லெனின் பாண்டியன் விமர்சனம்..
லெனின் பாண்டியன் விமர்சனம்..
ஸ்டோரி…
மணல் கொள்ளைக்கு எதிராக போராடுகிறார் விவசாயி கங்கை அமரன்.. இவருக்கு ஆதரவாக இருக்கும் ஒரு அரசு அதிகாரியும் மணல் கொள்ளையர்களால் கொல்லப்படுகிறார்.. இதனால் இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு செல்ல அந்த உத்தரவின் படி போலீஸ் பாதுகாப்பு கங்கை அமரனுக்கு வழங்கப்படுகிறது..
அவரை பாதுகாக்கும் காவல் அதிகாரியாக வருகிறார் தர்ஷன் கணேசன்.. வில்லன் கும்பலிடம் இருந்து அந்த கான்ஸ்டபிள் கங்கை அமரனை காப்பாற்றினாரா?ஏற்கனவே பல பிரச்சினைகள் சிக்கித் தவிக்கும் தர்ஷனை பணம் கொடுத்து விலைக்கு வாங்க வில்லன் கும்பல் முயற்சிக்கிறது.. இறுதியில் என்ன ஆனது என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்..
கங்கை அமரன் – ரோஜாவின் காதல் காட்சிகள் சில இடங்களில் முதல் மரியாதை படத்தை நினைவு படுத்துகிறது.. பூங்காற்று திரும்புமா என்ற பாடல் ஒலிக்கும் போது இளையராஜா நம்மை என்பது 1980 காலகட்டங்களுக்கு அழைத்துச் செல்கிறார்.. எதுவுமே தெரியாமல் அப்பாவியாக வாழ்ந்த தனக்கு உறுதுணையாக இருக்கும் ரோஜாவின் காதலை கங்கை அமரன் சொல்லும் போது உருக வைக்கிறார்..
கங்கை அமரன் வயது இல்லை என்றாலும் அவருக்கு ஏற்ற வாழ்க்கை துணையாகவே தன் கதாபாத்திரத்தை உயர்த்தி இருக்கிறார் ரோஜா.. ஆனால் இவருக்கு குரல் கொடுத்திருக்கிறார் நடிகை துளசி.. அந்த டப்பிங் குரல் ரோஜாவிற்கு பொருத்தமில்லை..
சிவாஜி குடும்பத்தில் இருந்து அடுத்த வாரிசு தர்ஷன்.. சினிமா உலகில் தாத்தா சித்தப்பா அண்ணனின் பெருமையை நிலைநாட்ட தர்ஷன் நல்லதொரு முயற்சியை கொடுத்திருக்கிறார்.. அப்பாவி போலீசாக அனுதாபத்தை அள்ளிக் கொள்கிறார்..
கொடுமைக்காரனாக போஸ் வெங்கட் தன் நடிப்பில் சபாஷ் பெறுகிறார்..
நீதிபதியாக ஜார்ஜ் மரியான்.. சுதந்திர இந்தியாவில் விவசாயின் இன்றைய நிலையை அவர் சொல்லும் போது நீதிபதியாக நிமிர்ந்து நிற்கிறார்.. அரசு ஆபீஸ்சர்கள் மட்டுமே அவர்கள் அதிகாரிகள் இல்லை என்று சொல்லும்.. அந்த வசனம் நம்மை அறியாமல் கைதட்ட வைக்கிறது..
யுகேந்திரன், அர்ச்சனா, ஆடுகளம் நரேன் உள்ளிட்டோரின் நடிப்பு சிறப்பு….

டெக்னீசியன்ஸ்…
எட்வின் சாகே ஒளிப்பதிவும், இளையராஜாவின் இசையும் படத்துடன் ஒன்றி பயணிக்கிறது.. விவசாயிகளின் வாழ்வியலை அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்..
இந்தப் படத்தின் இயக்குனர் பாலச்சந்திரன் புதுமுக இயக்குனர்.. ஆனாலும் கதை மீது நம்பிக்கை வைத்து இசையமைத்து கொடுத்த இளையராஜாவை நிச்சயமாக பாராட்ட வேண்டும்..
மேலும் தனது தம்பி கங்கை அமரன் கதை நாயகனாக நடிக்கும் படத்திற்கு பெரும்பலமாக இருந்திருக்கிறார் இளையராஜா.. பாண்டி முனி பாடல் பட்டைய கிளப்பும்.. அந்த பாடல் திரையில் ஒலிக்கும் போது நமக்கு பரவசம் பற்றி கொள்ளும்..
நீதித்துறை காவல்துறை உள்ளிட்ட துறைகளில் கிராமத்து அதிகார வர்க்கத்தின் தலையீடு குறித்தும் அலசி இருக்கிறார்… முக்கியமாக மணல் கொள்ளை விவகாரத்தால் விவசாயிகளின் நிலை இந்த மண்ணின் பாதிப்பு குறித்து பாலச்சந்திரன் சொல்லி இருக்கிறார்..
Lenin Pandiyan movie review

