DC விமர்சனம்… கல்விக்காக காவலருக்கு எதிராக GUN எடுத்த ஹீரோ லோகேஷ்
DC விமர்சனம்… கல்விக்காக காவலருக்கு எதிராக GUN எடுத்த ஹீரோ லோகேஷ்
ஸ்டோரி…
தன் மகனின் படிப்புக்காக தன் நிலம் சொத்துக்களை விற்று ₹7 லட்ச திரட்டி வருகிறார் தந்தை.. அப்போது அவரை வழியில் பார்க்கும் போலீஸ்காரர்கள் உதவி கேட்பது போல் அழைத்து பணத்திற்காக தந்தையை கொன்று விடுகின்றனர்..
மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் காவலரிடம் செல்லலாம்.. ஆனால் காவலரே களவாணி ஆகிவிட்டால் என்ன செய்வது.? அந்த குடும்பம் ரவுடி லோகேஷ் கனகராஜ் உதவியை நாடுகின்றனர்..
அதன் பிறகு லோகேஷ் என்ன செய்தார்.? ₹ 7 லட்சம் திரட்டி அந்த சிறுவனின் கல்விக்காக உதவினாரா? அந்த போலீஸ்காரிடமிருந்து இவர் அபகரித்துக் கொண்டாரா.? என்ன நடந்தது என்பதெல்லாம் வன்முறை நிறைந்த திரைக்கதை..

கேரக்டர்ஸ்…
• லோகேஷ் கனகராஜ் – தேவதாஸ்
• வாமிகா கபி – சந்திரா
• சஞ்சனா ஏ.கே. – பார்வதி
• கஸ்தூரி ராஜா – மோட்டார் மணி
• தலைவாசல் விஜய் – அரசு
• கிரிஷ் தயால் – போஜ்ராஜ்
• அவினாஷ் ரகுதேவன் – கிட்டி
• ஜவஹர் சக்தி – கருப்பன்
• ஷரத் ரவி – சுன்னிலால்
• பிரணவ் தியோஃபைன் – செபாஸ்டியன்
• ஏ. ராஜரிஷி – சிங்காரம்
• பாலாஜி தேவிபிரசாத் – அஷ்ரப்
• அட்டுல் – ராஜரிஷி
• மனோஜ் சஷி – மனோஜ்
• கலையரசன் ஆர். – ராஜா மாணிக்கம்
• ஃபிராங்க்ளின் ஜேக்கப் – ஃபிராங்கி
• திலீபன் கே. – திலீப்
• கர்ணா ராஜா – டிஜிபி
ரஜினி கமல் விஜய் கார்த்தி உள்ளிட்ட நட்சத்திரங்களுக்கு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இந்த டிசி படத்தின் மூலம் ஹீரோவாக அவதரித்துள்ளார்… இவரது கேரக்டர் பெயர் தான் தேவதாஸ் நாயகியின் கேரக்டர் பெயர் சந்திரா இந்த இரண்டு பெயர்களின் முதல் எழுத்து ஆங்கிலத்தில் டிசி.
ஹீரோ என்றாலும் அலட்டிக் கொள்ளாத நடிப்பு எந்த பில்டப்பும் இல்லாத மாஸ் காட்சிகள் எதார்த்தமாக அழுக்கு சட்டையுடன் தேவதாஸ் கேரக்டருக்கு இதுதான் தேவை என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார் லோகேஷ்… படத்தில் வன்முறை எந்த அளவு நிறைந்து இருக்கிறதோ அந்த அளவு கெட்ட வார்த்தைகளும் காது கூசும் அளவுக்கு நிறைந்திருக்கிறது.. அதை எல்லாம் தவிர்த்து இருக்கலாம்..
கொஞ்ச நேரமே வந்தாலும் சஞ்சனா நம் மனங்களை சஞ்சலம் செய்கிறார்.. அழகான நடிப்பில் கவர்கிறார்..
மெயின் ஹீரோயினாக வாமிகா கபி.. தன் கருப்பையை 16 வயதிலேயே எடுத்துவிட்டு விபச்சாரத்தில் தன்னை ஈடுபட வைத்தவனை அவர் கொலை செய்து விட்டு அழும் காட்சி வாமிகாவின் நடிப்புக்கு வாவ் என்று சொல்லலாம்..

