தி டோர் விமர்சனம் 3.5/5.. ‘டோர்’ திறந்தால் திரில்லர் ஜோர்.!
தி டோர் விமர்சனம் 3.5/5.. ‘டோர்’ திறந்தால் திரில்லர் ஜோர்.!
14 வருடங்களுக்குப் பிறகு பாவனா ரி என்ட்ரி கொடுத்திருக்கும் படம் ‘டோர்’.. ஜெய் தேவ் என்பவர் இயக்கியிருக்கிறார்..
டோர் என்ற இந்த தலைப்புக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்று நாம் இயக்குனரிடம் நேரில் பேசுகையில்.. எப்போது மனிதர்களுக்கும் அமானுஷ்யங்களுக்கும் இடையில் ஒரு நீண்ட சுவர் இருக்கும்.. அதில் இருக்கும் கதவுகளைத் திறந்து அமானுஷ்யங்கள் மனித உலகத்திற்கு நுழையும் என்பதையே தி டோர் படத்தில் பொருளாக நம்மிடம் பகிர்ந்து கொண்டார்..
சரி இப்பொழுது படத்தின் விமர்சனம் பார்ப்போம்..
ஸ்டோரி…
கட்டிடக்கலை நிபுணர் பாவனா.. இவர் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.. ஒரு நாள் விபத்தில் தன் தந்தையை இழந்த பின் விரக்தியில் இருக்கும் இவர் வேலையை விட முயற்சிக்கிறார்.. ஆனாலும் இவரின் தேவையறிந்து மீண்டும் வேலைக்கு அழைக்கிறார் ஜெயபிரகாஷ்.
அதன்படி இவர் கட்டிடப் பணியை மேற்கொள்ளும் பகுதிக்கு ஒரு நாள் சென்று வரும்போது இவரின் கண் முன்னே ஒரு பெண் வந்து மறைவதை காண்கிறார்.. இறந்து போன இவரது தந்தையும் அந்த பெண்ணும் அடிக்கடி இவரது எதிரில் வருவது போல உணர்கிறார்.. அப்படி என்றால் அந்த இடத்திற்கும் தன் தந்தைக்கும் என்ன சம்பந்தம்.? என்பதை அறிய பாவனா எடுக்கும் முயற்சிகளே இந்த படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…
14 வருடங்களுக்குப் பிறகு பாவனா ரி-என்ட்ரி கொடுத்திருக்கும் படம் ‘டோர்’.. எனவே பாவனாவுக்காக அதிகப்படியான காட்சிகளை கொடுத்து முகத்தில் க்ளோஸ் அப் சீன்களை இயக்குனர் & ஒளிப்பதிவாளரும் வைத்திருக்கிறார்கள்.. பாவனாவின் கணவரும் சகோதரரும் இந்த படத்தில் இணைந்து பணி புரிந்திருப்பதால் அவர்கள் பாவனாவுக்கு ஜோடி வைக்கவில்லை போல..
மிடுக்கான ஸ்மார்ட்டான போலீஸ் அதிகாரியாக கணேஷ் வெங்கட்ராம் கொடுத்த பாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார்.
இவர்களுடன் ஜெயப்பிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, நந்தகுமார், கிரிஷ், பாண்டி ரவி, சங்கீதா, சிந்தூரி, பிரியா வெங்கட், ரமேஷ் ஆறுமுகம், கபில், பைரி வினு, ரோஷினி, சித்திக், வினோலியா என பல கலைஞர்கள் இந்த படத்தில் கதை ஓட்டத்திற்கு உணர்வு கொடுத்திருக்கின்றனர்..

டெக்னீசியன்ஸ்…
‘டோர்’ படத்தை தாங்கும் சுவர் போல ஒளிப்பதிவாளரும் இசையமைப்பாளரும் கை கொடுத்திருக்கின்றனர்.. இவர்களின் பணி வெகுசிறப்பு..
ஒளிப்பதிவாளர் : கெளதம்.ஜி..
இசையமைப்பாளர் : வருண் உன்னி
ஒரு பேய் படத்திற்கு திரில்லர் படத்திற்கு ஏற்ப இசையை கொடுத்து மிரட்டலான அனுபவத்தை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் வருண் உன்னி..
இடைவேளைக்கு முன்பு வரை பேய் வருமா? எப்படி வரும்.? என்ற பயத்திலேயே படத்தை நகர்த்தி இருக்கின்றனர்.. இடைவேளைக்குப் பிறகுதான் முழு கதையும் வருகிறது.. எனவே இடைவேளைக்கு முன்பு காட்சிகளை ட்ரிம் செய்திருக்கலாம் எடிட்டர்..
தன் அப்பாவை தேடும் பாவனா ஒவ்வொரு கேரக்டராக நாடும்போது.. அவர் யார் அவர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் பயத்துடன் தொற்றிக் கொள்கிறது.. முக்கியமாக ராம் யார்? ஜார்ஜ் யார்? என்ற குழப்பம் நீடிப்பது டைரக்டர் ஜெயதேவ் டச்..
ஆக இந்த ‘டோர்’ திறந்தால் திரில்லர் ஜோர்..
Bhavanas The Door movie review

