திரு. மாணிக்கம் விமர்சனம் 3.75/5… லக்கி லாட்டரி

திரு. மாணிக்கம் விமர்சனம் 3.75/5… லக்கி லாட்டரி

 

 

திரு. மாணிக்கம் விமர்சனம் 3.75/5… லக்கி லாட்டரி

 

ஸ்டோரி…

கேரள மாநிலம் தமிழக எல்லை பகுதியான குமுளியில் லாட்டரி கடை நடத்தி வருகிறார் (மாணிக்கம்) சமுத்திரக்கனி.. இவரது மனைவி அனன்யா.. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள்.. இளைய மகள் வாய் பேச முடியாதவர்..

ஒரு நாள் வயதான பெரியவர் பாரதிராஜா லாட்டரி கடையில் டிக்கெட் வாங்க வருகிறார்.. டிக்கெட் வாங்கிய பின்னர் தான் அவருக்கு தன் கையில் இருந்த பணம் எங்கோ தவறி விழுந்து விட்டது என்பதை அறிகிறார்..

ஆனாலும் சமுத்திரக்கனி அவரது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த டிக்கெட்டை எடுத்துச் செல்லுங்கள்.. நாளை பணம் கொண்டு வாருங்கள் என்கிறார்.. ஆனால் பாரதிராஜாவோ இந்த டிக்கெட் உங்களிடம் இருக்கட்டும்.. நாளை பணம் கொடுத்து நான் பெற்றுக் கொள்கிறேன் என்று கூறி செல்கிறார்.

அடுத்த நாள் அந்த லாட்டரி சீட்டுக்கு ரூ. ஒன்றரை கோடி பரிசு விழுகிறது.. இந்த சூழ்நிலையில் சமுத்திரக்கனி என்ன செய்தார்.? பணத்தை கொண்டு கொடுத்தாரா? அல்லது திருடி விட்டாரா? என்பதெல்லாம் மீதி கதை…

கேரக்டர்ஸ்…

இந்தக் காலத்தில் இப்படி நேர்மையாக வாழ முடியுமா என்ற கேள்விக்கு பதிலாக மாணிக்கம் கேரக்டர் அமைந்திருக்கிறது அதை சமுத்திரக்கனி ஏற்று இருப்பதால் அதற்கான மதிப்பெண்ணும் கூடியிருக்கிறது..

சமுத்திரக்கனியின் நேர்மையை கேரள முதல்வர் கௌரவிக்கும்போது அதை மறுக்கும் சமுத்திரக்கனி உச்சம் என்றால் அதற்கு முதல்வர் சொல்லும் காரணம் கைதட்ட வைக்கிறது.. இது உங்களுக்கானது அல்ல இந்த உலகத்திற்கானது.. நேர்மைக்கான சாட்சி என்று முதல்வர் சொல்லும் வசனத்தில் வசனகர்த்தா வெளிப்படுகிறார்..

அழகான நடிப்பில் பொறுப்பான மனைவியாக அனன்யா அசத்தல்.. இவர்களுடன் பாரதிராஜா, வடிவுக்கரசி கருணாகரன், சாம்ஸ், ஸ்ரீமன் உள்ளிட்டோரும் உண்டு.. இதில் பாரதிராஜாவின் நடிப்பும் அவரது கிளைமாக்ஸ் செயலும் மற்றொரு மதிப்புமிக்க மாணிக்கத்தை காட்டுகிறது..

 

டெக்னீசியன்ஸ்…

சுகுமாரின் ஒளிப்பதிவில் சாலைகளில் செல்லும் பேருந்தும் சாலை வளைவுகளும் அழகுதான்.. குடும்ப பாடலும் படமாக்கப்பட்ட விதமும் குடும்ப ரசிகர்களுக்கு குஷியை கொடுக்கும்..

விஷால் சந்திரசேகரன் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் உத்வேகத்தை கொடுத்துள்ளது..

நேர்மை என்றால் என்ன? நேர்மையாக எப்படி வாழ்வது? என்பதை பாடமாக சொல்லி இருக்கும்போது அதை போரடிக்காமல் அழகாக எடிட்டிங் செய்து குணா பாராட்டுகளை பெறுகிறார்.. ஆனால் படத்தில் தேவையே இல்லாத தம்பி ராமையா காட்சிகளை கொஞ்சம் கூட யோசிக்காமல் வெட்டியிருக்கலாம்..

‘ஆனந்தம் விளையாடு வீடு’ படத்தின் மூலம் குடும்ப ஒற்றுமையை சொன்ன நந்தா பெரியசாமி இந்த படத்தின் மூலம் நேர்மையின் கௌரவத்தை சொல்லி இருக்கிறார்.. இதைப் பார்க்கும் இன்றைய மாணவர்கள் நேர்மையாக வாழ வேண்டும் என்பதை சமுத்திரக்கனியின் மகள் மூலம் உணர வைத்திருக்கிறார்..

பணம் பாதாளம் வரை பாயும்.. குடும்ப ஒற்றுமையை குலைக்கும்.. போலீஸ் அதிகாரியை ஓட வைக்கும் என்பதையெல்லாம் காட்சிகளாக உணர வைத்திருக்கிறார்.

அதில் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி சொல்லும் வசனம் ரசிக்க வைக்கிறது.. திருடனை பிடிக்க பலர் ஓடி வருவார்கள் ஆனால் நேர்மையானவனை பிடிக்க இத்தனை பேர் வருகிறார்களா? என்று கேட்டு அவர் அதிலிருந்து ஒதுங்கி செல்லும் நேர்மை ரசிக்க வைக்கிறது.

Thiru Manickam movie review