மையல் திரை விமர்சனம்…

மையல் திரை விமர்சனம்…

மையல் திரை விமர்சனம்…

 

ஸ்டோரி…

ஆடு திருடி பிழைப்பு நடத்தி வருகிறார் நாயகன் சேது.. ஒரு கட்டத்தில் திருடும்போது மக்களிடமிருந்து தப்பிப்பதற்கு கிணற்றில் குதித்து விடுகிறார்.. அப்போது நாயகி சம்ரிதி தாரா இவரை காப்பாற்றி உதவவே இருவருக்கும் காதல் மலர்கிறது.

காதலிக்காக மனம் திருந்தி திருந்தி வாழ நினைக்கிறார் நாயகன் சேது.. அந்த சூழ்நிலையில் வில்லன் தேனப்பன் சதித்திட்ட வலையில் சேது சிக்கிக் கொள்கிறார்.. தேனப்பனின் ஆலோசனை பேரில் திருட்டுப் பழியை சேது மீது போடுகிறார் போலீஸ் ஆர்பி பாலா..

அதன் பிறகு என்ன ஆனது? காதலியை கரம் பிடித்தாரா? திருந்தி வாழ நினைக்கையில் குற்றம் இவர் மீது விழ நாயகன் என்ன செய்தார்.? சிறைக்கு சென்றாரா.? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

மைனா சேது, சம்ரிதி தாரா, பி.எல்.தேனப்பன், சூப்பர் குட் சுப்பிரமணி, ரத்தின கலா, ஆர் பி. பாலா

மைனா படத்தில் கம்பீரமான காவலர் நடிப்பை கொடுத்த சேது இந்த படத்தில் கதையின் நாயகனாக மாறி இருக்கிறார்.. தன் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார்.. முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் இவரது நடிப்பில் மெச்சூரிட்டி தென்படுகிறது..

நாயகியாக சம்ரிதி தாரா அழகிலும் நடிப்பிலும் கவர்ந்து விடுகிறார்.. கிராமத்து பெண் உடல் மொழியில் ஈர்த்து விடுகிறார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர் பி பாலா மிரட்டல் வில்லன்.. தேனப்பனும் வில்லத்தனத்தில் கெத்து தான்.. போலீஸ் ஏட்டாக சூப்பர் குட் சுப்பிரமணி, சூனியக்காரி கிழவியாக ரத்ன கலா ஆகியோரும் சிறப்பு..

டெக்னீசியன்ஸ்…

தயாரிப்பு : ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி

இயக்கம் : ஏ.பி.ஜி. ஏழுமலை

காதல் தொடர்பான சென்டிமென்டை கலந்து திரைக்கதை எழுதி வசனம் எழுதி இருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்…

திருந்தி வாழ நினைக்கும் ஒரு திருடனுக்கு அவன் செய்த முன்னாள் குற்றங்கள் எப்படி வினையாகிறது என்பதை திரைக்கதை மூலம் உணர்த்தி இருக்கிறார் எழுத்தாளர்..

‘மைனா’ படம் தான் தனக்கு (சேது) முகவரி கொடுத்தது என்பதால் என்னவோ இந்த படமும் நிறைய காட்சிகளில் மைனா சாயலை தொடர்பு படுத்தி இருக்கிறது.. முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சி..

பால பழனியப்பனின் ஒளிப்பதிவில் கிராமத்து இரவு காட்சிகளும் அழகு..

அம்ர் கீத் இசையமைத்திருக்கிறார்.. இவர் (முன்னாள் ) இசையமைப்பாளர் சௌந்தர்யனின் மகன் என்பது கூடுதல் தகவல்.. தன் தந்தைக்கு பெருமை சேர்க்கும் வகையில் பாடல்களை கொடுத்திருப்பது சிறப்பு..

Maiyal movie review