பாட்டல் ராதா விமர்சனம் 3.5/5..

பாட்டல் ராதா விமர்சனம் 3.5/5..

 

பாட்டல் ராதா விமர்சனம் 3.5/5..

ஸ்டோரி…

கட்டுமான தொழிலாளி குரு சோமசுந்தரம் இவரது மனைவி சஞ்சனா நடராஜன்.. பல கனவுகளோடு வாழ்ந்தாலும் குடியால் தன் வாழ்க்கையை தொலைத்து நிற்கிறார் குரு.. இதனால் அவரது மனைவி உடலாலும் உள்ளத்தாலும் பல இன்னல்களை சந்திக்கிறார்.. கணவனின் குடியால் வாழ்க்கையை வெறுக்கும் சஞ்சனா ஒரு கட்டத்தில் போதை மறுவாழ்வு மையத்தில் கணவரை சேர்த்து விடுகிறார்.. ஆனாலும் அவரால் குடியை நிறுத்த முடியவில்லை.. அதன் பிறகு என்ன செய்தார்.. நடந்தது என்ன? என்பதெல்லாம் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

ஒரு குடிகாரனை அப்படியே கண் முன் நிறுத்தி இருக்கிறார் நடிகர் கதைய நாயகன் குரு சோமசுந்தரம்.. குடியால் தன் கனவுகளை தொலைத்த ஒரு சாமானியனின் கேரக்டரை உள்வாங்கி நடித்திருக்கிறார் என்றும் சொல்லலாம்..

சஞ்சனா.. குடிகார கணவனால் ஒரு மனைவி என்பவள் எப்படிப்பட்ட இன்னல்களை சந்திப்பார்.? அதை எப்படி எதிர்கொள்வார் என்பதை உணர்வு பூர்வமாக கேரக்டரில் உணர்த்தியிருக்கிறார்.

ஜாலியான கேரக்டரில் பல படங்களில் பார்த்த ஜான் விஜய் இதில் அழுத்தமான ஒரு கேரக்டரை ரசிகர்கள் மனதில் பதிய வைத்திருக்கிறார்.. இவரது கேரக்டர் கிளைமாக்ஸ் இல் அப்ளாஸ் அள்ளும்.

இவர்களுடன் ஆண்டனி, பாரி இளவழகன், ஆறுமுகவேல், அபி ராமையா, ஜே.பி.குமார், கே.எஸ்.கருணா பிரசாத், சுஹாசினி சஞ்சீவ், ஓவியர் சோவ்.செந்தில், நவீன் ஜார்ஜ் தாமஸ், காலா குமார், அன்பரசி உள்ளிட்டோரும் கதைக்கு தேவையான நடிப்பை வழங்கி இருக்கின்றனர்..

டெக்னீசியன்ஸ்…

போதை மறுவாழ்வு மையத்திலேயே பல காட்சிகள் இருந்தாலும் போரடிக்காமல் கண்களுக்கு விருந்தாக மனதில் அழுத்தமான விஷயங்களை பதிந்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரூபேஷ் ஷாஜி..

ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கிறது.. கதையுடன் பாடல்கள் ஒன்றி பயணித்திருப்பது சிறப்பு..

குடி சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு படமாக இருந்தாலும் அதை ஜாலியான பொழுதுபோக்கு படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் தினகரன் சிவலிங்கம்..

படம் முழுக்க பல விழிப்புணர்வு விஷயங்கள் இருந்தாலும் குடிகாரனுக்கு குடியை தவிர வேறு எதுவும் தெரியப் போவதில்லை.. அவர்களுக்கு எல்லாம் குடிக்க ஏதாவது ஒரு காரணம் வேண்டும்.. அது இன்பமாக இருந்தாலும் துன்பமாக இருந்தாலும் குடியே கதி.. பாட்டில் ராதாவை பார்த்து எவராவது ஒருவர் திருந்தினால் அதுவே பாட்டில் ராதாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டாகும்..

Bottle Radha movie review