MAX Review 4/5.. Max Racy.. Max Masss
MAX Review 4/5.. Max Racy.. Max Masss
ஸ்டோரி….
ஓர் இரவில் நடக்கும் வழக்கமான போலீஸ் திரில்லர் படத்தை மேக்ஸிமம் விறுவிறுப்பு மேக்சிமம் மாஸ் காட்டி கொடுத்திருக்கிறார் கிச்சா சுதீப்..
ஆறு மாதம் சஸ்பெண்ட் பணியில் இருந்த போலீஸ் சுதீப் ஒரு புதிய ஸ்டேஷனுக்கு மாறுதலாகி பணியில் சேர வருகிறார்.. இவர் வரும் வழியில் இரு அமைச்சர்களின் மகன்கள் குடிபோதையில் பெண் போலீஸ் அதிகாரியை மானபங்கம் செய்து விடுகின்றனர்.. நாளை பணியில் சேர இருந்தாலும் இதனை காணும் சுதீப் வேறு வழியின்றி அவர்களை அடித்து ஜெயிலில் அடைத்து விடுகிறார்.
அந்த இரு ரவுடிகளை பார்க்கும் மற்ற அதிகாரிகள்.. ‘இவங்க பெரிய இடத்து பசங்க.. இவர்களை தொட்டால் நாம் காலியாகி விடுவோம்’ என்ற அளவில் பயப்படுகின்றனர்..
இந்த சூழ்நிலையில் வீட்டிற்கு சென்று விடுகிறார் சுதீப்.. அந்த நேரத்தில் யாரோ ஒருவரால் இரண்டு ரவுடிகளும் சிறையிலேயே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.
இதனால் காவல் நிலையமும் அரசியல் உலகமும் ரவுடி உலகமும் பரபரப்பாகிறது அதன் பிறகு நடந்தது என்ன?
அமைச்சர்களின் மகன்கள் சிறையில் யாரால் கொல்லப்பட்டனர்..? பணியில் சேராத போது போலீஸ் சுதீப் எப்படி கைது செய்யலாம்.? அரசியல் ரவுடிகள் என்ன செய்தனர் என்பதெல்லாம் மீதிக்கதை.
கேரக்டர்ஸ் & டெக்னீசியன்ஸ்…
‘நான் ஈ’ படத்தில் ஹீரோ & வில்லனாகவும் கலக்கிய சுதீப் இந்த படத்தில் வெறித்தனமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.. இன்ட்ரோ முதல் கிளைமாக்ஸ் வரை மேக்ஸிமம் மாஸ் காட்டி கையில் செல்போனை எடுக்க விடாமல் உட்கார வைத்திருக்கிறார்..
மேலும் சுனில், ச்குருதா, சம்யுக்தா , வரலட்சுமி சரத்குமார் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வரலட்சுமி மற்றும் இளவரசு உள்ளிட்ட சில முகங்கள் தெரிந்திருந்தாலும் மற்ற நடிகர்களும் படத்தின் கதை ஓட்டத்திற்கு பெரிய அளவில் உதவி இருக்கின்றனர்.. விறுவிறுப்புக்கு ஏற்றவாறு படத்தின் கதையை நகர்த்தியிருக்கிறார் இசையமைப்பாளர் ரஜினிஷ் லோக்நாத்.
கலைப்புலி எஸ் தானு மற்றும் சுதீப் கிச்சா இணைந்து தயாரித்திற்கும் இப்படத்தை விஜய் கார்த்திகேயா இயக்கியுள்ளார். படத்தின் இசையை அஜனீஷ் லோக்நாத் மேற்கொண்டுள்ளார். பின்னணி இசை மிரட்டல்.. அதிர வைக்கிறது..
ரவுடிகளும் உயர் அதிகாரிகளும் இவரை டார்ச்சர் செய்ய ஒவ்வொரு அசைவாக போலீஸ் அதிகாரிகளை அன்பால் வேலை வாங்கு ஒவ்வொரு காட்சியும் திரைக்கதைக்கு கைத்தட்டல் கொடுக்கலாம்..
‘கைதி’ படத்தில் சிறையில் போதை மருந்துகளை எடுக்க ரவுடிகள் வருவார்கள்.. இதில் (Maxx) இரண்டு நபர்களைப் பிடிக்க ரவுடிகள் வருகிறார்கள் என்ற சாதாரண கதையாக தெரிந்தாலும் அதை படமாக்கிய விதத்தில்.. யாருப்பா இந்த இயக்குனர்? என்ற கேள்வியை கேட்க வைக்கிறார் இயக்குனர் விஜய் கார்த்திகேயா..
Maxx movie review

