நிறங்கள் மூன்று விமர்சனம்.: சிறந்த நிறம் எது.?

நிறங்கள் மூன்று விமர்சனம்.: சிறந்த நிறம் எது.?

 

 

நிறங்கள் மூன்று விமர்சனம்.: சிறந்த நிறம் எது.?

அதர்வா – சரத்குமார் – ரகுமான் இவர்கள் மூவருக்கும் ஒவ்வொரு நிறத்தை கொடுத்து நிறங்கள் 3 என்ற திரைக்கதை அமைத்திருக்கிறார் துருவங்கள் 16 பட இயக்குனர் கார்த்திக் நரேன்..

ஸ்டோரி…

சினிமாவில் இயக்குனராக ஆசைப்பட்டு தயாரிப்பாளர்களை தேடித்தேடி அலைகிறார் அதர்வா.. ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் கதையை எடுத்துக்கொண்டு அலுவலகம் வர சொல்ல அந்த சமயத்தில் கதை திருடு போகிறது.

மற்றொரு நிறத்தில் பள்ளி ஆசிரியர் ரஹ்மானின் மகள் அம்மு அபிராமி காணாமல் போகிறார்.. அவரை தேடி காதலனும் நண்பர்கள் கூட்டமும் அலைகிறது..

அதர்வாவின் தந்தை சரத்குமார் ஒரு நேர்மையற்ற போலீஸ் அதிகாரி பணத்துக்காக எதையும் செய்யத் துணிந்தவர் இவர்.

இந்த மூவரின் நிறங்களும் ஒரு புள்ளியில் இணைய அதுவே மூன்று நிறங்களாக மாறுகிறது.. அப்படி என்ன நடந்தது?என்பதுதான் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

அதர்வாவின் நடிப்பு சில இடங்களில் பேசப்பட்டாலும் பல இடங்களில் நம் பொறுமையை சோதிக்கிறது அதுவும் அவர் கஞ்சா அடித்து விட்டு அவர் செய்யும் சேட்டைகள் சகிக்கவில்லை..

மிடுக்கான போலீஸ்.. ஆனால் நேர்மையற்று அதிகாரி என முறுக்கிய மீசையுடன் வித்தியாசமாக களமிறங்கி இருக்கிறார் சரத்குமார்.

இதுவரை ஏற்காத வேடத்தில் ரகுமான்.. பள்ளியில் சிறப்பான ஆசிரியர்.. வீட்டில் சீர்கெட்ட குடிகார கணவன் பொறுப்பேற்ற தந்தை என நடிப்பில் கவர்கிறார்..

 

டெக்னீசியன்ஸ்…

ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்திற்கு பலம்.. காட்சிகள் அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

‘துருவங்கள் 16’ படத்தில் வித்தியாசமான திரைக்கதை அமைத்து வெற்றி கண்டவர் இயக்குனர் கார்த்திக் நரேன்.. இந்த படத்தில் வித்தியாசமாக கதை சொல்ல முயன்று இருக்கிறார்.. இடைவேளை வரை ஆமை வேகத்திலும் நகரும் கதை இடைவேளைக்குப் பிறகு சூடு பிடிக்கிறது..

போதைக்கு அடிமையானவன் மகளிடம் தவறாக நடந்து கொள்ளும் காட்சிகள் ஏற்றுக் கொள்ளும் படியாக இல்லை.. ஆனால் நாட்டில் நடக்கும் செய்திகளை நாம் பார்த்து இருக்கிறோம். ரகுமான் போன்ற ஒரு நடிகர் இந்த காட்சியில் எப்படி நடிக்க ஒப்புக்கொண்டார்.? நேர்மையற்ற போலீஸ் அதிகாரி தன் மகனுக்காக மட்டும் நேர்மையாக மாறுவது எப்படி.?

முக்கியமாக ரிவர்ஸில் வித்தியாசமாக சண்டைக் காட்சி சுமார் ரகம்..

மனிதர்களின் அகத்திற்கும் முகத்திற்கும் வெவ்வேறு நிறங்கள் உண்டு என்ற கருவை சுவாரஸ்ய சொல்ல முற்பட்டிருக்கிறார் இயக்குனர்..

என்னதான் ஆசிரியராக இருந்தாலும் வீட்டில் அவரது சுயரூபம் வெளிப்படும் என்பதையும் அப்பட்டமாக காட்டி இருப்பது இயக்குனரின் டச்..

சமூகத்தில் பரபரப்பாக பேசப்படும் போதைப்பழக்கம் திரையுலகில் பரபரப்பாக பேசப்படும் கதை திருட்டு என இரண்டையும் கலந்து திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் நரேன்.

சீனியர் நடிகர்களான சரத்குமார் மற்றும் ரகுமான் ஆகிய இருவருக்கும் நெகட்டிவ் கேரக்டர் கொடுத்திருப்பது இயக்குனர் மீது நடிகர்கள் வைத்த நம்பிக்கையை காட்டுகிறது..

Nirangal Moondru movie review