அறம் செய் விமர்சனம்.. அரசியல் மாற்ற அறப்போர்

அறம் செய் விமர்சனம்.. அரசியல் மாற்ற அறப்போர்

 

அறம் செய் விமர்சனம்.. அரசியல் மாற்ற அறப்போர்

ஸ்டோரி…

இப்படத்தின் இயக்குனர் பாலு வைத்யநாதன் இந்த படத்தின் நாயகன்.. இவர் மருத்துவக் கல்லூரி மாணவர்.. இவரின் தோழர் ரஜினி ஜீவா.. இவர்கள் படிக்கும் அரசு கல்லூரி தனியாருக்கு விற்கப்படுவதை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்ட மேற்கொள்கின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம்.. நாயகி அஞ்சனா கீர்த்தி.. இந்த நாட்டில் ஆட்சி மாற்றத்தை விட அரசியல் மாற்றம் தேவை.. அப்பொழுதுதான் ஊழலற்ற உண்மையான ஜனநாயகம் வளர்ந்து நாடு சீராகும் என மக்களுடன் இணைந்து போராடுகிறார்..

இதற்காக பல விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி ஒவ்வொரு துறை சார்ந்த வல்லுனர்களையும் சந்தித்து அதற்கான ஆதரவை திரட்டி வருகிறார்.. ஒரு கட்டத்தில் இந்த இரு போராட்டங்களும் எப்படி இணைந்தது அரசியல் மாற்றம் உருவானாதா.? என்பதுதான் மீதிக்கதை.

கேரக்டர்ஸ் & டெக்னீசியன்ஸ்…

கதை, வசனம், திரைக்கதை எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்திருப்பதோடு, கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார் பாலு எஸ்.வைத்தியநாதன்.

இவருக்கும் ஒரு ஜோடி உண்டு.. நாயகி மேகாலியுடன் 2 பாடலுக்கும் ஆட்டம் போட்டு இருக்கிறார்.. பாடல்களுமே ஒரே சாயலில் இருப்பது போர்.. மேலும் உண்ணாவிரத போராட்டம் நடந்து கொண்டிருக்கும்போது தோழியின் மடியில் படுத்துக்கொண்டு நாயகி டூயட் பாடல் காண்பது ஓவர் கற்பனை.

படம் முழுக்க தேர்தல் பிரச்சாரம் போல சொற்பொழிவுக் கூட்டங்களை நடத்தி நம்மை சோர்வடைய வைத்து விட்டார் இயக்குனர் பாலு வைத்தியநாதன்..

படத்தில் கருத்து இருக்கிறது என்பதை விட கருத்தில்தான் படமே இருக்கிறது என்னும் அளவிற்கு ஒவ்வொரு காட்சியும் நீண்ட வசனங்களை கொடுத்து 1960களில் வந்த வசனங்களைப் போல நீண்ட வடிவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

முக்கியமாக நாயகி அஞ்சனா கீர்த்தி மிகவும் தைரியமான பெண் செந்தாரகை கேரக்டர் கொடுக்கப்பட்டிருந்தாலும் ஏதோ பள்ளி மாணவிகள் மேடைப் பேச்சில் கை செய்கைகளைப் காட்டி காட்டி பேசுவது போல செயற்கை தனமான நடிப்பை கொடுத்திருக்கிறார்..

பாலு வைத்தியநாதன் & ரஜினி ஜீவா இருவரும் கல்லூரி மாணவர்களைப் போலவே அல்ல.. அவர்கள் இருவரும் 35+ வயது உடையவர்களை போலவே தோற்றத்தில் இருக்கின்றனர்.. அட்லீஸ்ட் தாடி மீசையை ஷேவிங் செய்திருக்கலாம்..

ஜாக்குவார் தங்கம், பயில்வான் ரங்கநாதன், அமைச்சர் சொப்பன சுந்தரியாக நடிகை என பல்வேறு கேரக்டர்களும் வந்து போகிறது.. ஆனால் இவை எந்த சுவாரசியத்தையும் கொடுக்கவில்லை.. முக்கியமாக ஜாக்குவார் தங்கத்தின் கேரக்டர் பெயர் காட்பாடி கந்தசாமி.. அவர் எடப்பாடி பழனிச்சாமி போல கை சட்டையை மடித்து காட்டியிருக்கிறார்..

பிரபல இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்.. பின்னணி இசையும் பாடல்களும் கவரவில்லை..

அரசியல் மாற்றத்திற்கான மக்கள் விழிப்புணர்வை இந்த பிரச்சார படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் பாலு.. ஆனால் ஓவர் அட்வைஸ் உடம்புக்கு ஆகாது என்றபடியே படத்தின் கதை அமைக்கப்பட்டு இருப்பது பெரும் குறை.

Aram Sei movie review