‘ஜெயிலர் 2’ விமர்சனம்.. 4.5/5… Frame Paarunga ji.. தலைவர் நிரந்தரம்…

‘ஜெயிலர் 2’ விமர்சனம்.. 4.5/5… Frame Paarunga ji.. தலைவர் நிரந்தரம்…

 

‘ஜெயிலர் 2’ விமர்சனம்.. 4.5/5… Frame Paarunga ji.. தலைவர் நிரந்தரம்…

 

ஸ்டோரி…

ஜெயிலர் பட முதல் பாகத்தில் தன் மகனை கொன்றுவிடுவார் ரஜினிகாந்த்.. ஆனால் இது குடும்பத்திற்கு தெரியாது..

மேலும் கேரள வில்லன் விநாயகனையும் கொன்றுவிடுவார்.. விநாயகன் இறக்கும்போது.. எனக்கு பின்னால் ஒரு பெரிய கேங்ஸ்டர் கூட்டம் இருக்கு… உன்னை சும்மா விட மாட்டார்கள் என்பார்..

அதன்படி.. வில்லன்கள் சுராஜ்.. அவருக்கு மேலே எஸ் ஜே சூர்யா.. வித்யா பாலன்.. அவருக்கு மேல மிதுன் சக்கரவர்த்தி உள்ளிட்ட பல வில்லன்கள் ரஜினியை தேடி அலைகின்றனர்.. அவர்கள் கையில் ‘ஜெயிலர்’ ரஜினி சிக்கினாரா.?

மூன்று கன்டெய்னர் லாரிகளில் உள்ள 6000 கோடி மதிப்புள்ள சாமி சிலைகளை அவர் என்ன செய்தார் என்பதெல்லாம் அதிரடியான மிரட்டலான திரைக்கதை..

கேரக்டர்ஸ்…

ரஜினிகாந்த் பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால்.. தலைவர் நிரந்தரம் சூப்பர் ஸ்டார் என்ற இடத்தில் ரஜினியை தவிர யாரையும் பொருத்திப் பார்க்க முடியாது என்பதை ஒவ்வொரு காட்சியிலும் நிரூபித்திருக்கிறார்..

மகனைக் கொன்று விட்டு குற்ற உணர்ச்சி தவிப்பதாகட்டும்… வித்யாவை கண்டதும் இளமை துள்ளல் ஆகட்டும்… வில்லன்களை மிரட்டும் ஸ்டைலிஷ் லுக் ஆகட்டும் என ஒவ்வொரு பிரேமிலும் அட பிரேமை பாருங்க ஜி என்ற வகையில் மாஸ் காட்டி இருக்கிறார் ரஜினி..

– எஸ்.ஜே. சூர்யா
– மிதுன் சக்ரவர்த்தி
– சூரஜ் வெஞ்சாரமூடு
– வித்யா பாலன்

பெரும்பாலும் வில்லனாக சமீபகால படங்களில் எஸ் ஜே சூர்யா கத்திக்கொண்டே இருப்பார்.. ஆனால் இது கொஞ்சம் கூட கத்தாமல் அடக்கி வாசித்து அசால்ட்டாக வில்லத்தனம் செய்திருக்கிறார்..

மாஸ் வில்லியாக வித்தியாசமான தோற்றத்தில் வித்யா பாலன்.. இனி தமிழில் இவருக்கு நிறைய சான்ஸ் வரும்.. ரஜினியுடன் அடுத்த படத்தில் ஜோடியாக நடித்தாலும் ஆச்சரியம் இல்லை..

மலையாள நடிகர் சூரஜ் .. கொஞ்சம் காமெடி செய்து வில்லத்தனத்தில் மிரட்டல்.. ஹிந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி நடிப்பில் கவனிக்க வைக்கிறார்..

– ரம்யா கிருஷ்ணன்
– யோகி பாபு
– மிர்னா
– மாஸ்டர் ரித்விக்
– ஜதின் சர்னா
– நமோ நாராயணா
– பிஜோர்ன் சுர்ராவ்
– அன்னா ராஜன்
– பி. எல். தேனப்பன்
– ஜாபர் சாதிக்
– பதம் குமார்
– அபேக்ஷா போர்வால்
– தமிழ்ழ்
– சரவண வேல்
– பகவதி பெருமாள்
– கோட்டயம் நசீர்
– சுனில் சுகதா
– சுஜித் சங்கர்
– ஹக்கீம் ஷாஜஹான்
– வினீத் தட்டில் டேவிட்
– ராமச்சந்திரன் துரைராஜ்

யோகி பாபு மற்றும் நமோ நாராயணன் காமெடிகள் சிரிப்பு வெடி.. தேனப்பன் & ஷீலா ராஜ்குமார் ஒரே ஒரு காட்சியில் வந்து செல்கின்றனர்.. ரம்யா கிருஷ்ணன் & மிர்னா இருவரும் நேர்த்தியான நடிப்பு..

