ஆட்டி விமர்சனம்… பெண் விடுதலைப் பேசும் சிங்கப்பெண்கள்
ஆட்டி விமர்சனம்… பெண் விடுதலைப் பேசும் சிங்கப்பெண்கள்
ஸ்டோரி…
1970 காலகட்டங்களில் கதை தொடங்குகிறது.. ஓர் அடர்ந்த காட்டுப் பகுதியில் இருக்கும் காவல் நிலையத்திற்கு மாற்றலாகி வருகிறார் இசக்கி கார்வண்ணன்.. இவர் ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்.. அங்கு குற்றங்களே நடைபெறவில்லை என்பதால் வழக்குகள் எதுவும் இல்லை.. ஆனால் தினம் ஒரு வழக்கு வேண்டும் என கட்டளையிடுகிறார் இன்ஸ்பெக்டர்.
அந்த சமயத்தில் அங்கு ஒரு வழக்கு வருகிறது.. அந்த காட்டுப் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு பாடம் நடத்த வந்த எம்எல்ஏவின் தம்பியும் ஆசிரியருமான பிரவீன் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்..
ஒரு ஆசிரியரை கொல்ல என்ன காரணம்.? அவர்களின் நோக்கம் என்ன.? இதுவரை வழக்கு இல்லாத அந்த இடத்தில் எப்படி கொலை நடந்தது? என்பதையெல்லாம் விசாரிக்கிறார் இசக்கி. அதன் பிறகு நடந்தது என்ன என்பதே மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணனே காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்துள்ளார்.. கடுமையான அதிகாரியாக எப்பவும் சீரியஸ் ஆக காணப்படுகிறார்.. வசனங்கள் உச்சரிப்பில் சபாஷ் பெறுகிறார்.. கான்ஸ்டபிள் இருக்கும்போது இவரே ஜீப் வண்டி ஓட்டுவது ஏன்..??
‘அயலி’ புகழ் அபி நட்சத்திரா நாயகி.. நாயகன் இருந்தாலும் நாயகிக்கு பெரிய காதல் காட்சிகள் இல்லை.. பள்ளிக்கூடம் போகாத சிறுவர்களுக்கு பாடம் நடத்துகிறார்.. ஆனால் இவர் எங்கு படித்தார் என்பதற்கான விளக்க காட்சிகள் இல்லை
Esakki Karvannan – Amaithi Raj
Abi Nakshathra – Azhagu
Kadhal Sukumar – Vidiyal (Constable)
Soundar – Esakki (Postman)
Selvakumar – Kuppusamy (Constable)
Praveen Palanisamy – Selvam (Teacher)
Karan Chakravarthy – Sangili
Alan Kirshna – Vanaga mudi
Sidhu kumaresan – Kaali
Anand Soundarajan – Kadamban
Nesan – Killers Gang Informar
Kuyili Nachiyaar – Maruthuvachi (Killers Gang leader)
Udhaya Sumathi – Killers Gang
Nila – Killers Gang
Sumithra devi – Killers Gang
Ashika – Killers Gang

சீரியஸான இந்த படத்தில் காதல் சுகுமாரின் காமெடி ரசிக்க வைக்கிறது.. வேலைக்கு வந்த ஆசிரியர் நான்கு நாளில் இறந்து போக.. நான்கு நாளில் ஏன் அவசரப்பட்டு இறந்து போன.. என்ற இவரது வசனம் சிரிக்க வைக்கிறது
சௌந்தர், பிரவீன் பழனிச்சாமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.. பிரவீன் பழனிச்சாமியின் வில்லத்தனமும் அவரது கெட்டப்பும் ரசிக்க வைக்கிறது..
டெக்னீசியன்ஸ்…
Screenplay: Thirumurugan
Editor: C.M Elangovan
Cinematography: Sibi Sadhasivam
Art Director: Mujibur Rahman
Music:Theeson
Stunt: Suresh
Makeup: Abdul
PRO: A. John

தீசன் என்பவர் இசையமைத்திருக்கிறார்.. பின்னணி இசை மிரள வைக்கிறது.. மேக்கப் பணிகளை அப்துல் செய்திருக்கிறார் 1970 காலகட்டங்களில் மலைவாழ் மக்களின் உடைகள் அவர்களின் அலங்காரம் உடை அலங்காரம் அழகாக வடிவமைத்து இருக்கிறார்..
கலைப் பணிகளை முஜிபுர் ரஹ்மான் செய்திருக்கிறார்.. சிபி சதாசிவம் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் மலைவாழ் மக்கள் அவர்கள் வசிக்கும் வீடுகள்.. அந்த சுற்றியுள்ள பகுதிகளை அழகாக கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்..
கிட்டு என்பவர் இயக்கியுள்ளார்.. தமிழ் சமூகத்தில் பெண்களே முதலானவர்கள் எனவே தான் பெண்கள் வழிபடும் முறைகள் நூறாண்டுகளுக்கு முன்பு இருந்து ஆண்களை காட்டிலும் அவர்கள் வீரமிக்கவர்கள்..
அடிமைத்தனத்திலிருந்து பெண்கள் மீண்டது இப்பபோது இல்லை.. அதை 100 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களே செய்துள்ளனர்.. பெண்களை அவர்களே தற்காத்துக் கொண்டுள்ளனர்.. அவர்களுக்கு என்று புரட்சி படை இருந்தது.. அதற்கான பயிற்சி முறையும் அவர்கள் கற்றுக் கொண்டனர் என காட்சியாக விளக்கி உள்ளனர்..
ஆட்டி படத்தின் இரண்டாம் பாகம் தொடரும் என்பதால் என்னவோ இந்த படத்தில் கிளைமாக்ஸ் இல் ஒரு தெளிவான விளக்கம் எதுவும் இல்லை..
Aatti movie review

