குழந்தைகள் முன்னேற்றக் கழகம் விமர்சனம்
குழந்தைகள் முன்னேற்றக் கழகம் விமர்சனம்
ஸ்டோரி…
யோகி பாபு ஒரு அரசியல்வாதி இவருக்கு மனைவி மகன் உள்ளனர்.. இந்த நிலையில் தன் வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணுடன் உடலுறவு கொள்கிறார்.. இதனால் அவருக்கும் ஒரு வாரிசு பிறக்கிறது.
இந்த இரண்டு வாரிசுகளும் வளர்ந்த பின் தங்கள் தந்தை யோகி பாபு போலவே அரசியல் அதிகாரம் காட்ட முயற்சிக்கின்றனர்.. அவர்கள் படிக்கும் பள்ளியில் கூட அரசியல் செய்கின்றனர்.
அதன் பிறகு என்ன நடந்தது.? தந்தையின் இடத்தை யார் அடைந்தார்கள்.? அரசியலில் சாதித்தார்களா? எதிர்காலம் என்ன ஆனது.? என்பதெல்லாம் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
யோகி பாபு வைத்து படத்தின் போஸ்டர் முதல் கதை அனைத்தும் வடிவமைக்கப்பட்டுள்ளது.. ஆனால் பல காட்சியில் அவர் காணாமல் போகிறார்.. ஒருவேளை கால்ஷீட் பிரச்சனையா.? வழக்கம் போல வாடா போடா என்று ஒருமையில் பேசி சில காட்சிகயில் மட்டும் ரசிக்க வைக்கிறார்..
நீண்ட நாட்களுக்குப் பிறகு காமெடி நடிகர் செந்தில்.. அரசியல் தலைவராக அசத்தல்.. இவர் பேசும் அரசியல் வசனங்கள் செம.. ”எத்தனை பேர் வந்து உடைத்தாலும் இறுதியில் காணாமல் போவது அவர்கள் தான், என் கட்சி இல்லை” என்று பேசி கைதட்டல் பெறுகிறார்..
கதையின் நாயகர்களாக 2 சிறுவர்கள் நடித்துள்ளனர்.. இமய வர்மன் & அத்வைத் ஜெய் மஸ்தான்.. இருவரும் படு சுட்டி.. அசால்ட்டா அடிச்சி விட்டுட்டாங்க.. சில காட்சிகள் வயதை மீறியதாக இருந்தாலும், அதில் கூட பயமில்லாமல் தெளிவாக பண்ணி இருக்காங்க..
அரசியலில் பெண் என்றால் ஜெயலலிதாவின் சாயல் இல்லாமல் இருக்குமா? அதற்கு ஏற்ற போல் ஒரு கேரக்டரும் வடிவமைத்துள்ளனர்.. சிறுமி ஹரிகா பெடடாவின் நடிப்பு அருமை..
மயில்சாமி, வைகா ரோஸ், அஸ்மிதா சிங், சுப்பு பஞ்சு, சித்ரா லட்சுமணன், லிஸி ஆண்டனி, சரவணன் உள்ளிட்டோரும் உண்டு..
டெக்னீசியன்ஸ்…
சாதகப் பறவைகள் சங்கரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே.. ஒளிப்பதிவாளர் ஜெ.லக்ஷ்மண் குமாரின் ஒளிப்பதிவும் படத்தொகுப்பாளர் ரிச்சர்ட் கெவின் பணியும் சிறப்பு.. ஆனால் யோகி பாபு சீன்ஸ்கள் தான் வெட்டி ஒட்டியது போல் அப்பட்டமாக தெரிகிறது..
அரசியல் என்றாலே அது பெரியவர்களின் விளையாட்டு ஆனால் அரசியலில் சிறுவர்கள் ஆடும் ஆட்டம் தான் இந்த குழந்தைகள் முன்னேற்றக் கழகம்.. அதை நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் சங்கர் தயாள்.. முக்கியமாக நாம் பார்த்து பழகிய அரசியல் கூத்துக்களை எளிமையாக எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்..
Kuzhaindhaigal munnetra Kazhagam review

