பனி விழும் இரவு விமர்சனம்… 3/5

 

பனி விழும் இரவு விமர்சனம்… 3/5

 

ஸ்டோரி…

சில மாதங்களுக்கு முன்பு அசோக் நிஷா நடிப்பில் வெளியான கிட்டி படத்தின் சாயல் போலவே இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது..

கொடைக்கானலில் ஒரு பங்களாவுக்கு வருகிறார் நாயகன் அருண் கார்த்திக்.. தன்னுடன் வந்த பெண்ணை காணவில்லை என்ன போலீசில் புகார் கொடுக்கிறார்.. இது பற்றி போலீஸ் விசாரணை இறங்கும்போது அவர் ஒருவர் மட்டும்தான் வந்தார் அவருடன் யாரும் வரவில்லை என செக்யூரிட்டி உள்ளிட்ட சில நபர்கள் சொல்கின்றனர்..

அப்படி என்றால் நாயகனுடன் வந்த பெண் யார்.? அவரு வந்தது உண்மைதானா.? வரவில்லையா என்பதெல்லாம் யூகிக்க முடியாத படி இன்றைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வித்தியாசமான கதைக்களம் அமைத்திருக்கிறார் இயக்குனர் ராஜேஷ்..

கேரக்டர்ஸ்…

ஒரு நொடி படத்தில் நடித்த அருண் கார்த்திக்.. எதார்த்தமாக மிக இல்லாத நடிப்பை கொடுத்து தன் நடிப்பை பதிவு செய்திருக்கிறார்..

நாயகியாக எனாக்ஷி கங்குலி.. போலீஸ் சேரன் ராஜ் மற்றும் கருப்பு நம்பியார் ஆகியோர் படத்திற்கு பக்கபலம்..

இவர்களுடன் சரவணசக்தி செக்யூரிட்டி கதாபாத்திரத்திலும், செ.ரா. ராஜேஷ் சோலை ராஜாகவும், கஜராஜ் டாக்டராகவும் நடித்துள்ளனர். சுருளி, உமர், வினோத் ஆகியோரும் உண்டு..

டெக்னீசியன்ஸ்…

ஜெயக்குமார் தங்கவேல் ஒளிப்பதிவு.. கொடைக்கானல் அழகை கேமரா கண்களை பதிவு செய்திருக்கிறார்..

சதா முருகன் இசையமைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். சந்தோஷ் ஆறுமுகம் என்பவரும் பாடல்களை எழுதியுள்ளார்.. பின்னணி இசை ஓகே..

சதா முருகன், தங்கவேல் வல்லவர்சாமி, ஓம் செல்வா ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். கதையை எழுதி, திரைக்கதை மற்றும் வசனங்களை அமைத்து, படத்தை இயக்கியுள்ளார் செ.ரா. ராஜேஷ்.

இன்றைய நவீன தொழில் புரட்சி உலகத்தில் அதிக பேரால் பார்க்கப்படும் ஏ ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கதைக்களத்தை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர்..

இனி சில படங்கள் இதே கதைகளத்துடன் வந்தாலும் ஆச்சரியமில்லை… காரணம் இன்றைய எ ஐ தொழில்நுட்பம் இணைய வாசிகளை முழுமையாக வசீகரித்து மூழ்கடித்து கொண்டிருக்கிறது உண்மைதானே…

 

Pani Vizhum Iravu movie review