சீன் விமர்சனம் 4.25/5.. இன்ப (அதிர்ச்சி) ராஜங்கம் நடத்திய இன்பராஜ்

 

சீன் விமர்சனம் 4.25/5.. இன்ப (அதிர்ச்சி) ராஜங்கம் நடத்திய இன்பராஜ்

 

ஸ்டோரி…

சைபர் கிரைம் போலீஸ் சூர்யா… இவர் மெல்ல மெல்ல கண் பார்வை இழந்து வருகிறார்… இது வெளியே தெரியக்கூடாது என்பதால் காரணத்தை சொல்லாமல் ராஜினாமா கடிதம் கொடுக்கிறார்.. திறமையான புத்திசாலியான போலீசை காவல்துறை இழந்து விடக்கூடாது என்பதால் ராஜினாமாவை ஏற்க மறுக்கிறார் லால்..

இந்த சூழ்நிலையில் சூர்யா கைது செய்த ஒரு குற்றவாளியின் தொடர் கொலை பாணி வெளியே தொடர்ந்து அரங்கேறி வருகிறது… அப்படி என்றால் ஏற்கனவே கைது செய்யபட்டவர் யார்.? சைக்கோ கில்லர் பாணியில் வெளியே கொலைகளை செய்பவர் யார் என குழம்புகிறார் சூர்யா..

இந்த கண் தெரியாத சூழ்நிலையில் அவர் மற்ற குற்றவாளியை எப்படி கண்டுபிடித்தார் என்பதுதான் இந்த சீன் திரைக்கதை..

கேரக்டர்ஸ்…

ஒரு டீ சர்ட்… அரைக்கால் டவுசர் என வித்தியாசமான லுக்கில் படம் முழுக்க வருகிறார் சூர்யா.. ஒரு போலீஸ் இப்படி வரலாமா? என கேட்டாலும் அதற்கு ஏற்ப ராஜினாமா காரணத்தை வைத்திருக்கிறார் இயக்குனர்.. பெரிய ரொமான்ஸ் இல்லை.. ஆனாலும் ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்து பட்டையை கிளப்பி இருக்கிறார் சூர்யா..

மெதுவாக நகரும் திரைக்கதை நஸ்ரியா வந்த பிறகு பறக்கிறது.. மீண்டும் தன் நடிப்பு முத்திரையை நச்சென்று பதித்திருக்கிறார் நஸ்ரியா..

மலையாள நடிகர் நஸ்லென் வில்லன் வேடத்தில் கலக்கி இருக்கிறார்.. ஹீரோவுக்கு நிகரான புத்திசாலி வில்லன் இவர்.. இவர் பிரேமலு படத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்து தமிழக ரசிகர்களை கவர்ந்தவர்..

சூர்யாவின் அப்பாவாக ஆனந்தராஜ்.. நஸ்ரியாவின் அப்பாவாக கஜராஜ்.. இருவரும் அலட்டிக் கொள்ளாத நடிப்பை கொடுத்திருக்கிறார்.. சூர்யாவின் அம்மா கேரக்டரும் காமெடியில் ரசிக்க வைக்கிறார்..

ஆனால் சூர்யா நஸ்ரியா உள்ளிட்ட அனைத்து முக்கிய கேரக்டர்களும் ஏதோ ஒரு குறைபாடு தான் இருப்பது ஏனோ.?

டோவினோ தாமஸ் மற்றும் லால் ஆகியோரும் உண்டு.. இதில் சிறையில் அடைபட்ட டோவினோவுக்கு சீன் பார்ட் 2 பாகத்தில் இன்னும் அதிக சீன்கள் இருக்கும் என்று நம்பலாம்..

சூர்யாவிடம் சிக்கிய உயர் அதிகாரி லால்.. கதைக்கு ஓகே.. மற்ற இடங்களில் ஓவர் ஆக்டிங்கை தவிர்த்து இருக்கலாம் லால்..

youtube மற்றும் இன்ஸ்டாகிராமில் பிரபலமான சில நட்சத்திரங்களும் படத்தில் கதை ஓட்டத்திற்கு உதவி உள்ளனர்..

ராஜ் பிரியன் & ஆட்டோ மாமா உள்ளிட்டோரும் நடிப்பில் கவனிக்க வைக்கின்றனர்..

டெக்னீசியன்ஸ்…

வினித் அகஸ்தியன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. கலர்ஃபுல் சீனாக படத்தைக் கொடுத்திருக்கிறார்..

ஒரு கண் தெரியாதவர் தன் வீட்டை எப்படி எல்லாம் வைத்திருப்பார்… அவர் செல்லும் வழி எப்படி இருக்கும் என்பதை கலை இயக்குனர் அழகாக வடிவமைத்திருக்கிறார்..

சுஷின் ஷியாம் இசையமைத்திருக்கிறார் ஏரோபிளேன் பாடல் ரசிக்க வைக்கிறது.. நஸ்ரியாவின் ஆக்சன் பாட்டும்… ஆத்தி யார்ரா இவள்.. சூப்பர்.. பின்னணி இசை ஓவர் பில்டப் இல்லாமல் கதையுடன் பொருந்தி செல்கிறது…

சக்திவேல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக சக்திவேலன் வெளியீட்டு உரிமை கைப்பற்றி இருக்கிறார்.. இந்த சீன் பட வெற்றியை முன்பே கணித்தவர்களில் இவரும் ஒருவர் ஆவார்..

இந்த 2026 ஆம் ஆண்டில் கருப்பு மற்றும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என இரண்டு வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் சூர்யா… தற்போது மூன்றாவது படமாக ஹாட்ரிக் வெற்றியை இந்த சீன் மூலம் உறுதி செய்திருக்கிறார்..

மலையாள இயக்குனர் ஜீத்து மாதவன் இயக்கியிருக்கிறார்.. இவர் ஏற்கனவே மலையாளத்தில் ரொமான்சம் மற்றும் ஆவேசம் ஆகிய ஹிட் படங்களை இயக்கியவர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆக்சன் மட்டும் இல்லாமல் காமெடியும் கொடுத்திருக்கிறார் சூர்யா..

கண்பார்வையை இழக்கும் போலீஸ்… அவரை சுற்றி நடக்கும் ஒரு க்ரைம் திரில்லர் என இரண்டையும் கலந்து ரசிகர்களை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறது ஜீத்து மாதவன்..

 

Suriya in Scene movie review

 

—