என் பொம்மைக்கு நன்றி.. மக்களை கஷ்டப்படுத்த கூடாது.. அதான் சக்ஸஸ் ஃபார்முலா.. – குஷ்பூ

என் பொம்மைக்கு நன்றி.. மக்களை கஷ்டப்படுத்த கூடாது.. அதான் சக்ஸஸ் ஃபார்முலா.. – குஷ்பூ

 

என் பொம்மைக்கு நன்றி.. மக்களை கஷ்டப்படுத்த கூடாது.. அதான் சக்ஸஸ் ஃபார்முலா.. – குஷ்பூ

 

 

அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா, வினோத் கிஷன், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘டபுள் ஆக்குபன்சி’.

இப்படத்தை நடிகை குஷ்புவின் அவ்னி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப் படத்தின் தயாரிப்பாளராக குஷ்புவின் இளைய மகள் அவந்திகா பணியாற்றியுள்ளார்.

திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் வெற்றியை கொண்டாடும் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடைபெற்றது..

இதில் படக்குழுவினருடன் நடிகை குஷ்புவும் கலந்து கொண்டு பேசினார்..

அப்போது தனது இரண்டு மகள்கள் பற்றி உருக்கமாக பேசினார் குஷ்பூ..

‘வீட்டை கட்டிப்பார்… கல்யாணம் பண்ணிப்பார்’ என்று பெரியவர்கள் சொன்னதை இப்போது நினைத்து பார்க்கிறேன்.. அவர்கள் சொன்னதில் அர்த்தம் உள்ளது அவர்கள் சும்மா சொல்லவில்லை..

சில நாட்களாக நான் சரியாக தூங்கவில்லை… என் மூத்த மகளின் திருமண வேலைகளில் பிசியாக இருக்கிறேன். அதே நேரத்தில், என் கணவர் சுந்தர்.சி தனது புருஷன் திரைப்படப் பணிகளையும், திருமண ஏற்பாடுகளையும் கவனித்து வருகிறார்..

என் இளைய மகள் அவந்திகா ‘டபுள் ஆக்குபன்சி’ படத்திற்காக கடினமாக உழைத்துள்ளார்..

நான் எப்போதும் ‘பொம்மை’ என்றுதான் அழைப்பேன். அவளுக்கு என் வாழ்த்துகள். ஒரு சிறிய திரைப்படம் இவ்வளவு பெரிய வரவேற்பைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி..

மக்கள் கஷ்டப்படுறாங்க.. அவர்கள் இரண்டு மணி நேரம் படத்திற்கு வரும்போது அவர்களை இன்னும் கஷ்டப்படுத்த கூடாது… அவர்களை சந்தோஷமாக படம் பார்க்க வைத்து வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.. என் கணவர் சுந்தர் எப்போதும் இதை தான் சொல்வார்… அதைத்தான் நாங்கள் படம் தயாரிக்கும் பொழுது கவனித்து செய்து வருகிறோம்.. அதுதான் எங்கள் தயாரிப்பு குழுவில் ஃபார்முலா.”..

இவ்வாறு படக்குழுவினரை வாழ்த்தி மீடியாவுக்கு நன்றி சொல்லி முடித்தார் குஷ்பூ..

 

 

Khushboo emotional speech at Double Occupancy success meet