Double Occupancy விமர்சனம்… பகலில் பெண்.. இரவில் ஆண்.; ரஜினியின் ரணகளம்

Double Occupancy விமர்சனம்… பகலில் பெண்.. இரவில் ஆண்.; ரஜினியின் ரணகளம்

Double Occupancy விமர்சனம்… பகலில் பெண்.. இரவில் ஆண்.; ரஜினியின் ரணகளம்

 

ஸ்டோரி…

வித்தியாசமான திரைக்கதையில் லாஜிக் பார்க்காமல் ஜாலியான படம் டபுள் ஆக்குபன்சி..

போஸ் வெங்கட் மற்றும் வினோதினி தம்பதிகள்.. இவர்களுக்கு 15 வருடங்களாக குழந்தை இல்லை.. கடவுளை நம்பினால் உனக்கு குழந்தை பாக்கியம் உண்டு என்கின்றனர்.. ஒரு கட்டத்தில் கடவுளை நம்புகிறார் போஸ் வெங்கட்.. ஆண் குழந்தை பிறக்கிறது.. ஆனால் பிறந்த சில நிமிடங்களில் பேச்சு மூச்சும் இல்லாமல் இருக்கிறது..

இதனால் அர்த்தநாரீஸ்வரர் இடம் முறையிடுகிறார் போஸ் வெங்கட் அப்பொழுது திடீரென ஒரு மாயம் உண்டாகிறது.. திடீரென அந்த ஆண் குழந்தை பெண் குழந்தையாக மாறுகிறது.

அதாவது ஒரே குழந்தை மாலை 6 முதல் காலை 6 வரை வரை ஆண் குழந்தையாகவும் காலை 6 முதல் மாலை 6 வரை பெண் குழந்தையாகவும் இருக்கிறது.. ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி பிறந்த குழந்தைக்கு ரஜினி என்று பெயர் வைக்கின்றனர்..

ஒரு கட்டத்தில் ஒரு விபத்தில் தம்பதிகள் இறந்து விடுகின்றனர்.. அதன் பின்னர் அந்தக் குழந்தை வளர்ந்தது எப்படி.? அந்த குழந்தைக்கு இருக்கும் பிரச்சனை வெளியே தெரிந்ததா? அவர் எப்படி சமாளித்தார்.. என்பதெல்லாம் சுவாரஸ்யமான திரைக்கதை..

கேரக்டர்ஸ்…

Santhosh, Reshma Venkatesh, Samyuktha Viswanathan, Vinoth Kishan and VTV Ganesh…

12 மணி நேரம் ஆணாக இருக்கும் போது சந்தோஷ் நடித்திருக்கிறார்.. 12 மணி நேரம் பெண்ணாக இருக்கும் போது ரேஷ்மா நடித்திருக்கிறார்..

ரேஷ்மாவை காதலிக்கிறார் வினோத் கிஷன். சந்தோஷை காதலிக்கிறார் சம்யுக்தா.. காதலை ஏற்றுக் கொண்டாலும் வெளியே சொல்ல முடியாமல் ரஜினி தவிக்கிறார்.. இந்த நால்வருக்குள் சுற்றி நடக்கும் கதை தான் படம் முழுவதும்.. இதை கலகலப்பாக கொண்டு சென்றதில் இயக்குனர் அஸ்வின் கந்தசாமி ஜெயித்திருக்கிறார்

காதலை சொல்ல முடியாமல் கண்களில் பரிதவிப்பை காட்டியிருக்கிறார் ரேஷ்மா.. சின்ன சின்ன க்யூட் எக்ஸ்பிரஷன் மூலம் மனம் முழுவதும் நிறைந்திருக்கிறார்..

சந்தோஷ்க்கு நாயகனாக இது முதல் படம் என்றாலும் மெச்சூரிட்டியான நடிப்பை கொடுத்திருக்கிறார்..

டெக்னீசியன்ஸ்…

Director: Aswin Kandasamy
Producers: ACS Arun Kumar (Benzz Media) and Khushbu Sundar (Avni Movies)

Creative Producer: Anandita Sundar
Music: Sam CS
DOP: Santhakumar Chakravarthy
Editor: Praveen Antony
Costume Designer: Sruthi R. Kannan
Pro: Riaz K Ahmed


சாந்தகுமார் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.. படம் தொடங்கியது முதல் கிளைமாக்ஸ் வரை தன் கலர்புல் ஒளிப்பதிவு மூலம் நம்மை படத்துடன் ஒன்றை வைத்து விட்டார்.. ஆண் பெண் மாறும்போது காட்டப்படும் கிராபிக்ஸ் காட்சியும் ரசிக்க வைக்கிறது..

சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார் பின்னணி இசையில் வழக்கம்போல நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்.. பாடல்களிலும் பட்டைய கிளப்பி இருக்கிறார்.. முக்கியமாக..

மின்னல் அடிக்குதே.. மின்னல் அடிக்குதே.. பெண்ணே உன்னை கண்டதுமே நெஞ்சம் வெடிக்குதடி.. என்ற பாடல் காதலர்களை கவர்ந்து இழுக்கும்.

உயிரே. உயிரே.. அழகே… அழகே.. பாடல் கவர்ச்சி மழை… என்று சொல்லலாம்.. சம்யுத்தா சந்தோஷ் செம ரொமான்டிக் கெமிஸ்ட்ரி..

கிளைமாக்ஸ் காட்சி வரும் மாயோனே.. நீ மறுபடி வந்தது ஏனோ… என்ற பாடல் இதமான மெலோடி..

12 மணி நேர ஆண் / 12 மணி நேர பெண்..
நம்ப முடியாத லாஜிக்.. ஆனால் இப்படி நடந்தால் எப்படி இருக்கும் என நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத விஷயத்தை கண்முன் நிறுத்தி இருக்கிறார் இயக்குனர் அஸ்வின் கந்தசாமி..

நாம் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் வாழ்கிறோம்.. ஆனால் அதில் 12 மணி நேர ஆண் / 12 மணி நேர பெண் என்று வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்பதை சுவாரசியமான திரைக்கதை மூலம் ஜாலியாக சொல்லியிருக்கிறார் அஸ்வின்..

 

Double Occupancy movie review