லோகேஷன் தந்தையாக கஸ்தூரிராஜா கொஞ்சம் காட்சியில் வந்தாலும் அவரும் மோட்டார் மணியாக எதார்த்தமாகவே கேரக்டரை வெளிப்படுத்தி இருக்கிறார்..
லோகேஷன் நண்பர்களாக வரும் கிட்டி செபாஸ்டின் கருப்பு உள்ளிட்ட அனைவரும் நண்பர்களாக நடிப்பில் ஜொலிக்கின்றனர்..
லோகேஷை துரத்தும் காவல் அதிகாரிகள் அனைவருமே நடிப்பில் கம்பீரம் காட்டி இருக்கின்றனர்.. படத்தில் ஓரிடங்களில் மட்டுமே காமெடி எட்டிப் பார்க்கிறது.. எப்போதும் ஒரு போலீஸ்காரர் ஸ்பீக்கர் போனில் பேசிக் கொண்டிருக்க… மற்றொரு போலீஸ்… போன் ரிப்பேர் பண்ண இல்ல.. உன் குடும்பத்தை ரிப்பேர் பண்ணு என்று சொல்லும் காட்சி எதார்த்தம்..
சரத் ரவி அவரது பெயரும் அவரது கேரக்டரும் சீரியஸ் படத்திற்கு காமெடிக்கு உதவுகிறது..
டெக்னீசியன்ஸ்…
• இயக்கம்: அருண் மாதேஸ்வரன்
• தயாரிப்பு: சன் பிக்சர்ஸ்
• இசை: அனிருத்
• ஒளிப்பதிவு: முகேஷ் ஜி
• படத்தொகுப்பு: ஜி. கே. பிரசன்னா
• சண்டைப் பயிற்சி: பி.சி. ஸ்டண்ட்ஸ்
• ஆடை வடிவமைப்பு: அருண் மாதேஸ்வரன்
• ஆடை அலங்காரம்: பெருமாள் செல்வம்
• மக்கள் தொடர்பு (PRO): ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்

முகேஷ் ஒளிப்பதிவு செய்ய பிரசன்னா எடிட்டிங் செய்து இருக்கிறார்.. கேமராவில் ரத்தம் தெறிக்கும் அளவிற்கு பல லென்ஸ் மாத்தி இருப்பாரோ என்று கேட்கத் தோன்றுகிறது.. ஆனாலும் அதற்கு ஏற்ப லைட்டிங் காட்சிகளை ரசிக்க வைக்கிறார்..
படத்திற்கு மிகப்பெரிய பலம் அனிருத்தின் பின்னணி இசை.. தன்னுடைய பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்..
லோகேஷ் ஹீரோவாக நடித்திருக்கிறார் அவருக்கு அழகான டூயட் கொஞ்சம் ரொமான்ஸ் வைத்திருக்கலாம் அருண் மாதேஸ்வரன்.. வழக்கமான பழி வாங்கல் கதைதான் ஒருவரை ஒருவர் வெட்டி கொலை செய்ய எங்கெங்கும் துப்பாக்கி சத்தம் மட்டுமே எதிரொலிக்கிறது.. அதில் தென்றல் போல சஞ்சனா மற்றும் வாமிகாவின் அழகு காட்சிகள் ஆறுதல்..
பணத்திற்காக கொலை செய்துவிட்ட போலீஸ்காரரை பழிவாங்கி அதன் மூலம் கல்விக்கு உதவும் ஒரு நாயகன் என்ற ஒன்லைனை வைத்து படம் முழுக்க சேசிங் செய்ய வைத்திருக்கிறார் இயக்குனர் அருள் மாதேஸ்வரன்..
Lokesh in DC movie review

