இருமுடி கட்டு விமர்சனம் 3.5/5… ஆன்மீக ஆக்சன்.
இருமுடி கட்டு விமர்சனம் 3.5/5… ஆன்மீக ஆக்சன்.
ஸ்டோரி…
தன் மகள் நட்சத்திரா மீது அளவு கடந்த பாசம் கொண்டவர் நாயகன் ரவி தேஜா.. இவரது மனைவி நாயகி பிரியா பவானி சங்கர்.. அதுபோல ஆன்மீகத்திலும் நாட்டம் கொண்டவர்..
வருடத்தில் 40 நாள் விரதம் இருந்து சபரிமலைக்கு செல்லும் இவர் மற்ற தினங்களில் மதுவுக்கு அடிமை.. எப்போதும் குடி அடிதடி வெட்டு என்று இருந்தாலும் உழைத்து முன்னேறும் நேர்மையானவர்..
40 நாட்கள் விரதம் இருக்கும் வேலையில் மட்டும் எந்த பிரச்சினைக்கும் செல்லாதவர்..
இப்படியான சூழ்நிலையில் ஒரு பிரச்சனையில் வில்லனின் மகனை அடித்து விடுகிறார்.. சில தினங்களில் அந்த மகனும் யாரோ ஒருவரால் கொல்லப்படுகிறார்..
ஆனால் ரவி தேஜா மீது கொலைபழி விழுகிறது… எனவே ரவிதேஜா மாலை போடும் சபரிமலைக்கு நாளுக்காக காத்திருக்கிறது வில்லன் டீம்.. அவரைக் கொன்று தன் பழியை தீர்த்துக் கொள்ள வில்லன் காத்திருக்கிறார்..
அதன் பிறகு என்ன நடந்தது.? ரவிதேஜா என்ன செய்தார் என்பதெல்லாம் அதிரடியான திரைக்கதை..

கேரக்டர்ஸ்…
Ravi Teja – Lead role
Priya Bhavani Shankar – Female lead
Sai Kumar – Important role
Baby Nakshathra – Ravi Teja’s daughter
Ajay Ghosh – Supporting role
Ramesh Indira – Supporting role
Swasika – Supporting role
தெலுங்கு நடிகர் ரவி தேஜா படங்கள் என்றாலே ஆக்ஷன்க்கு பஞ்சம் இருக்காது.. இதில் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளை கொடுத்து தெறிக்கவிட்டுள்ளார்.. சபரிமலைக்கு மாலை போட்டு அவர் போடும் ஆட்டங்கள் ரசிக்க வைக்கிறது.. அது மட்டும் இல்லாமல் மகள் & மகளிர் மீது காட்டும் பாசத்தில் தாராள நடிப்பை கொடுத்திருக்கிறார்..
நாயகி ப்ரியா பவானிக்கு பெரிய வேலை இல்லை என்றாலும் அழகான இல்லத்தரசியாக வருகிறார்… கணவன் இல்லை என்றால் குடும்பம் என்னாகும் என்று கேட்கும் காட்சிகளில் அனுதாபத்தை அள்ளிக் கொள்கிறார். மகளை இழந்த பிறகு பிரியா கதறும் காட்சி நம்மையும் அழ வைக்கிறார்..
அஜய் கோஸ்.. ரமேஷ் இந்திரா உள்ளிட்டோரின் நடிப்பு மிரட்டல்.. எதிர்பாராத கேரக்டரில் சாய் குமார்.. ரவி தேஜாவின் மகளாக நடித்த நட்சத்திராவும் சின்ன சின்ன கியூட் எக்ஸ்பிரஷன் மூலம் கவர்ந்திருக்கிறார்.. தைரிய சிறுமியாக சிறப்பான நடிப்பு..
சமீபத்தில் வெளியான லப்பர் பந்து & நூறு சாமி உள்ளிட்ட படங்களில் நம்மை கவர்ந்த சுவாசிக்கா இதில் அதிரடி வில்லி.. மிரட்டலான நடிப்பை கொடுத்திருகிறார்.
சபரிமலைக்கு மாலை போடும் குருசாமி ஒருவர் மனசாட்சி இல்லாமல் நடந்து கொள்வது ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை..

டெக்னீசியன்ஸ்…
Director: Shiva Nirvana
Producers: Naveen Yerneni, Y. Ravi Shankar
Music Director: G. V. Prakash Kumar
Cinematography: Vishnu Sarma
Editor : Prawin Pudi
Art Direction: Bhargava Noundla
Action Choreographers: Ram-Lakshman, Real Satheesh
Choreographers: Baba Baskar, V. J. Shekar
Costume Designer: Rajesh Kamarsu
Makeup: I. Srinivasa Raju
சுவாமியே சரணம் ஐயப்பா.. பள்ளிக்கட்டு சபரிமலைக்கு.. கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை.. இருமுடி கட்டு.. ஐயப்பன் சன்னிதானத்திற்கு கொண்டு செல்லும் இசையை கொடுத்திருக்கிறார் ஜிவி பிரகாஷ்.. ஆக்சன் காட்சிகளிலும் இசையில் மிரட்டி இருக்கிறார்..
ஒளிப்பதிவும் படத்தொகுப்பம் கச்சிதம்.. சுவாசிக்கா வீடு அதற்கு ஏற்ப லைட்டிங் என கலை இயக்குனரும் தன் பங்களிப்பை சரியாக கொடுத்திருக்கிறார்..
வழக்கம்போல கமர்சியல் தெலுங்கு சினிமா போல அல்லாமல் குடும்ப செண்டிமெண்ட்… மகள் பாசம்.. ஆன்மீகம்… பாலியல் தொல்லை… அரசியல்வாதிகளின் சூழ்ச்சி என அனைத்தையும் கலந்து ஒரு தரமான ஆக்ஷன் விருந்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் சிவா நிர்வானா..
Irumudi Kattu movie review

