சட்டென்று மாறுது வானிலை விமர்சனம்

சட்டென்று மாறுது வானிலை விமர்சனம்

 

சட்டென்று மாறுது வானிலை விமர்சனம்

 

ஸ்டோரி…

மீனாட்சியை பார்த்தவுடன் காதல் கொள்கிறார் ஜெய்.. ஒரு கட்டத்தில் அவரும் இவரை காதலிக்க இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்கின்றனர்..

தங்களின் தேன் நிலவுக்கு கொடைக்கானலுக்கு சென்று அங்கு கருடன் ராம் நடத்தி வரும் விடுதியில் தங்குகின்றனர்… அதன் பின்னர் ஊர் திரும்பும் இவர்கள் வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படுகிறது..

மீனாட்சியின் தந்தை அமைச்சர் அஜய் தன் மகளை இரண்டாம் தாரமாக ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார்.. இது ஒரு பக்கம் இருக்க மற்றொருபுறம் மீனாட்சியை வசதிக்காக அவளை மணக்க விரும்புகிறார் நண்பர் ஒருவர்.. இப்படியான சூழ்நிலையில் ஜெய் மீனாட்சியின் திருமண பந்தம் தொடர்ந்ததா.? காதலித்த இவர்களுக்குள் என்ன பிரச்சனை.? மீனாட்சி வேறு வாழ்க்கையில் இணைந்து கொண்டாரா.? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

ஐடி கம்பெனியில் வேலை செய்யும் ஹைடெக் இளைஞராக கவறுகிறார் ஜெய்.. காதல் செண்டிமெண்ட் ரொமான்ஸ் பதட்டம் பயம் என அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார்..

ஜெய்யுடன் காதல்.. அப்பாவுடன் கோபம்… என மீனாட்சியும் ஒரு பக்கம் நடிப்பில் கவர்ந்து விடுகிறார்..

யோகி பாபுவின் நகைச்சுவையும் சில இடங்களில் வொர்க் அவுட் ஆகி இருக்கு.. இவர் ஆதித்யா கதிரிடம் துப்பாக்கியை கொடுத்தபின் அது துப்பாக்கி இல்ல செல்போன் என்று அவர் சொல்வதும் துப்பாக்கியை நினைச்சீங்க என்று சொல்வதும் ரசிக்க வைக்கிறது..

படத்தில் ஏகப்பட்ட இடத்தில் CM விஜய்யின் (முன்னாள் நடிகர்) வசனங்கள் பளிச்சிடுகிறது..

கருடன் ராம் மற்றும் அஜய் இருவரும் வில்லத்தனத்தில் அசத்தியுள்ளனர்..

டெக்னீசியன்ஸ்…

ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் கொடைக்கானல் அழகை கண்முன்னே நிறுத்தி இருக்கிறார்..

க்ரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்திருக்கிறார்.. பாடல்கள் ஈர்க்கிறது.. பின்னணி இசை ஓகே ரகம்..

பாபு விஜய் என்பவர் இயக்கியிருக்கிறார், இவர் ஏ ஆர் முருகதாஸ் இடம் இணை இயக்குனராக பணிபுரிந்தவர்.. வழக்கமான ரொமான்ஸ் கதையாக தொடங்கி பின்னர் க்ரைம் திரில்லர் ஆக்சன் என கமர்சியல் கலந்து இருக்கிறார்..

 

Sattendru Maarudhu Vaanilai Movie review