ஷாலினி தயாரிப்பில் அஜித் நடிக்கும் ‘டேர் டெவில்’..; ₹ 160 கோடி வியாபாரம்
ஷாலினி தயாரிப்பில் அஜித் நடிக்கும் ‘டேர் டெவில்’..; ₹ 160 கோடி வியாபாரம்
தமிழ் சினிமாவில் இரு பெரும் போட்டியாளராக கருதப்படுபவர்கள் விஜய் – அஜித்..
இதில் விஜய் ‘ஜனநாயகன்’ திரைப்படம் தனது கடைசி படம் அறிவித்துவிட்டு தற்போது தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று தமிழகத்தில் முதலமைச்சர் ஆகிவிட்டார்.. ‘ஜனநாயகன்’ திரைப்படமும் கடந்த ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகி இதுவரை ₹ 300 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது..
நடிகர் அஜித்தின் திரைப்படம் குட் பேட் அட்லி திரைக்கு வந்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் கடந்து விட்டது.. தற்போது அவர் கார் ரேஸ் போட்டிகளில் பிஸியாக இருக்கிறார்..
இந்த நிலையில் சமீபத்தில் அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு வெளியானது.. இந்த படத்தை அஜித்தின் மனைவியும் முன்னாள் நடிகியுமான ஷாலினி தயாரிக்கிறார்.
இந்த படத்திற்கு டேஷ் டெவில் DARE DEVIL என என பெயர் வைக்கப்பட்டுள்ளது.. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க அனிருத் இசை அமைக்கிறார்..
பெரும்பாலும் அஜித் விஜய் படங்கள் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போது கூட தலைப்பு அறிவிக்கப்படாது.. ஆனால் இந்த முறை ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே அஜித் தன் பட டைட்டிலை அறிவித்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது..

இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கப்படாத நிலையில் இந்த படத்தின் வியாபாரம் ₹ 160+ கோடியை தாண்டி உள்ளதாக தெரிவிக்கிறது.. சாட்டிலைட் உரிமம் ஓடிடி உரிமம் ஆகியவை தற்போதே விற்பனையாகி விட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
Ajith new movie Dare Devil business updates

