வேம்பு விமர்சனம்… சிலம்ப சிங்கப் பெண்கள்

வேம்பு விமர்சனம்… சிலம்ப சிங்கப் பெண்கள்

வேம்பு விமர்சனம்… சிலம்ப சிங்கப் பெண்கள்

 

ஸ்டோரி…

நாயகி ஷீலாவை சிலம்ப கலையில் பயிற்சி பெற வைத்து மாநில அளவில் போட்டிகளில் பங்கேற்க முயற்சி செய்கிறார் தந்தை.. ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக ஷீலாவின் உறவினர் பையனை திருமணம் செய்து வைக்கிறார்.

இதனால் சிலம்ப கலையை கற்பதில் தடங்கல் ஏற்படுகிறது.. ஆனாலும் சிலம்பு போட்டிகளில் நீ பங்கேற்கும் வரை நமக்குள் தாம்பத்திய வேண்டாம் என்று உறுதுணையாக நிற்கிறார் கணவர் ஹரிகிருஷ்ணன்.

ஒரு கட்டத்தில் மின்னல் தாக்கி ஹரியின் கண் பார்வை பறிபோகிறது.. இதனால் குடும்ப பாரத்தை சுமக்க வேண்டிய பொறுப்பு ஷீலாவுக்கு வருகிறது.. அதன் பிறகு என்ன நடந்தது.?

சிலம்பம் போட்டிகளில் பங்கேற்றாரா.? கணவனுக்கு உதவியாக இருந்தாரா.? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

ஹரி கிருஷ்ணன், ஷீலா, மாரிமுத்து, கர்ணன் ஜானகி…

கதையின் நாயகியாக ஷீலா தன் கேரக்டரில் ஜொலிக்கிறார்.. தற்காப்பு கலை பெண்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை தன் கேரக்டரில் உணர்த்திருக்கிறார்.. திருமணத்திற்கு முன்பு ஷீலாவின் சிலம்பு ஆர்வம் எத்தகையது என்பதை என்பதை இன்னும் காட்சிப்படுத்தி கதைக்கு வலு சேர்த்து இருக்கலாம்.. திரௌபதி படத்தில் ஷீலாவிடமிருந்து வீரம் இதில் மிஸ்ஸிங்..

ஹரி கிருஷ்ணன் கொடுத்த கேரக்டரில் ஓகே.. கண் பார்வை போன பிறகு நடிப்பில் மெனக்கடல் தெரிகிறது.. இவர்களுடன் மற்ற கலைஞர்களும் கேரக்டருக்கு வலு சேர்த்து இருக்கின்றனர்.. முக்கியமாக ஷீலாவின் தந்தை கேரக்டர் சிறப்பு..

 

 

டெக்னீசியன்ஸ்…

தயாரிப்பு – கோல்டன் ஷ்யூர்ஸ் மற்றும் மஞ்சள் சினிமாஸ்

இயக்கம் – ஜஸ்டின் பிரபு

இசை – மணிகண்டன் முரளி

ஒளிப்பதிவாளர் குமரனின் பங்களிப்பு சிறப்பு.. கிராமத்து அழகை அழகாக படம் பிடித்திருக்கிறார்..

கிராமத் தன்மைக்கு ஏற்ப இசை மூலம் உயிரோட்டம் கொடுத்து இருக்கிறார் இசையமைப்பாளர் மணிகண்டன் முரளி.. படத்தில் எந்த திருப்புமுனையும் இல்லாமல் யூகிக்கக்கூடிய காட்சிகள் இருப்பதால் படத்தில் பெரிய நாட்டம் ஏற்படவில்லை..

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தினம் தினம் நடந்தேறும் வேளையில் தற்காப்பு கலையின் அவசியத்தை உணர்த்தி இருக்கிறார் இயக்குனர் ஜஸ்டின் பிரபு..

பள்ளியில் பாடம் சொல்லிக் கொடுப்பதைப் போல தற்காப்பு கலையும் சொல்லிக் கொடுக்க அரசையும் வலியுறுத்தி சமூக விழிப்புணர்வு இந்த வேம்பு மூலம் உணர்த்தி இருக்கிறார் டைரக்டர்..

Vembu movie review