு கடல் ஏழு மலை’ அனுபவத்திற்கு காத்திருப்போம்..!

 

 

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தரமான படங்களை கொடுத்து வருபவர் டைரக்டர் ராம்.. (இவரின் சிஷ்யர் தான் மாரி செல்வராஜ்.)

2007ம் ஆண்டு தனது முதல் முதல் படமான ‘கற்றது தமிழ்’ படத்தை இயக்கினார் ராம்.. தற்போது 2026 ஆம் ஆண்டு.. 20 வருட பயணத்தை சினிமாவில் கடந்து இருக்கிறார் இயக்குனர் ராம்..

2007 ஆம் ஆண்டு ரிலீசான ‘கற்றது தமிழ்’ என்ற படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் ராம்.. இதனையடுத்து 2013 ஆம் ஆண்டு தங்க மீன்கள் படத்தை கொடுத்தார்.. அப்பா மகள் பாசத்தை உணர்ச்சி பொங்க சொல்லியிருந்தார் ராம்..

2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த பட சிறப்பு தேசிய விருதை இந்த ‘தங்க மீன்கள்’ பெற்றது..

அதன் பின்னர் 2017 ஆம் ஆண்டில் ஆண்ட்ரியா நடித்த தரமணி… அதன் பின்னர் 2019 ஆண்டில் மம்மூட்டி நடித்த பேரன்பு.. 2025 ஆம் ஆண்டில் மிர்ச்சி சிவா நடித்த “பறந்து போ’ உள்ளிட்ட படங்களை தந்தார்..

20 வருடங்களில் ஆறு படங்களை மட்டுமே டைரக்டர் ராம் இயக்கியிருக்கிறார்.. ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.. அனைத்தும் ரசிகர்களை கவர்ந்துள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல.

இந்த வாரம் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராம் இயக்கத்தில் உருவான ‘ஏழு கடல் ஏழு மலை’ படம் ரிலீசாக உள்ளது.

சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க நிவின்பாலி – சூரி – அஞ்சலி உள்ளிட்ட நடித்துள்ளனர்..

மேலும் முக்கியமான கேரக்டரில் எலி ஒன்று நடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.. இந்த படத்திற்காக மட்டும் கிட்டத்தட்ட 70 எலிகள் ஷூட்டிங்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது..

மேலும் நிவின் பாலியின் கேரக்டர் 4000 வருடங்கள் வாழ்ந்த ஒரு நபர் பற்றிய கதை என்பது இந்த படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்து ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது…

எனவே வழக்கம்போல இயக்குனர் ராமின் அடுத்த தரமான ‘ஏழு கடல் ஏழுமலை’ என்ற படத்தைக் காண காத்திருப்போம்..

 

தங்க மீன்கள் மற்றும் சவரக்கத்தி உள்ளிட்ட படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ராம்..

 

Director Rams 20 years of Tamil Cinema