சிங்காரம் விமர்சனம்… 3.25/5.. கோட்டையிலும் குறவர்களின் வெற்றி கூடம் 

 

 

சிங்காரம் விமர்சனம்… 3.25/5.. கோட்டையிலும் குறவர்களின் வெற்றி கூடம்

 

 

ஸ்டோரி…

பெரும்பாலும் குறவர் இனம் குறித்து எந்த படமும் முழுமையாக அலசியது இல்லை.. ஆனால் இதில் குறவர் மக்கள் வாழ்வியலை எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் கதிர்வேலு..

 

எம் எஸ் பாஸ்கர் – தீபா தம்பதிகளின் மகன் யோகி பாபு.. இவர்களுக்கு இரு மகள்களும் உண்டு.. மேலும் ஜாவா சுந்தரேசன், கனேஷ்கர், கல்கி, மனோபாலா ஆகியோரும் குறத்தி இனத்தைச் சேர்ந்தவர்கள்..

ஊரின் எல்லை பகுதியில் கூடாரம் அமைத்து கூட்டமாக வசித்து வருகின்றனர்.. அடிக்கடி ஊர் விட்டு ஊர் சென்று நாடோடிகள் ஆக வாழ்ந்து வருவதால் இவர்களுக்கு என்று எந்த அரசு அடையாள அட்டையும் கிடையாது..

இப்படியான நிலையில் பல இடங்களில் மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.. இந்த சூழ்நிலையில் இவர்களுக்கு என்று ஒரு அடையாளத்தை உருவாக்க உதவி செய்கிறார் நல்ல மனிதர் நல்லசிவம். வேல. ராமமூர்த்தி.. ஆனாலும் பல இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலை வருகிறது..

அதன் பிறகு என்ன நடந்தது.? இவர்களுக்கான அடையாளத்தை சமூகத்தில் உருவாக்க முடிந்ததா .? அரசியல் எதிர்ப்புகளை மீறி இவர்களால் வாழ்க்கையில் உயர முடிந்ததா.? என்பதெல்லாம் திரைக்கதை..

 

கேரக்டர்ஸ்…

கதாநாயகனாகவும் காமெடியனாகவும் என இரட்டைக் குதிரையில் சவாரி செய்வது யோகி பாபுவுக்கு சக்சஸ் ஃபார்முலா ஆகி விட்டது.. இடைவேளை வரை குறவனாகவும் அதன் பிறகு கோடீஸ்வரனாகவும் தன் சிங்காரம் கேரக்டரை சிறப்பாக்கி இருக்கிறார்..

ஆனால் குறவர் இன மக்களின் பாஷையை கொஞ்சம் கூட பேசவில்லை.. அதற்கான சிரமமும் அவர் எடுக்கல.. கதாநாயகனாக ரிஸ்க் எடுக்க மாட்டாரா.?

1990களில் கதை நடப்பதால் லாட்டரி சீட்டு பிரியராக எம்எஸ் பாஸ்கர்.. குறவர் என பெரியவராக வாழ்ந்திருக்கிறார்.. லாட்டரி மூலம் தங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கிடைக்காதா.? தங்களின் வாழ்க்கை தரம் உயராதா என்ற இவரது எண்ணோட்டம் படத்தின் ஹைலைட்..

நல்லசிவம் கேரக்டரில் வேலராமமூர்த்தி.. லாட்டரி சீட்டு விற்பனையாளர் இளவரசு, அரசியல்வாதிகளாக படவா கோபி & மாரிமுத்து, எம்எல்ஏவின் தம்பியாக சென்ட்ராயன் உள்ளிட்டோரும் நிறைவான நடிப்பை கொடுத்துள்ளனர்..

எம் எஸ் பாஸ்கரின் மகள்களாக நடித்த இருவரும் நடிப்பிலும் கவர்கின்றனர்.

 

டெக்னீசியன்ஸ்…

இசை மற்றும் ஒளிப்பதிவு நேர்த்தி..

ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ். குமார்.. 1990 கால கட்டங்களுக்கு ஏற்ப காட்சிகளை படமாக்கி இருக்கிறார்..

சாம்.சி.எஸ் இசையில் குறவர் பாட்டு ரசிக்க வைத்து ஆட்டமும் போட வைக்கிறது..

1990களில் நடந்த உண்மைச் சம்பவத்தை வைத்து இந்த திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் கதிர்வேலு.. மேலும் படம் தொடங்குவதற்கு முன்பு சில காட்சிகளாக குறவர் இன மக்களின் வாழ்க்கை முறைகளையும் சமூகம் சார்ந்த வாழ்வியலையும் காட்சிகளாக சித்தரித்திருக்கிறார் இயக்குனர்..

எந்த இனமாக இருந்தாலும் இவையெல்லாம் மனிதர்களால் உருவாக்கப்பட்டவையே… எனவே தங்களுக்கான அடையாளத்தை நாம் நினைத்தால் மட்டுமே மாற்ற முடியும்..

அதற்கான முயற்சிகளை எடுத்தால் மட்டுமே நம்மில் மறுமலர்ச்சி மலரும் என்பது ஆணித்தரமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்..

 

Yogibabu in Singaram movie review