ரஜினி ஆசைப்பட்டபடி காவலா தமன்னா பாட்டை சரியான இடத்தில் CLUE வைத்திருக்கிறார் நெல்சன்..

*சிறப்புத் தோற்றத்தில்:*
– மோகன்லால்
– சிவராஜ்குமார்
– ஜாக்கி ஷெராஃப்
– பூர்ணா
– ராஜேஷ் மாதவன்
– நோரா ஃபதேஹி
ஹிருத்திக் ரோஷன் & விஜய் சேதுபதி..

அனைவரும் அவரவர் காட்சிகளில் ஐந்து நிமிடங்கள் மட்டும் வந்தாலுமே மாஸ் காட்டி நம்மை கவர்ந்து விடுகின்றனர்..

டெக்னீசியன்ஸ்…

– ஒளிப்பதிவு: விஜய் கார்த்திக் கண்ணன்
– படத்தொகுப்பு: ஆர். நிர்மல்
– கலை இயக்கம்: டி.ஆர்.கே. கிரண்
– சண்டைப் பயிற்சி: சேத்தன் டி’சோசா
– ஆடை வடிவமைப்பு: பல்லவி சிங், முதுல் ஹஃபீஸ்

– மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத் , பாரஸ் ரியாஸ்

விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.. பாடல் காட்சிகள் சண்டை காட்சிகள் என அனைத்தும் கலர்ஃபுல்..

எடிட்டிங் செய்திருக்கிறார் நிர்மல்.. தேவையற்ற காட்சிகள் இல்லை..

இந்திய சினிமா பிரபல நட்சத்திரங்கள்.. மிதுன் சக்கரவர்த்தி, ஹிருத்திக் ரோஷன், வித்யா பாலன், சிவராஜ்குமார் மோகன்லால், சூரஜ் என அனைவரும் ரஜினிக்காக படத்தில் ஒப்புக்கொண்டாலும் அவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து ஒரே காட்சியில் வைத்து பிரம்மாண்டத்தை காட்டி இருக்கிறார் நெல்சன்..

அதுபோல இந்த பிரம்மாண்டத்துக்கு கோடிக்கணக்கில் பணத்தை செலவழித்து இருக்கிறார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்..

ஒரு காட்சியில் ஹெலிகாப்டரும் காரும் மோதிக் கொள்ளும் காட்சியைப் பார்க்கும்போது அட.. Frame பாருங்க ஜி என்னும் வகையில் ஆக்ஷன் காட்சிகளை அமைத்திருக்கிறார் சேத்தன் டி’சோசா..

– தயாரிப்பு : சன் பிக்சர்ஸ்
– கதை, திரைக்கதை & இயக்கம்: நெல்சன்
– இசை: அனிருத்

 

பாடல்கள் பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார் அனிருத்.. அல்லே பலேலா முதல் அனைத்து பாடல்களும் ஆட்டம் போடும் ரகம்.. முக்கியமாக. அலப்பறை கிளப்பறோம்.. தலைவர் நிரந்தரம்… வரிகள் சரியான இடத்தில் வேற லெவல்.. பாட்ஷா படத்தில் ரஜினி நடக்கும் போது வரும் ஷூ சவுண்ட் சரியான இடத்தில் மாஸ் ரகம்.

பெரும்பாலும் கமர்சியல் டைரக்டர்கள் ரஜினிக்கு என்றே ஒரு இன்ட்ரோ பாடல்.. ஆக்சன் காட்சிகள்.. பாட்டு ஃபைட் என அனைத்தையும் வைத்திருப்பார்கள்.. ஆனால் ரஜினியின் ஃபார்முலா டெம்பலேட்டுகளை உடைத்து ‘என் வழி தனி வழி’ என இயக்கியிருக்கிறார் டைரக்டர் நெல்சன்..

எளிமையான ரஜினி.. மாஸ் & ஸ்டைலிஷ்… ரஜினியின் டிரேட் மார்க் காமெடி என ஒவ்வொரு காட்சியிலும் ரசிக்க வைத்திருக்கிறார் டைரக்டர் நெல்சன்..

ரஜினி வயதுக்கு ஏற்ற மாஸ் காட்சிகளை வைத்து நம்மை மெய் மறக்க செய்திருக்கிறார் நெல்சன்.. நண்பன் இருந்தால் எவனும் நம்மை நெருங்க முடியாது என நட்பை போற்றும் வகையிலும் காட்சிகள் வைத்திருப்பது படத்தின் ஹைலைட்…

ஆக அனைத்து ரசிகர்களுக்கு.. நவராத்திரியில் ரஜினியின் நவரச விருந்து இந்த ஜெயிலர் 2

 

Rajini Win Jailer 2 movie review