எங்கள் தங்கம் விமர்சனம் (தெலுங்கில் ’மா இன்டி பங்காரம்) ஆக்சன் குயின் சமந்தா
எங்கள் தங்கம் விமர்சனம் (தெலுங்கில் ’மா இன்டி பங்காரம்) ஆக்சன் குயின் சமந்தா
ஸ்டோரி…
தெலுங்கில் உருவான ’மா இன்டி பங்காரம்’… சமந்தா தயாரித்துள்ள இப்படத்தை தமிழில் ‘எங்கள் தங்கம்’ எனப் பெயரிட்டு வெளியிட்டுள்ளனர்.. நந்தினி என்பவர் இயக்கியுள்ளார்..
தன் கணவரின் தங்கை திருமணத்திற்காக அவரின் சொந்த கிராமத்திற்கு செல்கிறார் சமந்தா.. கதையில் இவரது கேரக்டர் பெயர் ஸ்வர்ணா.) காதலித்து திருமணம் செய்ததால் கணவரின் தந்தையும் இவர்களை கண்டு கொள்ளவில்லை..
ஒரு கட்டுக்கோப்பான பாரம்பரியமிக்க குடும்பத்தில் தன்னை பொருத்திக் கொள்ள கஷ்டப்படுகிறார்.. துளசி செடிக்கு பூஜை செய்வது மந்திரம் சொல்வது கிராமத்து மண்வாசனை மிகுந்த சமையல் செய்வது இப்படி எதுவும் தெரியாமல் சமந்தா தவிக்கிறார்..
ஒரு கட்டத்தில் இவரை தேடி வில்லன் கும்பல் வருகிறது.. நீ ஜான்சி தானே என்று கேள்வி மேல் கேட்கின்றனர்..
உண்மையில் சமந்தா யார்.? இவரை வில்லன் கும்பல் துரத்த காரணம் என்ன? இவருக்கும் அந்த கும்பலுக்கும் இதற்கு முன்பு என்ன பகை இருந்தது.? சமந்தாவின் பின்னணி என்ன.? நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள்ள விரும்பும் சமந்தா வில்லனை எப்படி சமாளித்தார்.? கணவர் வீட்டுக்கு இவரின் ரகசியம் தெரிந்ததா.? இவர் ஜான்சி என்றால் சொர்ணா என்ற பெயரில் இங்கே நுழைந்ததன் காரணம் என்ன? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
ஹீரோ உடன் பாட்டு கொஞ்ச ரொமான்ஸ் கதைக்கு தேவையான கேரக்டர் என இது வரை நாம் கண்ட சமந்தா இந்த படத்தில் முழுக்க முழுக்க கதையின் நாயகியாக ஆக்க்ஷன் ராணியாக மாறி இருக்கிறார்..
அவரின் சொந்த படம் என்பதால் ஆக்ஷனிலும் அதிரடி கிளப்பியிருக்கிறார் சமீபத்தில் அவர் சொன்னது போலவே டான்ஸ் விட ஆக்ஷனில் அதிரடி கிளப்பியிருக்கிறார்..
குடும்பப்பாங்கான கேரக்டருக்கு தன்னை பொறுத்திக் கொண்டது போல ஆக்ஷனிலும் அவதாரம் எடுத்திருக்கிறார்.. அதுவும் சேலை கட்டிக்கொண்டு ஃபைட் போடுவது சிரமம் என்றாலும் அதனை சமந்தா சரியாக செய்து சபாஷ் பெறுகிறார்..
இளைய மருமகளிடம் செல்ல சண்டை தோழியுடன் நட்பு சண்டை.. வில்லனிடம் அதிரடி சண்டை என அனைத்திலும் ஸ்கோர் செய்து இருக்கிறார்..
உனக்கு இருக்கும் பிரச்சனைக்காக நாங்கள் ஏன் கொல்லப்பட வேண்டும் என குடும்பத்தில் ஒருவர் கேட்க நான் அரசியலில் இருப்பதால் உங்களால் குடும்பத்திற்கு பிரச்சனை என்று யாரும் என்னிடம் கேட்கவில்லையே… என்ற மாமனார் ஆனந்த் சொல்லும் போது தியேட்டரில் கைத்தட்டலை கேட்க முடிகிறது..
சமந்தாவின் கணவராக திகந்த் மஞ்சாலே, மாமியாராக நடித்திருக்கும் கெளதமி, மாமனராக ஆனந்த், பாட்டியாக ஸ்ரீ லக்ஷ்மி, தோழியாக மன்ஜூஷா, கொழுந்தனாக சைதன்ய கிருஷ்ணா, கணவரின் தம்பி மனைவியாக நடித்திருக்கும் ஸ்ரீமுகி அனைவரும் கதைக்கு தங்கள் பங்களிப்பை சரியாக கொடுத்துள்ளனர்.. முக்கியமாக சமந்தா தோழி கேரக்டர் செம காமெடி
நாயகி சமந்தா.. இவரின் மாமனார் ஆனந்த் மாமியார் கௌதமி உள்ளிட்டோரே தெரிந்த முகங்கள்.. பெரும்பாலும் பெரிய அறிமுகம் இல்லாத தெலுங்கு நடிகர்களை ஆக்கிரமித்துள்ளனர்..

டெக்னீசியன்ஸ்…
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.. பாடல்கள் விட பின்னண இசை பட்டையை கிளப்பி இருக்கிறது.. முக்கியமாக சமத்தா அடித்து தூள் கிளப்பும்போது ஒரு படி மேலே இசையை தெறிக்க விட்டுள்ளார்..
இந்தியாவின் பிரபல ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. காட்சிகள் அனைத்தும் அருமை.. முக்கியமாக குடும்ப காட்சிகள் அதற்கான சூழல் அனைத்தும் கலர்ஃபுல்..
இயக்குநர் பி.வி.நந்தினி ரெட்டி.. பெண்களுக்கு பிடித்த ஃபேமிலி சமாச்சாரங்கள் அத்துடன் ஆண்களுக்கு பிடித்த ஆக்சன் என இரண்டையும் கலந்து இந்த எங்கள் தங்கத்தை ஜொலிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் நந்தினி.
ஆனால் இடைவேளைக்கு முன்பு வரை இருந்த விறுவிறுப்பு இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் சறுக்கல்தான்..
முக்கியமாக வில்லன் குல்ஷன் தேவய்யா கேரக்டர் இன்னும் வலு சேர்த்திருக்கலாம்.. குல்சன் கேரக்டர் தேவையா என்ற சொல்லும் அளவில் உள்ளது..
Engal Thangam movie review

