100 கோடி வானவில் விமர்சனம்…
100 கோடி வானவில் விமர்சனம்…
ஸ்டோரி….
ஒரு டிவி சேனலில் பணிபுரிகிறார் ஹரிஷ் கல்யாண்… வித்தியாசமான நிகழ்ச்சிகளை தொகுத்து தயாரித்து அதன் மூலம் டிஆர்பியை எகிறச் செய்ய திட்டம் போடுகிறார்.. அப்போது சித்தி இதானியை சாலையில் கண்டதும் அவரை பிடித்து போக அவரை தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளராக கேட்கிறார் ஹரிஷ்..
முதலில் மறுக்கும் சித்தி… ஒரு கட்டத்தில் தன் காதலனுக்காக சிகிச்சைக்காக.. நிகழ்ச்சியில் ஆங்கர் ஆக பணிபுரிய ஓகே சொல்கிறார் சித்தி..
ஒரு கட்டத்தில் சித்தியை காதலிக்கிறார் ஹரிஷ்.. ஆனால் அவருக்கு ஏற்கனவே ஒரு காதலன் இருப்பதால்… என்ன செய்தனர் இருவரும்.? என்ன நடந்தது என்பதெல்லாம் திரைக்கதை..
கேரக்டர்ஸ்…
சாலையில் பார்த்தவுடன் சைட்.. பின்னர் அவளின் திறமையை அறிந்து அவள் மேல் காதல் என எதார்த்த இளைஞனாக ஹரிஷ் கல்யாண்.. காதலி தன்னை விரும்பாவிட்டாலும் அவளுக்காக ஹரிஷ் செய்யும் செயல் காதலின் ஆழத்தை உணர்த்தும்…
வழக்கம்போல கன்னக்குழி அழகில் கவர்ந்து விடுகிறார் சித்தி இதானி.. சுயநினைவு இல்லாத காதலன் ஒரு பக்கம் சுயமாக சிந்திக்கும் காதலன் ஒரு பக்கம் என இரண்டு காதலர்களுக்கு மத்தியில் சிக்கிய சிறை பறவையாக சித்தி..
கோவை சரளா, தம்பி ராமையா, விஜே பார்வதி, சின்னி ஜெயந்த் ஆகியோர் உண்டு.. இதில் பார்வதி காமெடியும் சேர்த்து கலகலப்பாகி இருக்கிறார்..
டெக்னீசியன்ஸ்…
ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமார்.. கோவாவின் அழகை சிறப்பாக காட்டி இருக்கிறார்..
படத்தொகுப்பாளர் எம்.சுபாரத்.. எடிட்டிங் செய்திருந்தால் விறுவிறுப்பு கூடியிருக்கும்…
சித்து குமார் இசையில்… ‘போதும் போ’, ‘கண்ணாட்டி’ ஆகிய பாடல்கள் ரசிக்க வைக்கிறது
பிச்சைக்காரன் – நூறு சாமி உள்ளிட்ட படங்கள இயக்கியவர் சசி.. அவரே இந்த 100 கோடி வானவில்லையும் இயக்கியிருக்கிறார்..
அம்மா சென்டிமென்ட் காதல் செண்டிமெண்ட் என உணர்ச்சிபூர்வமான படங்களை கொடுத்து சசி இந்த படத்தில் இன்றைய இளைஞர்களின் காதலை கலர்புல்லா கொடுத்திருக்கிறார்..
ஆண்களின் காதலை சரியாக புரிந்து கொள்ளாத சில பெண்களையும் அதேபோல பெண்களின் காதலை புரிந்து கொள்ளாத ஆண்களையும் அப்பட்டமாக காட்டியிருக்கிறார் டைரக்டர் சசி..
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது..
Nooru kodi Vaanavil movie review

