சாருகேசி விமர்சனம்..; சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் இளையராஜாவுக்கு வீரா..; ரஹ்மானுக்கு சங்கமம்..; தேவாவுக்கு சாருகேசி

சாருகேசி விமர்சனம்..; சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் இளையராஜாவுக்கு வீரா..; ரஹ்மானுக்கு சங்கமம்..; தேவாவுக்கு சாருகேசி

சாருகேசி விமர்சனம்..; சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் இளையராஜாவுக்கு வீரா..; ரஹ்மானுக்கு சங்கமம்..; தேவாவுக்கு சாருகேசி

 

ஸ்டோரி…

ஒய் ஜி மகேந்திரன் மாபெரும் இசை மேதை.. இவரது பெயர் சாருகேசி.. இவரது மனைவி சுஹாசினி.. இவர்களது மகன் ராஜ் ஐயப்பா.. எங்கு சென்றாலும் தன் தந்தையின் பெயரே தனக்கு அடையாளமாக இருப்பதால் தந்தையை வெறுக்கிறார்.. ஒரு கட்டத்தில் தன் இசைக் குழுவில் பாட வந்த ரம்யா பாண்டியனை காதலித்து மணக்கிறார்.

இந்த சூழ்நிலையில் ராஜ் ஐயப்பாவுக்கு கூட தெரியாத ஒரு ரகசியத்தை சொல்லி ஒய் ஜி மகேந்திரனை மிரட்டுகிறார் ரம்யா.. இதனால் தான் சேர்த்து வைத்த பேர் புகழ் எல்லாம் போய்விடுமோ என்று அச்சப்படுகிறார்..

அப்படி என்ன ரகசியம் ரம்யாவுக்கு தெரிந்தது.? ரம்யாவின் மிரட்டலுக்கு பயந்து ஒய் ஜி மகேந்திரன் என்ன செய்தார்.? இந்தப் பிரச்சினையில் இருந்து ஒய் ஜி மகேந்திரன் மீண்டு வர ராகதேவன் சத்யராஜ் என்ன செய்தார்.? என்பதுதான் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

சாருகேசி கேரக்டருக்கு சரியான பொருத்தமான நபர் ஒய் ஜி மகேந்திரன்.. இசையை நேசிக்கும் கலைஞராக வாழ்ந்திருக்கிறார்.. சாருகேசி கேரக்டருக்கு உயிர் கொடுத்து இருக்கிறார்..

அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் மறக்கும் காட்சிகளில் அனுதாபத்தை அள்ளிக் கொள்கிறார்..

கணவனுக்கு கட்டுப்பட்ட பெண்மணியாக சுஹாசினி.. தன்னை மறந்த கணவனை நினைத்து கண்கலங்கும் காட்சியில் அருமை..

ராஜ் ஐயப்பா மற்றும் ரம்யா பாண்டியன் இருவரும் சிறப்பான தேர்வு.. மாமனார் மாமியாரை மிரட்டும் காட்சியில் ரம்யா ரணகளம் செய்திருக்கிறார்..

தந்தையை மதிக்காத மகனாக ராஜ் ஐயப்பா.. இன்றைய தலைமுறை புள்ளிங்கோ நினைவுப்படுத்துகிறார்..

தலைவாசல் விஜய்.. தன்னுடைய அனுபவ நடிப்பில் தலைச்சிறந்து விளங்குகிறார்.. விசுவாசி எப்படி இருப்பார் என்பதை உணர வைக்கிறார்..

ராகதேவனாக சத்யராஜ் நடித்துள்ளார்.. வாழ்க்கை தத்துவத்தை எதார்த்தத்தை ஆலோசனையாக சொல்லும் கேரக்டர்.. சமுத்திரக்கனி, மதுவந்தி, சாய் தீனா உள்ளிட்ட பலரும் சரியான பங்களிப்பு கொடுத்துள்ளனர்..

டெக்னீசியன்ஸ்…

அவள் தந்த வரம்… கலைமகள் அவள் தந்த வரம்… பாட்டு..

கிதாரே கிதாரே.. உன்னை வாசிக்கவா…. இந்தப் பாடலில் பல இசைக்கருவிகளை சொல்லி அதன் மூலம் உணர்வுகளை சொல்லி இருக்கிறார்.. பாடல்கள் & வசனங்களை கவிஞர் பா விஜய் எழுதியுள்ளார்..

வா என்றதும் வருவாய்.. தருவான் ஒரு தோழன் போல்… கிளைமாக்ஸ் பாட்டு பரவசம்…

சுரேஷ் கிருஷ்ணா தேவா கூட்டணி என்றாலே பாட்டு எப்போதும் ஹிட்டு தான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர்..

சத்யா பாட்ஷா அண்ணாமலை உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்..

இவர் ஏற்கனவே இசையை மையப்படுத்தி ஒரு சில படங்களை இயக்கியுள்ளார்.. அதில் ரஜினி நடித்த வீரா படத்திற்கு இளையராஜா இசை.. சங்கமம் படத்திற்கு ரகுமான் இசை இப்போது சாருகேசி படத்திற்கு தேவா இசை.. மூன்று இசை ஜாம்பவான்களை பயன்படுத்தி தன் இசை (படங்களுக்கு) பயணத்திற்கு மைலேஜ் கொடுத்திருக்கிறார்..

ஆனால் திரைக்கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி திருப்புமுனை ட்விஸ்ட் காட்சிகளை வைத்திருக்கலாம்.. பெரும்பாலும் டிவி சீரியல் போல இருப்பதை தவிர்த்து இருக்கலாம்.. குழப்பமாக காணப்படும் சாருகேசிக்கு மனைவியே ஆறுதல் சொல்லி இருக்கலாம்.. அதை விடுத்து ராகதேவன் (கடவுள்) சத்யராஜ் திணிக்கப்பட்டதாகவே தெரிகிறது.. நீளத்தையும் குறைத்திருக்கலாம்..

சாருகேசிக்கு நெருக்கமானவர் ரம்யாவின் தந்தை.. ஆனால் அவரது கேரக்டர் இடம் பெறவில்லை.. அட்லீஸ்ட் ஓவிய வடிவில் காட்டி இருக்கலாமே.. ஏன் என்னாச்சு..?

 

Charukesi movie review